Monday, November 30, 2015

மலேசியா வாழூர் ஜமாஅத்தின், குடும்ப தின விழா !!!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்ஷா அல்லாஹ் மலேசியா வாழூர் ஜமாஅத்தின், 
குடும்ப தின விழா, 06-12- 2015 அன்று 
மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது .


அது சமயம் இச்சிறப்பு மிகு விழாவை முன்னால் மலேசிய 
நிதி அமைச்சர் டத்தோ நூர் முஹம்மது யாக்கூப் 
அவர்கள் தலைமையேற்று நடத்தி தர இருக்கிறார்கள்.

ஆகவே மலேசியா வாழ், வாழூர் ஜமாஅத்தார்கள் 
அனைவர்களும் அவசியம் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு 
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.வஸ்ஸலாம்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

வாழூரில் சென்னை பிலாலியா அரபுக்கல்லூரி மாணவர்கள் சிறப்புரை !!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 24-11-2015 அன்று , இராமநாதபுர மாவட்டம், வாழூர் ஜும்ஆ பள்ளிவாசலில்,மஃரிப் தொழுகைக்குப்பிறகு, சென்னை 
பிலாலியா அரபுக்கல்லூரி மாணவர்கள்,அகீதா சம்பந்தபட்ட 
12 தலைப்புகளில் சிறப்புப் பேருரையாற்றினார்கள்.
அல்ஹம்து லில்லாஹ்.








இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸை, மௌலானா மௌலவி 
எஸ்.சுலைமான் அலி ஆலிம் கைரி அவர்கள் கிராஅத் 
ஓதி துவக்கி வைத்தார்கள்.

சித்தார் கோட்டை ஜாமிஆ மஸ்ஜித் இமாம்,மௌலானா 
மௌலவி அல்-ஹாஃபிழ் காரீ அப்துல் காதிர் மஹ்ழரி 
ஹஜ்ரத் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இறுதியாக வாழூர் ஜாமிஆ மஸ்ஜிதின் இமாம் ஆரிஃப்கான் நூரி நிஜாமி  ஹஜ்ரத் அவர்களின் சிறப்பு துஆவோடு மஜ்லிஸ் நிறைவு பெற்றது.

இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில்,சுற்றுப்புற மக்கள் ஏராளமானோர் 
கலந்து கொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொண்டனர்.வஸ்ஸலாம்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

இராமநாதபுரம் நகர் மற்றும் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய முப்பெரும் விழா !!!







வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Monday, November 16, 2015

சாம்பிராணியும் ஷிர்க்கும் !!!


உரை நிகழ்த்துபவர்:
இலங்கை மௌலானா மௌலவி 
அஸ்செய்யத் அலவி (முர்ஸி) ஹழ்ரத் அவர்கள்.



வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

சாம்பிராணிக்கு என்று மருத்துவ குணங்கள் இருக்கின்றன !!!


பிரசவ வீட்டில் பிள்ளைகளின் கழிவுகள் ...
தாய்மார்களின் நிபாஸ் எனும் துடக்குகளின் நாற்றம் ..போன்றவைகளை சாம்பிராணியின் வாசம் மிகுந்த அந்த புகை ..நீக்கும்

கிருமி நாசினியாகவும்....
துர்வாடைகளை நீக்கி மனதுக்கு உகந்த மணங்களை,,சாம்பிராணி ,,குங்கிலியம் ...போன்ற வஸ்துகளை உபயோகிக்க அல்லாஹ் வழங்கியுள்ள நிஹ்மத் !

அரபியர்கள் இப்போதும் பஹூர் எனும் சாம்பிராணியும் வூத்..எனும் நறுமண கட்டையையும் பல லட்சம் கொடுத்துக்கூட வாங்குகிறார்கள் !

எனக்கு இவ்வுலகில் பிடித்தது முதலில் நறுமணம் ..என்று தான் ..கண்மணி நாயகம் ரஸூலுல்லாஹ் சொன்னார்கள் !

ஆதலால் குளிதத்துமே..இன்றும் கூட அரபி அந்த சாம்பிராணி யான அகில் ..ஊத் ..பஹூர்..என்பதை எலெக்ட்ரானிக் சாம்பிராணி சட்டியில் போட்டு எரித்து அதன் புகையை தன் உடல்முழுதும் படும்படியாக ,,,வெற்றுடம்பில் நின்று ஏற்றிக்கொள்வார்கள் !

அராபிய பெண்ணோ..ஆணோ..தூரத்தில் வந்தால்கூட கண்டுக்கொள்ளலாம் ..அவர்கள் மேல் உள்ள நறுமணத்தை !

அது சாதாரண பெர்புயூம் கிடையாது !

சாம்பிராணி புகையால் தன் உடம்பை வாசம் கொடுதுக் கொண்டதுதான் !

நம்மவர்கள் அத்தரையும் செண்டையும்,,,சட்டையில் அப்பிக்கொண்டு கொஞ்சநேரத்தில் ,,வியர்வையில் காய்ந்ததும் ...வியர்வை நாற்றமும் செண்டும் கலந்து வித்தியாசமான நாற்றம் குடலை பிடுங்கும் !

நாங்கள் குழந்தையின் தொட்டில் துணி .. வானித்துணி பீத்துணி..எல்லாம் சாம்பிராணி புகை காட்டித்தான் திருப்பி யூஸ் பண்ணுவோம் !

இப்போது ...அதை கெடுதல் என்று சொல்லி ..

பிள்ளை பிறந்த வீடு டெட்டால் நாற்றம் தான் நாறுகிறது !

சாம்பிராணி புகை போட்டுவந்த பிள்ளை குளித்ததும் அதில் காட்டுவதால் அயர்ந்து தூங்கும் !

மேல்வலி இல்லாமல் இருக்கும் !

தாய்ப்பாலின் கவுச்சி இல்லாமல் ...பாலை குடித்து குடித்து கக்காது!

ஆனால் ,,இப்போதோ...டெட்டால் நாற்றமும் ...மற்ற ஆங்கில மருந்துகளின் நாற்றமும் சேர்ந்து பிள்ளை குளித்தாலும் கத்துவதும் ..அசந்து தூங்காமல் இருப்பதும் ..

பாலை அடிக்கடி கக்குவதும் ...அறியாமையின் உச்ச கட்டம் ! 
பாவம் !

சாம்பிராணி போட்டு மஜ்லிஸ் நடத்தினால் ஷிர்க் ...என்கிறது ஜாஹிலிய்யா கூட்டம்

சாம்பிராணி என்ற வாசனைப்பொருள் ஷிர்க்கா ?
அதன் புகை ஷிர்க்கா ?

அதன் தணல் ஷிர்க்கா ?

போடுவது ஷிர்க்கா ..?

அப்படியானால் ...

அரபி ஷிர்க் செய்து கொண்டே இருக்கானே..?

சாம்பிராணி புகைக்கு ஷைத்தான் பேய் பிசாசு கண்ணூறு நாவூறு எதுவும் அண்டாது என்பது தெரியுமா ..?

அது சாம்பிராணிக்கு றப்பு கொடுதிருக்கிற சக்தி !

சுக்கு மிளகு திப்பிலி சாப்பிட்டால் சளி போய்விடும் என்று ஆங்கிலேயன் கண்டுபிடித்து சொன்னால்தானே ஏற்றுக்கொள்வீர்கள் ?

அதேபோல்தான் இந்த மருந்துக்கு அல்லாஹ் வழங்கிய சக்தி !

நறுமணம் கமழும் இடத்திற்கு ரஹமத்துடைய மலக்குகள் வருகை தருவார்கள் அல்லவா .>?

மஜ்லிஸ்களில் துஆ ஒதும்போதும் வீடுகளில் பள்ளிகளில் சாம்பிராணி புகை எனும் நறுமணம் போடும் காரணம் இப்பவாவது புரிகிறதா ..?

இறுதியில் துஆக்களில் மலக்குகள் ஆஜராகுவர்கள் கண்மணி நாயகத்தின் மீது ஸலவாத் சொல்லி ஆமீன் கூறுவார்கள் ...மலக்குமார்களின் வருகைக்காகக் ..நல்லடியார்களான நம் முன்னோர்கள் வருகை வரவேற்க ,,,நாம் நறுமணம் கமழ வைப்பதும் மிகவும் ஏற்றமான செயல் அல்லவா .>?

ஷைத்தான்கள் விரண்டு ஓடுவார்கள் அல்லவா ..?

சாம்பிராணியை வணங்குவதற்கு அதில் என்ன இருக்கிறது ..அதை ஷிர்க் என்று சொல்ல ?

நோக்கம் நல்ல நோக்கம் தானே ..?

சாம்பிராணி ஷிர்க் ஷிர்க் என்று பயான் பண்ணி ஓலமிட்ட ஆலிம்கள் இப்போது டெங்கு காய்ச்சல் வராமல் வீட்டில் சாம்பிராணி பிடிக்கிறார்களே ..?

வெண்டிலேஷன் சரியில்லாத கிரவுண்ட் ப்ளோர் வீடுகளுக்கெல்லாம் அடிக்கடி சாம்பிராணி பிடித்தால் கெட்ட ஷைத்தான் பேய் பிசாசு போவதுடன் கிருமிகள் ,,கொசுக்கள் ,,சிறு சிறு பூச்சிகள் ஒழியும்,,மனதும் ராஹத்தாக இருக்கும் !

மவ்லீத் மஜ்லிஸில் சாம்பிராணி போடுவது ஷிர்க் ..

கொசுவுக்கு டெங்கு வராமல் சாம்பிராணி போடுவது ஸுன்னத்...அப்படியா ..?

முட்டாள்களே ..?

சிந்தியுங்கள் !
விசேஷங்கள் நல்ல நாள்கள்,,வெள்ளி திங்கள் இரவு மிஹ்ராஜ் பராஅத் இரவு .. லைலத்துல் கதர் ,,பெருநாள் இரவு என்று சாம்பிராணி புகையிட்டு கொள்வது சிறந்தது !
நன்றி-- shafiyath Qadiriyah.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

ஒடுக்கத்து புதன் அன்று கண்டிப்பாக வெளியில் போக வேண்டும் என சொல்கிறார்களே அது மார்க்கத்தில் இருக்கா ?


மூன் டிவியின் "தீன் ஒளி" வழங்குபவர்.
அல்ஹாஃபிழ், அபுத்தலாயில்,தாஜுல் உலூம்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் அவர்கள்.
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
( தலைவர்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் )



வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

ஒடுக்கத்துப் புதன் ஓர் ஆய்வு !!!


கேள்வி: ஒடுக்கத்துப் புதனன்று நாம் செய்ய வேண்டியதென்ன?

பதில்: ஸபர் மாதத்தின்  இறுதிப்புதனன்று இரவு அவ்வருடத்திற்கான மூன்று இலட்சம் பலாய், முஸீபத்துகள் இறங்குவதாக மாபெரும் தவஞானி குத்புல் ஹிந்து காஜா முயீனுத்தீன்  ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் அகக்கண் பார்வையால் கண்டறிந்ததாக அன்னாரது சீடர் பரீதுத்தீன் ஷக்கன்ஜீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது 'ஜவாஹிருல் கம்ஸா' எனும் நூலில் கூறுவதோடு அத்தினத்தில் ஸலாமுன் எனத் தொடங்கும் திருவசனங்களை எழுதிக் குடித்தால் அச்சோதனைகள் அவர்களை அணுகாது எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

'நோய் மொத்தமாக இறங்குகிறது.நோய் நிவாரணி கொஞ்சம் கொஞ்சமாக இறங்குகிறது' எனற நபிமொழியை அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மூலமாக தைலமி ரஹிமஹுல்லாஹ் அவர்களும், ஹாகிம் தாரீகிலும் பதிவு செய்துள்ளனர். இதனை இமாம் சுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி தமது அத்துர்ருல் மன்தூர் எனும் நூலில் கூறுகின்றனர்.
பதாவா ஹதீதிய்யா ஓரம் பக்கம் 233

குத்புல் ஹிந்த் அவர்களின் கனவுக்கு இந்த நபிமொழியும் ஆதாரமாக அமைகின்றது.

நன்றி: வஸீலா 1-11-87

ஒடுக்கத்துப் புதன் 
بسم الله الرحمن الرحيم
سَلاَمٌ قَوْلاًَ مِّنْ رَّبِّ رَّحِيْمٍ. سَلاَمٌ عَلَى نُوْحٍ فِى الْعَالَمِِيْنَ. سَلاَمٌ عَلىَ اِبْرَاهِيْمَ. سَلاَمٌ عَلَى مُوْسٰى 
وَهَارُوْنَ. سَلاَمٌ عَلٰى اِلْيَاسِيْنَ. سَلاَمٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوْهَا خَالِدِيْنَ. سَلاَمٌ هِيَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ. اَللّٰهُمَّ اَعْصِمْنَا مِنَ الْبَلآءِ وَدَرْكِ الشَّقَآءِ وَسُوْءِِ الْقَضَآءِ وَشَمَاتِةِ الْآعْدَآءِ وَمَلْجُوْمِ الْوَبَآءِ وَمَوْتِ فُجْاءَةٍ وَمِنْ زَوالِ الْبَرَكَةِ وَالنِّعْمَةِ وَمِنَ الْبَرَصِ وَالْجُذَامِ وَالْجُبْنِ وَالْبَرْصَامِ وَالْحُمّٰى وَالشَّقِيْقَةِ وَمِنْ جَمِيْعِ الْاَمْرَاضِ وَالْاَسْقَامِ بِفَضْلِكَ وَجُوْدِكَ يَاذَالْجَلاَلِ وَالْاِكْرَامِ بِرَحْمَتِكَ يَااَرْحَمَ الرَّاحِمِيْنَ وَصَلَّى اللهُ عَلىَ خَيْرِ خَلْقِهِ مُحَمَّدٍ وَعَلىَ اٰ لِهِ وَاَصْحَابِهِ وَسَلَّمْ وَالْحَمْدُ لِلّهِ رَبِّ الْعَا لَمِيْنَ اٰمِيْنَ .

இதை கரைத்து குடித்த பின் நக்ஷபந்தியா ஷெய்குமார்கள் பேரில் பாத்திஹா ஓதி ஹதியா செய்யவும்.

ஒடுக்கத்துப் புதன் உண்டா?
சபர் மாத இறுதிப் புதன் கிழமையினையே ஒடுக்கத்துப் புதன்என்று அழைக்கின்றனர்.
இந்த நாளில் வாழை இலைகளிலோ அல்லது பனை ஓலைகளிலோ திருக்குர்ஆன் வசனங்களை எழுதி அதை நீரால் கரைத்துக் குடிக்கும்வழக்கமும், எழுதப்பட்ட இலையை உடலில் குறிப்பாக தலையில் தேய்த்துக் குளிக்கும் வழக்கமும் தொன்று தொட்டு முஸ்லீம்களிடம்
இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் கற்றறிந்த மார்க்க அறிஞர்களாக இருந்தனர்.அவர்களின் பார்வையில் இது மார்க்கத்திற்கு உட்பட்டதாகவே தெரிந்தது. எனவே அதை அவர்கள் தடுக்கவில்லை.

எனவே இது பற்றி திருக்குர்ஆனும் நபி மொழிகளும், இஸ்லாமிய அறிஞர்களால் சொல்லப்பட்ட தகவல்களையும் சுருக்கமாகத் தருகின்றோம்.
அல்லாஹ் படைத்த ஏழு நாட்களில் கெட்ட நாள், மிடிமை,கஷ்டம், நோய் போன்றவற்றுக்கான நாள் உண்டு என்பதற்கு திருக்குர்ஆனில் ஆதாரம் உள்ளது. 
انا ارسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر
நிச்சயமாக நாம் அவர்கள் மீது ("ஆத்" கூட்டத்தினர் மீது) "நஹ்ஸ்" உடைய நாளில் கடுமையான காற்றை அனுப்பி வைத்தோம். 
திருக்குர்ஆன் – கமர் அத்தியாயம் – வசனம் – 101 
فارسلنا عليهم ريحا صرصرا في ايام نحسات
நிச்சயமாக நாம் அவர்கள் மீது "நஹ்ஸ்" உடைய நாட்களில் கடுமையான காற்றை அனுப்பி வைத்தோம். 
திருக்குர்ஆன் – புஸ்ஸிலத் அத்தியாயம் – வசனம் – 16 
மேற்கண்ட இரு வசனங்களிலும் முன் வாழ்ந்த கூட்டத்தினருக்கு அல்லாஹ் கடுங் காற்றை அனுப்பி அவர்களைத் தண்டித்ததாக கூறியுள்ளான். 
மேற்கண்ட இரு வசனங்களில் முந்திய வசனத்தில் "நஹ்ஸ்" என்ற சொல் ஒருமையாகவும் இரண்டாம் வசனத்தில் பன்மையாகவும் வந்துள்ளது. இச்சொல்லுக்கு தீமை, மிடிமை,தரித்திரம் போன்ற அர்த்தங்கள் உள்ளன. மேற்கண்ட இரு வசனங்கள் மூலம் "நஹ்ஸ்" உடைய நாளொன்று உண்டு என்பது தெளிவாகின்றது. 

அந்நாள் எது என்பதில்அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு காணப்படுகிறது இவ்விவரத்தை சரியாக அறிந்து கொள்வதாயின் "ஆத்" கூட்டத்தினருக்கு அல்லாஹ் பயங்கர காற்றை காற்றைஅனுப்பிய மாதம், நாள் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும். இதில் கூட வரலாற்று ஆசிரியர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உண்டு. எனினும் இது தொடர்பாக சொல்லப்பட்டுள்ள பலருடைய கருத்துக்களையும் இங்கு தருகின்றோம்.

அந்த நாள் புதன் கிழமைதான் என்று அநேக அறிஞர்கள் கருத்துக் கூறி உள்ளனர். ஆயினும் அவர்கள் எந்த மாதம் என்பது பற்றி தெளிவாகவும் திட்டவட்டமாகவும் ஒன்றும் சொன்னதாகக் காணவில்லை. தப்சீர் றூஹுல் மஆநீயில் ஆசிரியர் அவர்கள்தங்களின் மேற்கண்ட விரிவுரை நூல் 27 ம் பாகம் 119 ம் பக்கத்தில் அது  ஷவ்வால் மாதப் பிற் பகுதியிலுள்ள புதன் கிழமை என்று கூறியுள்ளார்கள். அல்லாமா வகீஉ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் "குறர்" என்ற நூலில் ஒவ்வொரு மாதத்தின் கடைசிப் புதன்கிழமை "நஹ்ஸ்" உடைய நாள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளதாக இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத்தொட்டும் வந்துள்ள நபீ மொழியை இப்னு மர்தவைஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹிஅவர்களும், அல்ஹதீபுல் பக்தாதீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் அறிவித்துள்ளதாக எழுதியுள்ளார்கள். இமாம் தபறானீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அந்நாள் புதன் கிழமை என்று தங்களின்தபறானீ என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள். ஆயினும் மேற்கண்ட இரு நபீ மொழிகளையும் அபூ ஹாதம், இப்னு ஜவ்ஸீ, இப்னு றஜப், சகாவீ ஆகியோர் "ழயீப்"  பலம் குறைந்தவை என்று கூறி உள்ளனர்.

புதன் கிழமை "நஹ்ஸ்' உடைய நாள் என்று தகவல்  இருப்பது போல அது நல்ல நாள் என்றும் தகவல் உள்ளன. மின்ஹாஜுல் ஹுலைமீ, ஷுஆபுல் பைஹகீ ஆகிய இரு நூல்களிலும் புதன் கிழமை மதிய நேரத்தின் பின் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இமாம் புர்ஹானுல் இஸ்லாம் ரஹ்மத்துல்லாஹி அலைஹிஅவர்கள் "ஹிதாயஹ்" என்ற நூலில் வந்துள்ளதாக "தஃலீமுல் முதஅல்லிம்" என்ற நூலில், புதன் கிழமை ஆரம்பிக்கப்படுகின்ற எந்த ஒரு காரியமும் நிச்சயமாக நிறைவேறும் என்றும் அன்றுதான் அல்லாஹ் ஒளியைப் படைத்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால்தான் பெரியோர்கள்-ஹஸ்ரத்மார்கள் கல்வி சம்பந்தமான வகுப்புக்களை புதன் கிழமையில் தொடக்கி வந்துள்ளார்கள். அதோடு புதன் கிழமை கல்விக்குரிய நாளென்றும் பரவலாக கணிக்கப் படுகின்றது. 

எவனாவது புதன் கிழமை மரங்களை நட்டு "சுப்ஹானல் பாஇதில் வாரிதி" என்று சொல்வானாயின் அவை அவனுக்கு காய் கனிகளைக் கொடுக்கும் என்ற இந்த நபீ மொழியை ஜாபீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்க இப்னு ஹிப்பான் ரஹ்மத்துல்லாஹி அலைஹிஅவர்களும் தைலமீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும்  தமது நூல்களில் பதிவு செய்துள்ளார்கள். இந்த நபீ மொழியை ஆதாரமாகக் கொண்டு பெரியோர்கள் செயல் பட்டு வந்துள்ளார்கள்.

புதன் கிழமை "நஹ்ஸ்" உடைய நாள் என்பதற்கு சில தகவல்களை இங்கு தருகிறோம். "எனது உம்மத்துக்கள் வெறுக்கமாட்டார்கள் என்றிருந்தால் புதன் கிழமை பயணம் செய்ய வேண்டாம் என்று நான் அவர்களை பணித்திருப்பேன்" என்று பி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  கூறியதாக ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹ அறிவித்துள்ளார்கள். இந்த நபீ மொழி "பிர்தௌஸ்" என்ற நூலில் பதிவாகி உள்ளது" 

'வார நாட்களில் சனிக்கிழமை – சூட்சி, துரோகத்துக்குரிய நாளாகும். ஞாயிற்றுக் கிழமை மரம் நடுதல், கட்டிடம் கட்டுவதற்குரிய நாளாகும். வியாழக் கிழமை தேவைகளைத் தேடுவதற்கும் அதிகாரிகளிடம் செல்வதற்கும் உரிய நாளாகும்.வெள்ளிக் கிழமை திருமணப் பேச்சுக்கும், திருமணம் செய்வதற்கும் பொருத்தமான நாளாகும்' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். 

இந்த நபீ மொழியை இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுஅறிவித்ததாக அபூயஃலா ரஹ்மத்துல்லாஹி அலைஹிஅவர்களும், அபூ சயீத் ரஹ்மத்துல்லாஹி அலைஹிஅவர்களும் அறிவித்ததாக இப்னு அதிய்யஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும், தமாம் ரஹ்மத்துல்லாஹி அலைஹிஅவர்களும் "அல்பவாயித்"என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

ஆயினும் சகாவீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இந்த நபீ மொழியை பலவீனமானது என்று கூறியுள்ளார்கள். 

வெண்குஷ்டம்,கருங்குஷ்டம் இரண்டும் புதன் கிழமையில் தான் வெளியாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த நபீ மொழியை இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்அறிவித்துள்ளதாக இப்னு மாஜாவும், வேறு இரு வழிகளில் ஹாகிம் அவர்களும் பதிவு செய்துள்ளார்கள். புதன் கிழமை நகம் வெட்டுதல் கூடாதென்றும் அவ்வாறு செய்தால் குஷ்ட நோய் வரும் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன. ஒருநோயாளியிடம் நலம் விசாரிக்கச் செல்வது நல்லதெனினும் அதை புதன் கிழமை தவிர்த்துக் கொள்வது நல்லதென்று தகவல்கள் கூறுகின்றன. 

புதன் கிழமை மிடிமைக்குரிய நாளாக கருதப்படும் என்றும்,மாதத்தின் கடைசிப் புதன் கிழமை மிகவும் கடுமையான மிடிமைக்குரிய நாளென்றும் "அர்றவ்ழஹ்" என்ற நூலில்கூறப்பட்டுள்ளது.

மாதத்தின் கடைசிப் புதன் கிழமை மிடிமைக்குரிய நாளென்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுஅறிவித்தார்கள்.   

"ரூஹுல் பயான்" என்ற திருக்குர்ஆன் விரிவுரை நூல் வால்யூம் 09 பக்கம் 324 புதன் கிழமையில் சுவர்கத்து நீர் உலகத்து நீருடன் கலக்கப் படுவதால் அன்று குளிப்பதுசிறந்ததென்று கூறப் பட்டுள்ளது. 

தண்டனை பெற்ற எந்த ஒரு கூட்டமாயினும் அது புதன் கிழமையிலேயே தண்டிக்க பட்டுள்ளது. இத்தகவல் ரூஹுள் பயான் வால்யூம் 08 பக்கம் 328 இல் இடம்பெற்றுள்ளது.

சபர் மாதத்தின் கடைசிப் புதன் கிழமையில் முன்னூற்று இருபதாயிரம் சோதனைகள், துன்பங்கள் இறங்குவதாகவும்,வருட நாட்களில் அந்நாள் ஒன்று மட்டுமே கஷ்டமான நாள் என்றும் இறைஞானிகள் சொல்லியிருப்பதாக "முஜர்றபாதுத் தைறபீ" என்ற நூல் 103 ம் பக்கத்தில் கூறப் பட்டுள்ளது. 
அஷ் ஷெய்குல் காமில் பரீதுத்தீன் மஸ்ஊத் கன்ஜே ஷகர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், தங்களின் ஞான குரு ஹாஜா முயீனுத்தீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹிஅவர்களின் அவ்ராத் தொகுப்பில் பின்வருமாறு இருக்கத் தான் கண்டதாக கூறியுள்ளார்கள்.

ஒவ்வொரு வருடமும் முன்னூற்று இருபதாயிரம் சோதனைகள் – துன்பங்கள் இறங்குகின்றன அவை யாவும் சபர் மாதத்தின் இறுதிப் புதன் கிழமையிலேயே இறங்குகின்றன. அந்த வருட நாட்களில் இந்நாள் மிகவும் கஷ்டமானது. அன்று யாராவது நான்கு ரக்அத் தொழுது நான்குரக்அத்திலும் "பாத்திஹா சூரா" ஓதிய பின் இன்னா அஃதைனாகல் கவ்தர் என்ற சூரத்தை 17 தடவைகளும்,குல்ஹுவல்லாஹ்வை ஐந்து தரமும் , குல் அஊது பிறப்பில் பலக் ஒரு தரமும், குல் அஊது பிறப்பின் நாஸ் ஒரு தரமும் ஓதினால் அந்த வருடம் முழுவதும் அவன் சகல பலாய்களிலிருந்தும் பாதுகாக்கப் படுவான். பின்பு "சலாம்" என்று சொல்லப்படுகின்ற திருக்குர்ஆன் வசனங்களை பன்னீர், கஸ்தூரி,குங்குமம் கொண்டு பீங்கானில் எழுதிக்குடிக்கவும் வேண்டும்.

 பழாயிறுஷ் ஷுஹூரில் ஹிஜ்ரிய்யஹ் – பக்கம் – 33 ,34 
من بشرني بخروج صفر ابشره بالجنة
சபர் மாதம் முடிந்து விட்டதென்று என்னிடம் சுபச்செய்தி சொல்பவனுக்கு சுவர்கத்தைக் கொண்டு நான் சுபச்செய்தி சொல்வேன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறியுள்ளார்கள் என்றும் "ஹயாதுல் ஹயவான்" என்ற நூல் முதலாம் பாகம் 120 ம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

"இஆனதுத் தாலிபீன்" என்ற சட்டக்கலை நூலை எழுதியவரும்,  மக்காவில் பிறந்து மதீனாவில் சமாதி கொண்டுள்ளவருமான அஸ்ஸெய்யித் முஹம்மத் ஷதா அத்திம்யாதீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களின் "நிஹாயதுல் அமல்" என்ற சட்ட நூலில் 208 ம் பக்கத்தில்ஒடுக்கத்துப் புதன் பற்றிக் குறிப்பிடுகையில் ஒவ்வொரு வருடத்திற்கெனவும் அல்லாஹ்வால் ஏற்படுத்தப்படுகின்ற பலாய், கஷ்டங்கள், சோதனைகள், "லவ்ஹுல் மஹ்பூல்" பலகையிலிருந்து பூமியை அடுத்துள்ள முன் வானத்துக்கு சபர் மாத இறுதிப் புதனன்று இறக்கப்படுகின்றன. ஆகையால் கீழ் காணும் திருவசனங்களைப்

سلام قولا من رب الرحيم
سلام على عباد الذين اصطفى
سلام على نوح في العلمين سلام على ابراهيم
سلام على موسى وهارون
سلام على الياسين
سلام هي حتى مطلع الفجر

   பாத்திரங்களில் எழுதி அதைத் தண்ணீரால் கரைத்து குடிப்பவர்களுக்கு குறித்த சோதனைகள் ஏற்படமாட்டாது என்று கூறியுள்ளார்கள். 
மக்காவில் பிறந்த இந்த நூலாசிரியர்கள் எழுதியிருப்பதைப் பார்க்கும்போது விதண்டாவாதம் செய்வோர் ஒடுக்கத்துப் புதன் பற்றி சொல்லும் கதை மூடத்தனமானது என்பது தெளிவாகிறது.

ஒவ்வொரு மாதத்தின் இறுதிப் புதன் கிழமையும் குறிப்பாக'சபர்" மாதத்தின் இறுதிப் புதன் கிழமையும் "நஹ்ஸ்" மிடிமைக்குரிய நாட்கள் என்பதற்கான மேற்கண்ட ஆதாரங்கள் கொண்டும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்கு மரண வருத்தம் "சபர்" மாதத்தின் இறுதிப் புதன் கிழமை ஆரம்பமானதை கருத்திற் கொண்டும் அன்றைய தினம்திருக்குர்ஆன் வசனங்களை வாழை இலையிலோ அல்லது வேறு பாத்திரங்களிலோ எழுதி நோய், மிடிமை, கஷ்டம்,போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு பெறும் நோக்குடன் குடிப்பதை இஸ்லாமிய மூத்த அறிஞர்கள் நல்ல காரியமெனக் கூறியுள்ளதால் இவ்வழக்கம் எந்த வகையிலும் "ஹறாம்" ஆகவோ "பித்அத்" ஆகவோ "ஷிர்க்" ஆகவோமாட்டாது. 

எனவே "சபர்" மாதத்தின் இறுதிப் புதன் கிழமை திருக்குர்ஆன் வசனங்களை வாழை இலையிலோ காகிதத்திலோ எழுதிக் கரைத்துக்  குடிப்பதும், உடலில் தேய்த்துக் குளிப்பது "முபாஹ்" ஆகுமாக்கப்பட்ட காரியமே அன்றி அது எந்த வகையிலும் மார்கத்துக்கு முரணாகி விடாது. அதனால் ஏதோ ஒரு வகையில் பயன்தான் கிடைக்குமேயன்றி பாவம் வந்துவிடாது. இது தொடர்பாக வந்துள்ள நபி மொழிகளில் பலம் குறைந்தவை என்று வைத்துக் கொண்டாலும் கூட பலம் குறைந்த நபி மொழிகளை ஆதாரமாக கொண்டு செயல்பட முடியுமென்பதை அவர்கள் தெரிந்து கொள்ளல் வேண்டும். இவ்வழக்கம் "ஹறாம்"என்பதற்கோ "ஷிர்க்" என்பதற்கோ ஆதாரம் இல்லாதிருப்பதாலும், ஆனால் "முபாஹ்" ஆஹும் என்பதற்கு ஆதாரம் இருப்பதாலும் இதை தடுப்பது கூடாது என்பதே தெளிவான முடிவு.

நன்றி ;- சூஃபி மன்ஜில்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

ஒடுக்கத்து புதன் பற்றி !!!


ஒடுக்கம் எனும் தமிழ் வார்த்தைக்கு கடைசி என்பது பொருளாகும். ஸஃபர் மாதத்தின் கடைசி புதன்கிழமைக்கு ஒடுக்கத்து புதன் என்ற சொல்லுக்கு தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் பிரபல்யமாக உள்ளது.

ஒடுக்கத்து புதனில் இஸ்லாமியர்கள் தங்களது நோய்கள் அகல்வதற்காக குர்ஆன் வசனங்களை எழுதி கரைத்துக் குடிக்கிறார்கள் ஏனென்றால், பிணி தீர்க்கும் அருமருந்தாக குர்ஆன் அமைநதுள்ளது. இறைவன்
கூறினான். “இறைநம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும்,நோய்களுக்கு நிவாரணமாகவும் அமைந்துள்ள குர்ஆன் வசனங்களை இறக்கி வைப்போம். 17.82

அதை எந்த நாளிலும் செய்யலாமென்றாலும் இஸ்லாமியர்கள் புதனை தேர்ந்தெடுத்தற்கும் சில காரணங்கள் உண்டு.

-தொழுநோயின் ஆரம்பம் புதன்கிழமை.
-அய்யூப் அலை அவர்களின் நோயின் துவக்கம் புதன் கிழமை.
-துர்ப்பாக்கியமுள்ள நஹ்ஸுடைய நாள் புதன் கிழமை.
-இறைத்தூதர் ஸல் அவர்களின் இறுதிகட்ட நோய் ஆரம்பமானது ஸஃபர் மாத கடைசி புதன் கிழமை.
நோயின் துவக்கம்.

عن ابن عمر رضي الله عنهما قال إني سمعت رسول الله صلي الله عليه وسلميقول ما نزل جذام ولا برص إلا في ليلة الأربعاء[الحاكم في المستدرك علي الصحيحين]

இறைத்தூதர் صلي الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள். வென்குஷ்டமும் கருங்குஷ்டமும் புதன்கிழமை இரவில்தான் இறங்கும். அறிவிப்பாளர். 
 உமர் ரலி நூல் ஹாகிம்.

عن عبدالله بن عمر رضي الله عنهماقال إني سمعت رسول اللهصلي الله عليه وسلم يقول اجتنبوا الحجامة يوم الأربعاء فإنه الذي ابتلي الله أيوب فيه بالبلاء وما يبدو جذام ولا برص إلا في يوم الأربعاء أو في ليلة الأرباء[ابن ماجه، الحاكم في المستدرك علي الصحيحين]

இறைத்தூதர் صلي الله عليه وسلمஅவர்கள் சொன்னார்கள்.புதன்கிழமையன்று
(உடம்பிலிருந்து)இரத்தம் வெளியேற்றுவதை தவ்ர்த்துக் கொள்ளுங்கள் ஏனென்றால், புதன்கிழமையில்தான் அய்யூப்(அலை)அவர்கள் சோதிக்கப்பட்டார்கள். வென்குஷ்டம் மற்றும் கருங்குஷ்டமென்ற தொழுநோய் புதன்கிழமை பகலிலோ அல்லது இரவிலோதான் ஆரம்பமாகும்.

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلي الله عليه و سلم قال من احتجم يوم الأربعاء ويوم السبت فرأى وضحا فلا يلومن إلانفسه[البيهقي]

இறைத்தூதர் صلي الله عليه وسلمஅவர்கள் இயம்பினார்கள். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஒருவர் தன் உடம்பிலிருந்து இரத்தம் வெளியேற்றி அதன் காரணமாக தொழுநோயின் அடையாளத்தை தனது உடம்பில் பார்த்தால் அவர் தன்னைத்தானே பழித்துக் கொள்ளட்டும்..அறிவிப்பாளர் அபூஹூரைரா رضي الله عنهநூல்.பைஹகீ
நஹ்ஸுடைய நாள்.
நஹ்ஸ் என்ற அரபிச் சொல்லுக்கு தீங்கு மற்றும் துர்ப்பாக்கியம் என்பது பொருளாகும்.,ஆத் கூட்டத்தினருக்கு தண்டனை இறக்கிவைத்த நாளை இறைவன் நஹ்ஸுடைய நாள் என குர்ஆனில் பெயரிடுகிறான்.

إنا أَرْسلْنا عليهم رِيْحًا صرْصرًا في يوم نحسمسْتمر

இறைவன் கூறினான். தொடராக துர்ப்பாக்கியமுள்ள நாளில் கடும்புயல் காற்றை அவர்கள் மீது நாம் அனுப்பி வைத்தோம்54:19
அந்த நஹ்ஸுடைய நாள் புதன் கிழமையென்பதை கீழ்க்கானும் ஹதீஸ்கள் அறிவிக்கின்றன.

عن جابر قال نزل جبريل عليه السلام علي النبي صلي الله عليه وسلم فقال اقض باليمين مع الشاهد،وقال يوم الاربعاء يوم نحس مستمر[الطبراني في المعجم الاوسط]

இறைதூதர் صلي الله عليه وسلمஅவர்களிடம் ஜிப்ரில்அலைஹிஸ்லாம் அவர்கள் வந்து கூறினார்கள் ஒரு சாட்சியோடு சத்தியமிடுதலைக்கொண்டு தீர்ப்பு வழங்குங்கள்! புதன்கிழமை தொடர்பான தீங்குள்ள நஹ்ஸுடைய நாளாகும்.
அறிவிப்பாளர்.ஜாபிர் رضي الله عنهநூல்.தப்ரானி(அவ்சத்)

عن جابر بنلاعبدالله قال قال رسول الله صلي الله عليه وسلم أتاني جبريل عليه السلام فأمرني أن أقضي باليمين مع الشاهد وقال إن يوم الاربعاء نحس مستمر[البيهقي]
عن جابر قال قال النبي صلي الله عليه وسلم [أتاني جبريل فأمرني باليمين مع الشاهد وقال إن يوم الاربعاء يوم نحس مستمر[مسند أبي عوانة]

இறைத்தூதர் صلي الله عليه وسلمஅவர்கள் மொழிந்தார்கள்.
ஜிப்ரீல் عليه السلامஅவர்கள் என்னிடம் வந்து, ஒரு சாட்சியுடன் சத்தியமிடுதலும் இருந்தால் அவற்றைக்கொண்டு தீர்ப்பு வழங்கு எனக்கு கட்டளையிட்டார்கள். மேலும்,கூறினார்கள் புதன்கிழமை தொடர்ந்து தீங்குள்ள(நஹ்ஸுடைய) நாளாகும். அறிவிப்பாளர் ஜாபிர் رضي الله عنهநூல்.பைஹகீ.

நபிகளாருக்கு நோயின் தொடக்கம்.

قال الواقدي وقالوا بدأ رسول الله صلي الله عليه وسلم يوم الأربعاء لليلتين بقيتا من صفر،وتوفى يوم الاثنين لثنتي عشرة ليلة خلت من ربيع الأول[السيرة النبوية لابن كثير]

ஸஃபர் மாதத்தில் இரு நாட்கள் மீதமிருந்த நிலையில் நோய் ஆரம்பமானது. ரபீவுல்அவ்வல் பனிரெண்டாம் நாள் திங்கட்கிழமை இவ்வுலகைவிட்டும் மறைந்தார்கள்.

عن الزهري أخبرني أنس بن مالك قال أول ما اشتكىرسول الله صلي الله عليه وسلم كان ذلك يوم الأربعاء لليلتين بقيتا من صفر وهو في بيت ميمونة حتى أغمي عليه من شدة الوجع [السيرة الابن حبان]

இறைத்தூதர் صلي الله عليه وسلمஅவர்கள் முதன்முதலாக நோய்வாய்ப்பட்டது புதன்கிழமையாகும், ஸஃபர் மாதம் முடிய இருநாட்கள் மீதமிருந்தன. அந்த நேரத்தில் அருமைத் துணைவியார் மைமூனாரலி அவர்களின் இல்லத்தில் இருந்தார்கள். கடுமையான வலியின் காரணமாக மயக்கமுற்றார்கள்.
அறிவிப்பாளர் அனஸ்رضي الله عنهநூல்.:சீரா,,ஆசிரியர்.:இப்னுஹிப்பான்.

قال أبوعمر ثم بدأ برسول الله صلي الله عليه وسلم مرضه الذي مات يوم منه يوم الأربعاء، لليتين بقيتامن صفر سنة إحدى عشرة في بيت ميمونة، ثم انتقل حين اشتد مرضه إلي بيت عائشة،رضي الله عنها، وقبض يوم الاثنين ضحى في الوقت الذى دخل فيه المدينة لاثنتي عشرة خلت من ربيع الأول[أسد الغابة]

இறைத்தூதர் صلي الله عليه وسلمஅவர்கள் இவ்வுலகைவிட்டும் மறைவதற்கு காரணமாக இருந்த நோய் புதன் கிழமைதான் ஆரம்பமானது.ஸஃபர் முடிவிற்கு இருநாட்கள் மீதமிருந்தன. அப்போது மைமூனாரலியல்லாஹ் அன்ஹா அவர்களின் இல்லத்தில் இருந்தார்கள். நோய் கடுமையானபோது ஆயிஷாரலியல்லாஹூ அன்ஹா அவர்களின் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். ரபீவுல்அவ்வல் பிறை 12 ஆம் நாள் திங்கட்கிழமை ளுஹா நேரத்தில் அவர்களின் உயிர் பிரிந்தது.

என்றும் தங்களன்புள்ள.

மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )

ஒடுக்கத்து புதனுடைய முக்கியத்துவம் (ஸஃபர் மாதத்தின் கடைசிப் புதன் கிழமை)


நக்சபந்திய்யா தரீக்காவின் பிரபலமான தலைவர் இமாம் ஷைகு ஃபரீதுத்தீன் (ரலி) அவர்கள் பின் வருமாறு அறிவிக்கிறார்கள்.ஸஃபர் மாதத்தின் கடைசிப்புதன் கிழமையன்று (இதை நமது மக்கள் ஒடுக்கத்துப் புதன் என்பார்கள்) உலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் வியாதிகளும், முஸீபத்துகளும் இறங்குவதாகவும்,அந்த நாளில் பின் வரும் ஸலாமத்துடைய ஏழு ஆயத்துகளையும் பீங்கான் பாத்திரத்தில் அதற்கான விஷேச மைய்யினால்) எழுதித் தண்ணீர் விட்டுக் கரைத்து குடித்தால் அந்த முஸீபத்துகளிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும் எனவும் அறிவிக்கிறார்கள்.


 (ஓதிய நீரை குடித்துவிட்டு நக்சபந்திய்யா ஷைகுமார்கள் மீது ஃபாத்திஹா ஓதிக்கொள்ளவும்) அதோடு பின் வரும் துஆவையும் ஒரு முறை ஓதுவது நல்லது.
                                        بسم الله الرحمن الرحيم
سَلاَمٌ قَوْلاًَ مِّنْ رَّبِّ رَّحِيْمٍ. سَلاَمٌ عَلَى نُوْحٍ فِى الْعَالَمِِيْنَ. سَلاَمٌ عَلىَ اِبْرَاهِيْمَ. سَلاَمٌ عَلَى مُوْسٰى وَهَارُوْنَ. سَلاَمٌ عَلٰى اِلْيَاسِيْنَ. سَلاَمٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوْهَا خَالِدِيْنَ. سَلاَمٌ هِيَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ. اَللّٰهُمَّ اَعْصِمْنَا مِنَ الْبَلآءِ وَدَرْكِ الشَّقَآءِ وَسُوْءِِ الْقَضَآءِ وَشَمَاتِةِ الْآعْدَآءِ وَمَلْجُوْمِ الْوَبَآءِ وَمَوْتِ فُجْاءَةٍ وَمِنْ زَوالِ الْبَرَكَةِ وَالنِّعْمَةِ وَمِنَ الْبَرَصِ وَالْجُذَامِ وَالْجُبْنِ وَالْبَرْصَامِ وَالْحُمّٰى وَالشَّقِيْقَةِ وَمِنْ جَمِيْعِ الْاَمْرَاضِ وَالْاَسْقَامِ بِفَضْلِكَ وَجُوْدِكَ يَاذَالْجَلاَلِ وَالْاِكْرَامِ بِرَحْمَتِكَ يَااَرْحَمَ الرَّاحِمِيْنَ وَصَلَّى اللهُ عَلىَ خَيْرِ خَلْقِهِ مُحَمَّدٍ وَعَلىَ اٰ لِهِ وَاَصْحَابِهِ وَسَلَّمْ وَالْحَمْدُ لِلّهِ رَبِّ الْعَا لَمِيْنَ اٰمِيْنَ .


(1) ஸலாமுன் கவ்லம் மிர் ரப்பிர் ரஹீம் (36--58) 

(2) ஸலாமுன் அலா நூஹின் ஃபில் ஆளமீன் (37--79)

(3) ஸலாமுன் அலா இப்றாஹீம் (37--109)

(4) ஸலாமுன் அலா மூஸா வஹாரூன் (37--120)

(5) ஸலாமுன் அலா இல்யாஸீன் (37--130)

(6) ஸலாமுன் அலைக்கும் திப்தும் ஃபதுஹுலூஹா ஹாலிதீன் (39--73)

(7) ஸலாமுன் ஹிய ஹத்தா  மத்லயில் ஃபஜ்ர் (97--05)

அல்லாஹும்மஃஸிம்னா மினல் பலாயி வதர்க்கிஸ்சகாயி, வசூயில் கலாயி,வஷமாததில் அஃதாயி வமல்ஜூமில் வபாயி, வமவ்த்தி ஃபுஜாஅத்தின்,வமின் ஜவாலில் பரக்கத்தி,வனிஃமத்தி,வமினல் பரஸி,வல்ஜுதாமி,வல்ஜுப்னி, வல்பர்ஸாமி,வல் ஹும்மா,வஸ்ஸகீகத்தி,வமின் ஜமீயில் அம்ராழி,வல் அஸ்காமி,பிஃபழ்ளிக்க,வஜூதிக்க யாதல் ஜலாலி வல்இக்ராம்.பிரஹ்மத்திக்க யா அர்ஹமர் ராஹிமீன். வஸல்லல்லாஹு அலா சைய்யிதினா முஹம்மதின் வஅலா ஆலிஹி வஅஷ்ஹாபிஹி வஸல்லம்.வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.ஆமீன்.

நமது ஊர்களில் அரிசியைக் கரியாக்கி தண்ணீரில் குழப்பி அந்த மையைக்கொண்டு ஆயத்துக்களை நாணல் குச்சியால் எழுதுவது வழக்கம்.இவ்வாறு அரிசியைக் கரியாக்கி மை உண்டாக்கப்படுவதால் அதைக்குடிப்பதால் தீங்கு இல்லை.

கிராமப் புறங்களில் ஏழை மக்களிடம் பீங்கான் தட்டைகள் இருப்பது அரிது.ஆகவே சில ஆலிம்களும்,லெப்பைமார்களும் வழவழப்பாக இருக்கும் மா இலையில் அந்த ஏழு ஆயத்துக்களையும் எழுதிக் குடிக்கும் பழக்கத்தை ஏற்ப்படுத்தி இருக்கிறார்கள். மா இலை கிடைக்காவிட்டால் வழவழப்பான முந்திரி இலை போன்ற வேறு இலைகளிலும் எழுதிக் குடிக்கலாம்.

ஒடுக்கத்து புதனுடைய தினத்தில் ஸலாத்துல் இஸ்திகாரா என்ற நிய்யத்தில் நான்கு ரக்அத்துகள் தொழுவது விஷேசம்.ஒவ்வொரு ரக்அத்திலும் ஸுரா ஃபாத்திஹா ஒரு தடவையும்,இன்னாஅஉத்தைனா 17 தடவையும்,குல் குவல்லாஹு அஹத் 5 தடவையும்,குல் அஊது பிரப்பில் ஃபலக் ஒரு தடவையும், குல் அஊது பிரப்பின்னாஸ் ஒரு தடவையும் ஓதி தொழவேண்டும் 

இந்த நல்ல காரியங்களைத் தவறு என்றும், பித்அத் என்றும், விபரம் அறியாத சில முல்லாக்கள் பேசுவதும் ஒடுக்கத்துப் புதன்களிலுள்ள துஆ முதலிய நிகழ்ச்சிகளையே ஒட்டுமொத்தமாக இல்லை என்று சொல்வதும் ஸுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களிலும் கூட இதைக்கண்டித்து இமாம்கள் பயான் செய்வதும் அறியாமையாகும்.இந்த ஆயத்துக்களைத் தலையில் தேய்த்து குளிப்பது தவறு.காரணம் பரக்கத்தான தண்ணீர் கால்களில் மிதிபட வாய்ப்புண்டு.

தொகுப்பு ;; 

அப்தலுல் உலமா அஷ்ஷெய்கு 
டாக்டர் தைக்கா ஷுஐபு ஆலிம் B.A.(Hons),M.A..,Ph.D.


நன்றி -- அல் முன்ஜியாத்
 (உள்ளம் மற்றும் உடல் நோய்களை நீக்கும் அருமருந்து)

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

சஃபர் மாதம்: சங்கடமா? சந்தோஷமா? சாதாரணமா?


யானைக்கு தும்பிக்கை எப்படியோ
மனிதனுக்கு நம்பிக்கை அப்படி.
நம்பிக்கை எனும்போது ...
இறை நம்பிக்கையுடன் கூடிய தன்னம்பிக்கை இருக்கவேண்டும்

ஆனால் மூடநம்பிக்கை அறவே இருக்கக்கூடாது.
மனித சமூகத்தில் மண்டிக்கிடக்கும் மடமைகளைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.

மூட நம்பிக்கையின் முடைநாற்றத்தில் மூழ்கிக்கிடக்கும் முட்டாள் தனமான மக்கள் இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது வேதனைக்குறிய விஷயம்.

எத்தனை வகையான நம்பிக்கைகள்? அப்பப்பா.. மக்கள் தொகையைவிட மடமைகளின் தொகை அதிகமாக இருக்கும்போல் தெரிகிறதே..
 உலகின் எல்லா பகுதி மக்களிடமும் எதாவது ஒரு வகையில் மூடநம்பிக்கை இருந்து கொண்டு தான் இருக்கிறது, இவற்றில் பலவகை உள்ளது.
ஏன் செய்கிறோம் என்று தெரியாமல் காலம் காலமாக செய்கிறோம் அதனால் தொடர்கிறோம் என்பதும் ஒரு வகையான மூடநம்பிக்கை.

பண்டைய காலத்தில் ஒரு ஆசிரம குடில் இருந்தது, அதில் ஒரு குருவும், சில சீடர்களும் இருந்தார்கள், தினமும் அவர்களுக்கு குரு பாடம் எடுப்பது வழக்கம், ஒரு நாள் பாடம் எடுக்கையில் ஒரு பூனை குருவுக்கு குறுக்கும் நெடுக்குமாக போய் தொந்தரவு செய்தது, குரு சீடர்களிடன் அந்த பூனையை பிடித்து ஒரு தூணில் கட்டச்சொன்னார், பாடம் முடிந்ததும் பூனை அவிழ்த்து விடபட்டது, மறுநாள் பாடம் ஆரம்பிக்கையில் மீண்டும் அதே பூனை தொந்தரவிற்கு வந்தது, இம்முறை குருவின் பார்வையே போதுமானதாக இருந்தது பூனை மீண்டும் தூணுக்கு போக, அதற்கு மறுநாள் பாடம் ஆரம்பிக்கும் முன்னரே பூனை தூணில் கட்டபட்டது, சரி பூனை தொந்தரவு செய்தது தூணில் கட்டினார்கள், இதிலென்ன மூடநம்பிக்கை என்கிறீர்களா!? அங்கே தான் இருக்கு கதையே!

ஒருநாள்  குரு மரணித்து போனார் .அந்த குருகுலத்தின் தலைமை சீடன் குருவாக மாறினார்.வழமை போல் பாடங்கள் கற்பிக்க பட்டது அந்த பூனை தொடர்ச்சியாக கட்டபட்டு வந்தது .ஒரு நாள் பாடம் நடத்த வந்த குரு பூனை கட்டபடாதை கண்டு கோபங்கொண்டு சீடர்களை பார்த்து ''முட்டாள்களே பூனையை ஏன் கட்டவில்லை'' என்று கத்தினார் .
'' குருவே அந்த பூனை இறந்து விட்டது ''

'' முட்டாள்களே பூனை கட்டபடாமல் எப்படி பாடம் கற்பிப்பது ? நமது குரு பூனை கட்டிவைத்து அல்லவா பாடம் நடத்துவார் உடனடியாக அடுக்களைக்கு போய் அங்கே இருக்கும் பூனை ஒன்றை கொண்டுவந்து இங்கே கட்டுங்கள் என்று உத்தரவிட்டார் . எப்போதெல்லாம் பாடம் ஆரம்பிக்கப்படுமோ அப்போதெல்லாம் ஒரு பூனையை மெனெக்கெட்டு பிடித்து வந்து தூணில் கட்டிப்போட்டுவிட்டுத்தான் பாடத்தையே ஆரம்பித்தார்களாம்.

ஒரு பழக்கம் எப்படி யதார்த்தமாக வந்து பின்னர் சடங்காக மாறுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இல்லாத காரணங்களை ஏற்படுத்தி புதிய பழக்கங்களை உண்டாக்குவதும் இன்னொரு வகையான மூட நம்பிக்கை.

மாற்று மத சகோதரர்களின் நம்பிக்கைபடி ஆடி, மார்கழி மாதங்கள் பீடை மாதங்கள் என்றும், புதிதாக திருமணம் முடித்த புதுமண தம்பதிகளைகூட பிரித்துவைத்து விடுவதும் அவர்களின் பழக்கம். இந்த நம்பிக்கையை கடைபிடிக்கும் நமது முஸ்லிம்களும் ஸபர் மாதத்தை பீடை என்றும் திருமணம் கத்னா போன்ற சுப காரியங்கள் செய்ய ஆகாது என்றும் கூறி புதுமண தம்பதிகளைக் கூட இம்மாதத்தில் பிரித்துவைத்து விடுவதும் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது.


وقد انتشر في هدا الشهر بدع ومحدثات باطلة، منها عدم السفر فيه، وترك الزواج فيه،
قال صاحب كتاب البدع الحولية(.فكثير من الجهال يتشاءم بصفر ، وربما ينهى عن السفر فيه ،
. ولا شك التشاؤم بصفر، أو بيوم من أيامه، هو من جنس الطيرة المنهي عنها.
 فقد قال - صلى الله عليه وسلم-:(لا عدوى، ولا طيرة، ولا هامة ، ولاصفر)


''தொற்று நோய் என்பது கிடையாது. பறவைகளைக் கொண்டு சகுனம் பார்ப்பதும் கிடையாது. ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கூடாது. 'ஸஃபர்' மாதம் பீடை என்பதும் கூடாது.''என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( புகாரி 5707)


தொற்று நோய் :

அன்றைய அறியாமைக் கால மக்கள் நோய் உண்டாகக் காரணமே தொற்றுதான் என்றும் இறைவனுக்கு இதில் தொடர்பில்லை என்றும் கருதி வந்தனர். இந்த தவறான கருத்தை களைந்திடும் முகமாகவே நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் ' தொற்று நோய் கிடையாது' என்றார்கள்.
அதாவது நோயாளியுடன் சேர்ந்திருப்பது மட்டும் நோய்வரக் காரணமல்ல. இறைவனின் நாட்டமும் இருந்தால்தான் நோய் பரவும். அதே நேரத்தில் நோயாளியைத் தாக்கியுள்ள தொற்றுக் கிருமிகள் (வைரஸ்) காற்றுவாயிலாகவும் நீர்வாயிலாகவும் இடம் பெயர்ந்து மற்றவர்களுக்கும் நோய் பரவ இடமுண்டு. இவ்வாறு கிருமிகள் இடம் பெயர்வதால் நோய் பரவ வேண்டும் என்பது இறைவனின் ஆணையாகவும் இருக்கலாம். எனவேதான் 'தொழுநோயாளி போன்றோர்களிடமிருந்து விலகியிருங்கள்' என நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

உறுதியான இறைநம்பிக்கை உரியவர் எல்லா நிலைகளிலும் இறைவனையே சார்ந்திருப்பார். வெளிக்காரணிகளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டார். வெளிக்காரணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இறை சக்தியின் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் பலவீனர்களாக உள்ளவர்களும் இருக்கின்றனர். இவ்வாறு இரு தரத்தில் உள்ள மக்களையும் இணைத்து தொற்றுநோய்பற்றி இஸ்லாம் ஓர் அழகிய தீர்வைத் தந்துள்ளது. துன்பத்திலும் இன்பத்திலும் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும் என நம்பிக்கையை வலியுறுத்துகிறது.
அல்லாஹ்வின் நாட்டமின்றி எந்த நோயும் தீண்டாது என்ற கருத்தில் 'தொற்றுநோய் கிடையாது' என்றும் இவ்வுலகில் அல்லாஹ் ஏற்படுத்திய காரண, காரணிகளுக்கு உட்பட்டுதான் மனிதன் நடந்து கொள்ளவேண்டும், நெருப்பை கண்டு பயப்படுவது இறை நம்பிக்கைக்கு முரணானதல்ல என்பது போன்று தொழுநோயாளிகளைக் கண்டு ஒதுங்கியிருப்பது தவறல்ல என்றும் மார்க்கம் நமக்கு தெளிவுபடுத்துகிறது. இதற்கு சான்றாக இந்த நபிமொழி அமைகிறது:

உமர் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். சர்ஃப் எனும் இடத்தை அவர்கள் அடைந்த போது ஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவி இருப்பதாக அவர்களுக்கு செய்தி எட்டியது. அப்போது அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் 'ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கு நீங்களாகப் போகாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் பரவிவிட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) நீங்கள் வெளியேறாதீர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தார்கள்.
                       ( புகாரி )


பறவை சகுனம்:


وكان أهل الجاهلية يتطيرون بالسوانح والطيور، فينفِّرون الظباء والطيور؛ فإن أخذت ذات اليمين تبركوا به، ومضوا في سفرهم وحوائجهم, وإن أخذت ذات الشمال رجعوا عن حاجتهم وسفرهم، وتشاءموا به, فكانت تصدهم في كثير من الأوقات عن مصالحهم.

அறியாமைக் கால அரபுகள் பயணம் புறப்பட்டால் அல்லது சுப காரியம் தொடங்கினால் பறவைகளைப் பறக்கவிட்டு சகுனம் பார்ப்பார்கள். பறவை வலது புறம் பறந்தால் நல்ல சகுனம். புறப்படலாம் .
இடது புறம் பறந்தால் அபசகுனம். காரியமும் பயனமும் தடைபட்டுவிடும்.


وقال صلى الله عليه وسلم : (( من ردته الطيرة عن حاجته فقد أشرك )) ، قالوا : فما كفارة ذلك ؟ قال : (( أن تقول: اللهم لا خير إلا خيرك ، ولا طير إلا طيرك ، ولا إله غيرك ))

''சகுனம் பார்த்து ஒரு காரியத்திற்கு தடைபோட்டால் அவன் இணைவைத்துவிட்டான்''. அண்ணலார் ஸல் இவ்வாறு கூறியபோது அருமைத் தோழர்கள் கேட்டார்கள்: ''அப்படியென்றால் அதற்கு என்னதான் பரிகாரம்?''

''அல்லாஹ்வே உனது நலவைத் தவிர வேறு நலவு இல்லை; உனது சகுனத்தைத் தவிர வேறு சகுனம் இல்லை; உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. என்று சொல்லிவிட்டு செய்யவேண்டிய காரியத்தை செய்யவேண்டியதுதான்.''

பூனை குறுக்கே வருவது , விதவை எதிரே வருவது நல்லதல்ல
எனவும் காலையிலே கழுதை முகத்தில் விழிப்பது நல்லதென்றும் நம்பக்கூடியவர்கள் நம்மிலே நிறைய உண்டு.

''நாம் ஒரு காரியமாக போகிறோம்; பூனை ஒரு காரியமாக போகிறது
 நாம் செல்கிறபோது பூனை எப்படி குறுக்கே வரலாம் என்று நினைத்து காரியத்தை நாம் தள்ளிப் போடுகிறோம். ஆனால் அந்த பூனை, ''நாம் செல்கிறபோது இந்த மனிதன் குறுக்கே வந்துவிட்டானே என்று நினைத்து தன் காரியத்தை தள்ளிப்போடுவதில்லை.''

ஒரு ராஜா இருந்தார். அவருக்கு மூடநம்பிக்கை அதிகம். ஒரு முறை அமைச்சர்,'கழுதை முகத்தில் விழித்தால் யோகம் 'என்று சொல்ல உடனே ஒரு கழுதையை அரண்மனைக்கு அழைத்து வரச்சொன்னார்
ராஜா .அதற்கு,

இன்னொரு அமைச்சரோ, ''அரண்மனைக்கா வேண்டாம் மன்னா,கழுதை இருக்கும் இடம் குட்டிசுவராகிவிடும்"என்று எச்சரிக்க  அதையும் நம்பிய மன்னர்,வேறு ஒரு ஏற்பாடு செய்தார். அதாவது..ஒரு சலவைத்தொழிலாளி தினமும் ராஜா விசிக்குமநேறதுக்கு தன்னுடைய கழுதையை அரண்மனைக்கு அழைத்து வருவது என்று முடிவானது. தினமும்

கழுதை அழைத்துவரபட்டது. ஆனால் போகும்போது சலவைத்தொழிலாளி நமட்டுச்சிரிப்போடு செல்வதை கவனித்த அரண்மனைக்காவலாளி,''ஏன் சிரிக்கிறாய் ?'' என்று கேட்டான். அதற்கு,'''கழுதை முகத்தில் விழித்தால் யோகம் என்றாl பிறந்ததில் இருந்தே அதன்முகத்தில் விழிக்கும் எனக்கு குடிசை யோகத்தை தவிர வேறு எந்த யோகமும் கிடைக்கவில்லையே! அதைபோல,கழுதை இருக்கும் இடம் குட்டிசுவர் என்றால்,என் வீடும் அப்படி ஆகியிருக்கே வேண்டுமே! பொறுப்புகளை சரியாக கவனிக்காமல்,இப்படி மூட நம்பிக்கைகளை வளர்த்துகொண்டால்,கழுதை வராமலே அரண்மனையும் குட்டிசுவராகிவிடும். இதை
நினைத்துதான் சிரித்தேன் என்று சொல்லிவிட்டு கழுதையோடு நடந்தான்.
இதையெல்லாம் கவனித்த ராஜா தலை குனிந்தார்.

அதே போல வீட்டுத் தலைவாசலுக்கு நேரெதிரில் சுவர் இருக்கக்கூடாது அப்படி சுவரில் விழித்துக்கொண்டு ஒரு காரியத்திற்கு போனால் அது வெற்றியாகாது என்று சொல்வோரும் உண்டு. ஒருவேளை யதார்த்தமாக சுவர் அமைந்துவிட்டால் அந்த சுவற்றில் வாசலுக்கு நேராக ஒரு சங்கு அல்லது கண்ணாடியைப் பதிக்கிறார்கள். அதில் விழித்துக்கொண்டு போனால் அந்த அபசகுணம் மாறிவிடும் என்று.
அண்ணல் நபி ஸல் இதற்கெல்லாம் அழகிய தீர்வைத் தந்துவிட்டார்கள்:


عنْ أنسٍ رضيَ اللَّهُ عنه قال : قال : رسولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « مَنْ قَالَ يعنِي إذا خَرَج مِنْ بيْتِهِ : بِسْم اللَّهِ توكَّلْتُ عَلَى اللَّهِ ، ولا حوْلَ ولا قُوةَ إلاَّ بِاللَّهِ ، يقالُ لهُ هُديتَ وَكُفِيت ووُقِيتَ ، وتنحَّى عنه الشَّيْطَانُ » رواه أبو داودَ والترمذيُّ ، والنِّسائِيُّ وغيرُهم

''வீட்டை விட்டுப் புறப்படும்பொழுது بِسْم اللَّهِ توكَّلْتُ عَلَى اللَّهِ ، ولا حوْلَ ولا قُوةَ إلاَّ بِاللَّهِ
இவ்வாறு கூறிவிட்டு சென்றால்، ''உனக்கு வழிகாட்டப்படும்; பாதுகாப்பு வழங்கப்படும்'' என்று வானவர்கள் மூலம் அவருக்கு சுபச் செய்தி கூறப்படும் என்றார்கள் நபி (ஸல்) இதை ஓதிவிட்டு அல்லாஹ்வின்மீது பரிபூரண நம்பிக்கையுடன் சென்றால் எதிரில் இருப்பது சுவரா? பூனையா? விதவையா? கழுதையா என்றெல்லாம் சகுனம் பார்க்கத் தேவையில்லை. வெற்றி வசப்படும்!

முகலாய மன்னர் அக்பருக்கு மூட நம்பிக்கை நிறைய உண்டு.
ஒருநாள் அதிகாலையில் அரண்மனையின் உப்பரிகைக்கு வந்து வீதியை நோக்கினார். தெருவில் ஒரு ஏழை விவசாயி கண்ணில் பட்டான். அதற்குப் பிறகு முகச் சவரம் செய்துகொண்டிருந்தபொழுது யதார்த்தமாக சின்னக் கீறல் ஏற்பட உடனே ஆவேசப்பட்டார். ஆணையிட்டார்:
அந்த ஏழையை இழுத்துவாருங்கள் காலையில் அவன் முகத்தில் கண் விழித்ததால்தான் கன்னத்தில் இந்த காயம். அவனைப் போல ராசிகெட்டவனெல்லாம் இந்த நாட்டில் இருக்கக்கூடாது அவனுக்கு மரண தண்டனை தாருங்கள்''

அந்த அப்பாவி இழுத்து வரப்பட்டு கழுத்திலே கயிறு மாட்டப்பட்டான் கடைசி விநாடி . கலங்காமல் கண்ணீர் விடாமல் சிரித்துக்கொண்டிருந்தான். காரணம் கேட்டதற்கு அவன் கூறினான்: 

என் முகத்தில் மன்னர் விழித்ததால் கன்னத்தில் ஒரு  சிறிய காயம்தான் ஏற்பட்டது. ஆனால் இன்று அவர் முகத்தில் நான் விழித்ததால் என் தலையே போகப்போகிறது அப்படியானால் யார் ராசி இல்லாதவர் என்று யோசித்தேன் சிரிப்பை அடக்கமுடியவில்லை என்றான்
மன்னர் அசடு வழிந்தார். தண்டனையை ரத்து செய்தார்.

ஆந்தை சகுனம்:

ஒரு வீட்டில் ஆந்தை கத்தினால், அவ்வீட்டில் எவருக்கேனும் மரணம் சம்பவிக்கும். என்றும் காக்கை கத்தினால் விருந்தாளி வருகை என்றும் சில நம்பிக்கை உண்டு.
ஒரு சிறுவன் தந்தையிடம் கேட்டான்:
வாப்பா.. காக்கை கத்தினால் விருந்தாளி வருவாங்களா ?
தந்தை சொன்னாராம்:
'' ஆமாப்பா.. காக்கை கத்தினால் விருந்தாளி வருவாங்க.. உங்க அம்மா கத்தினால் விருந்தாளி போய்டுவாங்க..''

நாயகம் ஸல் கூறினார்கள்:


 (إذا سمعتم صياح الديك فاسألوا الله من فضله فإنها رأت ملكاً، وإذا سمعتم نهيق الحُمر- وفي اللفظ الآخر: ونباح الكلاب- فتعوذوا بالله من الشيطان فإنها رأت شيطاناً).

''அதிகாலை சேவல் கூவினால் அல்லாஹ்விடம் அருளை வேண்டுங்கள் ஏனெனில் அது அருளை சுமந்துவரும் வானவர்களைக் கண்டுதான் கூவுகிறது. நாய் ஊளையிடுவதை، கழுதை கத்துவதை செவியுற்றால் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு தேடுங்கள் ஏனெனில் அது ஷைத்தானைக் கண்டிருக்கிறது '' 

இந்தளவிற்குத்தான் மார்க்கத்தில் உள்ளதே தவிர ஆந்தையின் சப்தம் அபசகுனத்தை அறிவிக்கும் என்று எந்த குறிப்பும் மார்க்க்கத்தில் இல்லை.

மொத்தத்தில் சகுனம் பார்க்காமல் இறைநம்பிக்கையுடன் காரியம் ஆற்றுகிறவர்கள் மறுமையில் விசாரணையின்றி சுவனம் செல்வார்கள் :


عن النبي صلى الله عليه وسلم قال : "عُرِضَتْ عَلَيَّ الأُمَمُ فَجَعَلَ النَّبِيُّ وَالنَّبِيَّانِ يَمُرُّونَ مَعَهُمْ الرَّهْطُ وَالنَّبِيُّ لَيْسَ مَعَهُ أَحَدٌ حَتَّى رُفِعَ لِي سَوَادٌ عَظِيمٌ قُلْتُ مَا هَذَا ؟ أُمَّتِي هَذِهِ ؟ قِيلَ بَلْ هَذَا مُوسَى وَقَوْمُهُ ، قِيلَ انْظُرْ إِلَى الأُفُقِ فَإِذَا سَوَادٌ يَمْلأُ الأُفُقَ ثُمَّ قِيلَ لِي انْظُرْ هَا هُنَا وَهَا هُنَا فِي آفَاقِ السَّمَاءِ فَإِذَا سَوَادٌ قَدْ مَلأَ الأُفُقَ قِيلَ هَذِهِ أُمَّتُكَ وَيَدْخُلُ الْجَنَّةَ مِنْ هَؤُلاءِ سَبْعُونَ أَلْفًا بِغَيْرِ حِسَابٍ ثُمَّ دَخَلَ وَلَمْ يُبَيِّنْ لَهُمْ فَأَفَاضَ الْقَوْمُ وَقَالُوا نَحْنُ الَّذِينَ آمَنَّا بِاللَّهِ وَاتَّبَعْنَا رَسُولَهُ فَنَحْنُ هُمْ أَوْ أَوْلادُنَا الَّذِينَ وُلِدُوا فِي الإِسْلامِ فَإِنَّا وُلِدْنَا فِي الْجَاهِلِيَّةِ ؟ فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَرَجَ فَقَالَ : هُمْ الَّذِينَ لا يَسْتَرْقُونَ وَلا يَتَطَيَّرُونَ وَلا يَكْتَوُونَ وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ .. ". رواه البخاري 5270

''அனைத்து நபிமாரின் சமுதாயமும் எனக்கு எடுத்துக் காண்பிக்கப்பட்டது.......... அதில் ஒரு பெருங்கூட்டம் என் சமுதாயம் என சொல்லப்பட்டது. அதுமட்டுமல்ல.. என் சமுதாயத்தில் எழுபதாயிரம் (70000) பேர் விசாரணையின்றி சுவனம் நுழைவார்கள் என்றும் கூறப்பட்டது..........................
அவர்கள் எதற்கெடுத்தாலும் மந்திரிக்காதவர்கள்; சகுனம் பார்க்காதவர்கள்; இறைவனின்மீது முழுநம்பிக்கை வைத்து செயலாற்றுபவர்கள்۔   (புகாரி)
       (மொழிபெயர்ப்பின் சுருக்கம்)


சஃபர் : சகுனமும் கூடாது சங்கடமும் கூடாது

ஸஃபருல் முழஃப்பர் (வெற்றி வாய்ந்த ஸஃபர்) என்று சிறப்பித்தழைக்கப்படும் மாதத்தை அரபுகள் அன்று பீடையாகக் கருதினர்.
அதுமட்டுமல்ல.. ஸஃபர் மாதத்தில் ஏகப்பட்ட ஏமாற்று வேலைகளும் தகிடுதத்தங்களும் செய்தனர்.


عن ابن عباس- رضي الله عنهما – قال : ((كانوا يرون أن العمرة في أشهر الحج من أفجر الفجور في الأرض ، ويجعلون المحرم صفر ، ويقولون : إذا برأ الدبر ، وعفا الأثر ، وانسخ صفر ، حلَّت العمرة لمن اعتمر . قدم النبي صلى الله عليه وسلم وأصحابه صبيحة رابعة مهلين بالحج فأمرهم أن يجعلوها عمرة ، فتعاظم ذلك عندهم ، فقالوا:يا رسول الله !أي الحل ؟. قال:(( حل كله)

ஹஜ்ஜுடைய மாதங்களில் உம்ராச் செய்வது பூமியில் நடக்கும் பாவங்களிலேயே மிகக் கொடிய பாவம் என (அறியாமைக்கால) மக்கள் கருதினர். (துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் என மூன்று மாதங்கள் போர் செய்ய தடை செய்யப்பட்ட மாதங்களாக தொடர்ந்து வந்ததால்) முஹர்ரம் மாதத்திற்கான தடையை ஸஃபர் மாதத்திற்கு மாற்றினார்கள்.
'(ஹஜ் பிரயாணத்தில்) ஒட்டகங்களின் முதுகில் உள்ள சுமைகளின் வடு காயந்து மறைந்து ஸஃபர் மாதமும் கடந்து விட்டால் உம்ராச் செய்ய நாடுபவருக்கு உம்ராச் செய்வது கூடும்' எனக் கூறி வந்தனர். நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காம் நாள் காலை ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தவர்களாக மக்கா நகருக்கு வந்தபோது, நபி (ஸல்) அவர்கள் மக்களின் இஹ்ராமை உம்ராவிற்குரியதாக மாற்றும்படி கட்டளையிட்டார்கள். இது தோழர்களுக்கு மிகக் கடுமையானதாகத் தெரிந்தது. இதனால் நபி (ஸல்) அவர்களிடம் ' அல்லாஹ்வின் தூதரே! (இவ்வாறு உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமிலிருந்து விடுபடுவதால் எந்த செயல்கள் அனுமதிக்கப்படும்? எனக் கேட்டனர். அதற்கு ' அனைத்து (விலக்கப்படாத) செயல்களும் அனுமதிக்கப்படும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.   (நூல்: புகாரி 1564)


அன்றைய அரபுகள் சஃபரை மட்டுமல்ல.. ஷவ்வால் மாதத்தையும் பீடை மாதமாக கருதி வந்தனர்,  ஷவ்வால் மாதத்தில் எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தாது தடுத்து வந்தனர், இந்த மூடநம்பிக்கையை தீயிலிட்டு கொளுத்தும் வகையில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்,


عن عائشة قالت تزوجني رسول الله صلى الله عليه وسلم في شوال وبنى بي في شوال فأي نساء رسول الله صلى الله عليه وسلم كان أحظى عنده مني (مسلم، احمد)

'' நான் ஷவ்வால் மாதத்தில்தான் திருமணம் முடிக்கப்பெற்றேன், ஷவ்வாலில்தான் என் இல்லற வாழ்க்கையை துவங்கினேன், நபி (ஸல்) அவர்களுக்கு என்னைவிட விருப்பமுள்ள மனைவியாக இருந்தது யார்? என்று கூறினார்கள.    ( முஸ்லிம், அஹ்மத்)

ஷவ்வால் பீடை மாதம் என்றால் என் தாம்பத்ய வாழ்க்கை சீரழிந்திருக்கவேண்டுமே.. என்னை விட நபியோடு சிறப்பாக வாழ்ந்தவர்கள் யார்?- என்பது அவர்களின் கேள்வி.


وقصدت عائشة بهذا الكلام رد ما كانت الجاهلية عليه ، وما يتخيله بعض العوام اليوم من كراهة التزوج والتزويج والدخول في شوال ، وهذا باطل لا أصل له ، وهو من آثار الجاهلية ، كانوا يتطيرون بذلك لما في اسم شوال من الإشالة والرفع . 

பீடை மாதம் என்று ஒன்று இல்லை என்பதை நிரூபித்து நிலைநிறுத்திக் காட்டிய அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை போல் இன்றைய முஸ்லிம்கள் மத்தியில் ஸபர் பீடையில்லை என்று நாமும் நிரூபித்துக் காட்ட முயற்சி செய்வோமேயானால் இதனை முழுமையாக ஒழித்துவிடலாம் இன்ஷா
அல்லாஹ்.

அதுசரி.. சஃபரை மக்கள் பீடையாகக் கருதுவதற்கு ஏதேனும் அடிப்படை இருக்கவேண்டுமே..
நெருப்பில்லாமல் புகையாதே..
உண்மைதான்.. ஒரு சில அடிப்படைகளைக் கொண்டுதான் இந்த மாதத்தை பீடையாக கருதுகின்றனர்.

இந்த மாதத்தின் இறுதியில்தான் நபி நோய்வாய்ப்பட்டு குளித்தார்கள்
ஆது சமுதாயம் அழிக்கப்பட்ட நகசு நாட்கள் என்று திருக்குர்ஆன் குறிப்பிடுவது இந்த நாட்களைத்தான்.
லட்சக்கணக்கான முஸீபத்துகள் பீடைகள் பூமிக்கு இறங்குவது இந்த மாதத்தில்தான்.

இப்படி அடுக்கப்படுகின்றன பல காரணங்கள்.

சில ஆரிஃபீன்கள் (ஞானிகள்) கூட கூறியுள்ளனர்:


"ذكر بعض العارفين أنه ينزل في كل سنة ثلاثمائة وعشرون ألفاً من البليات, وكل ذلك في يوم الأربعاء الأخير من صفر, فيكون ذلك اليوم أصعب أيام السنة كلها, فمن صلى في ذلك اليوم أربع ركعات يقرأ في كل ركعة فاتحة الكتاب مرة, وسورة الكوثر سبع عشر مرة, والإخلاص خمس عشر مرة, والمعوذتين مرة,  لم يصبه شر ذلك اليوم"

ஒவ்வொரு வருடமும் மூன்று இலட்சத்து இருபதாயிரம் சோதனைகள் - துன்பங்கள் இறங்குகின்றன அவை யாவும் சபர் மாதத்தின் இறுதிப் புதன் கிழமையிலேயே இறங்குகின்றன. அந்த வருட நாட்களில் இந்நாள் மிகவும் கஷ்டமானது. அன்று யாராவது நான்கு ரக்அத் தொழுது நான்குரக்அத்திலும் "பாத்திஹா சூரா" ஓதிய பின் இன்னா அஃதைனாகல் கவ்தர் என்ற சூரத்தை 17 தடவைகளும், குல்ஹுவல்லாஹ்வை பதினைந்து தரமும் , குல் அஊது பிறப்பில் பலக் ஒரு தரமும், குல் அஊது பிறப்பின் நாஸ் ஒரு தரமும் ஓதினால் அந்த வருடம் முழுவதும் அவன் சகல பலாய்களிலிருந்தும் பாதுகாக்கப் படுவான்.


இதை ஆதரித்தும் எதிர்த்தும் அறிஞர்கள் பலர் கருத்துவேறுபாடு கொண்டிருப்பதால் அடியேன் இதுகுறித்து விவாதிக்க விரும்பவில்லை. ஒரு நாள் மட்டும் என்று ஆரிஃபீன்கள் கூறியதை வைத்துக்கொண்டு அந்த மாதம் முழுவதையும் பீடை என்று சொல்வது சரியா? தெரியவில்லை.
அந்த முஸீபத்தை நீக்க இன்று மக்கள் சிலர் செய்யும் செயல்கள் சரியானதா என்று புரியவில்லை. ஒடுக்கத்து புதனில் புல் மிதித்தால்
நமது தலைவழியாக இறங்கிய பீடை கால்வழியாக சென்று புல்வழியாக பூமியில் இறங்கிவிடும் என்று நம்புகின்றனர். இன்னும் சிலர் கடலில் குளித்து பீடையை இறக்கி வைக்கின்றனர். இது குறித்து விளக்கமென்ன?
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி கிராமத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடக்கும். அந்த திருவிழாவின் சிறப்பு என்னவென்றால், மார்கழி மாத பீடையைப்போக்குவதற்காக பக்தர்கள் அந்த கோவிலில் குவிகின்றனர். பீடை எப்படி போகும் என்று கேட்கிறீர்களா?. அந்த கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் அனைவருக்கும் விளக்குமாறு மற்றும் முரத்தால் தலையிலேயே அடிவிழுகின்றது. இப்படி கோவிலில் உள்ள அரவாணி வேடம் பூண்டவர்களிடத்தில் விளக்குமாத்தாலும், முரத்தாலும் அடிவாங்கினால் மார்கழி மாத பீடை கழிந்து விடுமாம்.

அதுபோல நம் சமுதாயமும் பீடை கழிக்க பல்வேறு வழிமுறைகளைக் கையாள்கிறதே.. இது சரிதானா? இதுகுறித்து தகுந்த விளக்கம் கருத்துரையில் குறிப்பிட்டால் ஏற்கப்படும்.




நன்றி ;-- சதக் மஸ்லகி ஹஜ்ரத்.

வெளியீடு ;-மன்பயீ ஆலிம்.காம்.

சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.