Wednesday, April 20, 2016

சித்தார் கோட்டையில் அஜ்மீர் நாயகம் மௌலிது ஷரீஃப் மிகச் சிறப்பாக நடைபெற்றது !!!


முதஅவ்விதன்! முபஸ்மிலன்! 
முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!
பேரன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14-04-2016 நேற்று 
சித்தார் கோட்டை ஜாமிஆ மஸ்ஜித் ஜன்னத்துல் ஃபிர்தௌஸில்,
அஜ்மீர் நாயகம் மௌலிது ஷரீஃப் மிகச்சிறப்பாக 
நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்..


சித்தார் கோட்டையில் அஜ்மீர் நாயகம் மௌலிது ஷரீஃபை,
ஒவ்வொரு வருடமும் சமுதாய ஒளி விளக்கு வள்ளல் அல்ஹாஜ் 
மர்ஹூம் சீ.தஸ்தகீர் சாஹிப் அவர்கள்தான் நடத்துவார்கள்.


நேற்று அஜ்மீர் நாயகம் மௌலிது ஷரீஃப் ஓதி,மறைந்த 
சமுதாய ஒளி விளக்கு வள்ளல் அல்ஹாஜ் மர்ஹூம் 
சீ.தஸ்தகீர் சாஹிப் அவர்களுக்கு துஆச்செய்யப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

சமுதாய ஒளிவிளக்கு வள்ளல் அல்ஹாஜ் சீ.தஸ்தகீர் சாஹிப் அவர்கள் மறைவு !!!

பேரன்புடையீர்! 
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சித்தார் கோட்டை,சமுதாய ஒளிவிளக்கு வள்ளல் 
அல்ஹாஜ் சீ.தஸ்தகீர் சாஹிப் அவர்கள் 12-04-2016 அன்று 
மாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை 
அடைந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா 
இலைஹி ராஜிஊன்.அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்
 13-04-2016 புதன் கிழமை மாலை அஸர் தொழுகைக்குப்பிறகு  
பெரிய பள்ளிவாசல்  கப்ருஸ்தானில்  நடைபெற்றது.


வள்ளல் அவர்களைப் பற்றி சில

சென்ற மாதம் 18-03-2016 அன்று சித்தார் கோட்டையில் 
மீலாதுப் பெருவிழாவை வள்ளல் அவர்கள் நடத்தி வைத்தார்கள்.


மறைந்த வள்ளல் அவர்கள்,சித்தார் கோட்டையின் 
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் தூணாக வாழ்ந்தவர்கள்.
யா அல்லாஹ் இவர்களை போல நல்ல மனிதர்கள் பலரை,
சித்தார் கோட்டைக்கு வாரி வழங்குவாயாக ஆமீன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹும் அவர்களின் நல்லறங்களை 
ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய
 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய 
வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் 
பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், 
உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' 
எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் சித்தார் கோட்டை 
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய 
தளத்தினர் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்!

உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் 
அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் 
கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்...

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மிஃராஜ் சென்ற சிறப்பை பற்றி நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்



மிஃராஜு சென்ற நாயகம் மேலோனைக் கண்ட நபி நாயகம்

அல்ஹாஃபிழ் அஹ்மது அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி அவர்களின் மிஃராஜ் பயான் !!!



வரலாற்று ஆய்வாளரும்,காயல் பட்டிணம் முஅஸ்கருர் 
ரஹ்மான் அரபுக் கல்லூரிமுதல்வரும்,  கதீப் ஹஜ்ரத்   
மௌலானா மௌலவிஅல்ஹாஜ் அல்ஹாஃபிழ் 
அஹ்மது அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி அவர்களின் 
மிஃராஜ் பயான்.

மிஃராஜ் விண்ணேற்றப் பயணம் !!!





سُبۡحَـٰنَ ٱلَّذِىٓ أَسۡرَىٰ بِعَبۡدِهِۦ لَيۡلاً۬ مِّنَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ إِلَى
 ٱلۡمَسۡجِدِ ٱلۡأَقۡصَا ٱلَّذِى بَـٰرَكۡنَا حَوۡلَهُ ۥ لِنُرِيَهُ مِنۡ ءَايَـٰتِنَآ‌ۚ إِنَّهُ ۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ 


(அல்லாஹ்) மிகப் பரிசுத்த மானவன் அவன் முஹம்மது ( ஸல் ) என்னும் தன் அடியாரைக் ( கஅபாவாகிய ) சிறப்புற்ற பள்ளியிலிருந்து ( வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலிலுள்ள ) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான்.அவ்வாறு அழைத்துச் சென்ற ) நாம் அதனைச்சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடையச் செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப் பதற்காகவே (அங்கு) அழைத்துச் சென்றோம்.நிச்சயமாக ( உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் -17-1 )

மிஃராஜ் -- விண்ணகப் பயணம் உலக வரலாற்றிலும்,சமைய வரலாற்றிலும்,அது வரை நடந்திராத அது மாதிரி இது வரையும் நடக்காத அதி அற்புத பயணம்.நபிமார்களின் சரித்திரத்திலும் நிகழாத அதிசயமான ஒரு சம்பவம்.யாரும் அடையாத சிகரத்தை இதன் மூலம் நபி நாயகம் ( ஸல் ) அடைந்தார்கள். இதனால் மிஃராஜ் பற்றி சொல்ல வந்த அல்லாஹ் ஆச்சரியமானதைக்குறிக்கும் சுப்ஹானவைக் கொண்டு தொடங்குகின்றான்.

நாம் வாழும் இப்பூ பாகத்திலிருந்து சூரியன் 9 கோடியே 30 லட்சம் மைல் தொலைவில் உள்ளது.அங்கிருந்து நமது பூமிக்கு சூரிய ஒளி 8 நிமிடத்தில் வந்து சேருகிறது.ஒளியின் வேகம் ஒரு செகண்டுக்கு ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 282 மைல் தூரமாகும்.இந்த ஒளி வேகத்தில் நமக்கு அருகிலிருக்கும் நட்சத்திரத்தின் ஒளி பூமிக்கு வர 4 1/2   (நாளரை) வருடமாகிறது.மணிக்கு பத்தாயிரம் மைல் வேகத்தில் பயணிக்கும் ஒரு ராக்கெட் அருகிலிருக்கும் அந்த நட்சத்திரம் வரை போய் சேர எழுபதாயிரம் வருடம் வரை ஆகும். இந்த நட்சத்திரத்தை மட்டுமல்ல தூரமாக இருக்கும் எல்லா நட்சத்திரங்களையும்,ஏழு வானங்களையும் கடந்து சித்ரத்துல் முன்தஹாவை அடைந்து அங்கிருந்து மேலும் முன்னேறி அல்லாஹ்வை அடைந்து கண்டு அலவலாவி வந்த நமது நாயகம் (ஸல்) அவர்களின் இந்த விண்ணேற்றப் பயணம் ஒரு அதிசயம் இல்லாமல் வேறு என்ன? இவ்வளவு தூரத்தில் சென்று இவ்வளவு உயரத்தில் உயர்ந்து நரகம் கண்டு,சொர்க்கம் சுற்றிப் பார்த்து முன்னதாக,பைத்துல் முகத்தஸிலும்,வானத்திலும்,நபிமார்களை,மலக்குமார்களை கண்டு,அவர்களுடன் உரையாடி,அவர்களுக்கு இமாமத் செய்து தொழ வைத்து,நிறைவாக இறை தரிசனம் பெற்று திரும்பிய இந்த சம்பவம் நீண்ட நெடிய நேரமோ,மாதக்கணக்கில,வருடக்கணக்கிலோ நடந்த நிகழ்வல்ல.ஒரு இரவின் கொஞ்ச நேரத்தில் நடந்ததாக  '' லைலன் '' என்ற பதப்பிரயோகம் மூலம் குர்ஆன் தெளிவு படுத்துகிறது. '' லைலன் '' நக்கிரவாகும். ( பொதுப் பெயர்ச் சொல்லாகும் )  இது இரவின் சொற்ப சமையம் என்னும் பொருளை இங்கே தருகிறது.

படுத்த படுக்கையின் சூடு கூட ஆறவில்லை.ஒழுச்செய்த தண்ணீரின் சலனம் கூட அடங்கவில்லை.கதவின் தாழ்பாலின் அசைவுகள் கூட நிற்கவில்லை.அவ்வளவு சீக்கிரம் நடந்து முடிந்த சம்பவம் என்று ஹதீஸ் விவரிக்கிறது. '' ஒளியின் வேகத்தில் பயணிக்கிறவர்களுக்கு காலம் என்பது இயங்குவதில்லை '' என்று 19- ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொன்னான்.உதாரணத்திற்கு -- ஒரு நண்பருக்கு 35 வயது.அவருடைய மனைவிக்கு 30 வயது.அவர் மட்டும் தனியே ஒளிவேகத்தில் பயணிக்கும் ஊர்தியில் கிளம்பிப் போகிறார்.ஒரே ஒரு நாள் மட்டும் ஒளியின் வேகத்தில்,விண்வெளியில் பயணிக்கிறார்.மறு நாள் ஊர் திரும்புகிறார் நண்பர்.அப்போது அவரை வரவேற்க வந்த மனைவிக்கு வயது 90.ஆனால் நண்பருக்கோ 35 வயதிலிருந்து ஒரே ஒரு நாள் மட்டும் கூடியிருக்கிறது.ஒளியின் வேகத்தில் பயணிக்கிறவர்களுக்கு இது மாதிரியான வினோதங்கள் சகஜம்.

ஹளரத் உம்மு ஹானி (ரலி) அவர்களின் வீட்டுக்கூரையைப் பிய்த்துக்கொண்டு இறங்கிய ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அங்கே படுத்திருந்த பெருமானாரை எழுப்பி அழைத்துக்கொண்டு கஃபாவிற்கு வருகிறார்கள்.அங்கே நபி (ஸல்) அவர்களின் நெஞ்சை பிளந்து இதயத்தை தனியாக எடுத்து சொர்க்கத்திலிருந்து தான் கொண்டு வந்திருந்த தங்க கிண்ணத்தில் வைத்து ஸம் ஸம் நீரால் கழுவினார்கள்.இன்று இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுவதற்கு இந்த  ஹதீஸ் நல்ல முன்னுதாரணம்.சொர்க்கத்து நீரான மாவுல் கவ்ஸரையோ,தஸ்னிம் ஓடைத் தண்ணீரையோ ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கொண்டு வந்து கழுவாமல் ஸம் ஸம் நீரால் கழுவியது ஸம் ஸமின் சிறப்பை பறைசாட்ட போதுமான சான்று.கழுவிய நீரை ஸம் ஸம் கிணற்றில் ஊற்றப்பட்டதால் ஸம் ஸம் கிணறும் வற்றாமல் வளம் குறையாமல் குடிக்கும்போது நாடிய நாட்டத்தை நிறைவேற்றும் அற்புத ஜலமாக நோயைக்குணப்படுத்தும் புனித தீர்த்தமாக இருக்கிறது.இதன் மூலம் ஸம் ஸம் தன்னைக் கழுவி சுத்தப்படுத்திக்கொண்டது.

மிஃராஜ் பயணத்திற்கு முன்பு பெருமானார் (ஸல்) அவர்களின் இதயம் ஏன் கழுவப்பட்டது ? விண்வெளி வீரர்களைப் பார்த்தால் அவர்கள் தங்களது விண்வெளி பயணத்திற்கென பிரத்யேக விஷேச ஆடை அணிந்திருப்பார்கள். அதன் எடை மட்டும் 200 பவுண்ட் இருக்கும்.சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் தன்னுடன் சேர்த்து பொறுத்தியிருப்பர்.காற்று  மண்டலத்தை தாண்டி நெருப்பு மண்டலத்தை கடந்து சென்ற நாயகம் ( ஸல் ) அவர்கள் இது மாதிரியான எந்த ஒரு ஆடையையும்,சுவாசிப்பதற்கு தேவையான எந்த ஆக்ஸிஜன் சிலிண்டரையும் தன்னுடன் இணைத்துக் கொள்ளவில்லை.விண்வெளி ஓடத்தில் வீரர்களுக்கு என்று விஷேசமான இருக்கைகள் இருக்கும்.வெளியில் ஏற்படும் எந்த குலுக்கத்திற்கும் அவர்கள் குலுங்கமாட்டார்கள்.கலத்தை உந்திச் செலுத்தும் ராக்கெட் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு சென்ற பிறகு அதன் ஒரு பகுதி கழற்றி விடப்படும்.அப்போது ஏற்படும் சப்தம் சாதாரணமாக யாரும் கேட்டால் இறந்து விடுவர்.இதுமாதிரியான எந்தப் பாதிப்பும்,விண்வெளிவீரருக்கு வராத விதத்தில் கலத்தின் உள்வடிவம் கவர் செய்யப்பட்டிருக்கும். ஆனால் நபியவர்கள் சென்ற புராக் வாகனம் வெளியே கவர் செய்யப்படாத ஒரு வெளிப்புற வாகனம்.இவ்வளவு வேகத்தில் காற்றோடு உரசிக்கொண்டு சென்றபோதும்,நெருப்பு மண்டலத்தை தாண்டிச் சென்ற போதும் நெருப்பு பிடிக்கவில்லை.காற்றழுதத் தாழ்வு மண்டலத்தை தாண்டி சென்ற சர்தார் நபி (ஸல்) மூச்சு விடுவதில் எந்த சிரமமும் படவில்லை.

ஏனென்றால்,நபியின் இதயம் கழுவப்பட்டது.அதாவது இதயம் எல்லா இடத்திலும் எல்லா காலத்திலும்,எல்லா சமையத்திலும் இயங்குவதற்கு தோதுவாக இதயமே மாற்றப்பட்டது.ஆக்ஸிஜன் இல்லாமலும் சுவாசிப்பதற்கு தோதுவாக,வசதியாக அவர்களின் இதயம் ஸம் ஸமில் கழுவி மாற்றப்பட்டது.நம்மைப்போல மூச்சுவிடுவதற்கு அவர்களுக்கு ஆக்ஸிஜன் அவசியம் இல்லை.அது இருந்தாலும் இல்லாவிட்டாலும்,அவர்களால் சுவாசிக்கமுடியும்.நெருப்பைக் கடந்து போனாலும் நெருப்பு அவர்களைத் தீண்டாது.நபி இப்ராஹீம் (அலை) அவர்களை தீயில் போட்டபோது அது குளிர்ந்த பூஞ்சோலையாக மாற்றப்பட்டது.என்று குர்ஆன் ( 21 ; 69 ) கூறுகிறது.ஆனால் நமது நாயகம் (ஸல்) அவர்களுக்கு நெருப்பு பூஞ்சோலையாக மாறவில்லை மாறவேண்டிய அவசியமும் இல்லை.நெருப்பு நெருப்பாக கொழுந்துவிட்டு எரிந்தாலும்,அதிலும் அவர்களின் இதயம் இயங்கும்.சுகமாக சுவாசிப்பார்கள்.அவர்கள் உடல் எரிந்து போகாது ஈமானாலும்,ஞானத்தாலும் நிரப்பப்பட்டு அந்த இதயம் திரும்ப நபி (ஸல்) அவர்களின் நெஞ்சில் வைத்து தைக்கப்பட்டது.'' என்று புஹாரி ஷரிபு உள்ளிட்ட ஹதீஸ் கிரந்தங்கள் விவரிக்கிறது.சக்தி வாய்ந்த ஈமான் ஞானத்தால் நிரப்பப்பட்ட நெஞ்சம் அமைந்த அந்த புனிதமான உடலை நெருப்பு தொடாது என்பது மட்டுமல்ல அவர்களின் உடல் பட்ட எந்த வஸ்துவையும் கூட தீ தீண்டாது.தீண்டியதும் இல்லை.

பத்து வருடம் பணிவிடை செய்த நபித்தோழர் ஹள்ரத் அனஸ் (ரலி) அவர்களிடம் ஒரு சுப்ரா -- 
(உணவு விரிப்பு )ஒன்று இருக்கிறது.அது அழுக்கானால் தண்ணீரால் கழுவாமல் அதை தீயில் எடுத்துப் போட்டு விடுவார்கள். தீ அந்த சுப்ராவைச் சுடாமல் சுத்தப்படுத்தி பளபளப்பாக்கும் என்ற ஹதீஸை மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) தனது மஸ்னவி ஷரீஃபில் பாடுவார்கள்.சுப்ராவை ஏன் நெருப்புச் சுடவில்லை? என்றால் அது அண்ணலார் (ஸல்)அவர்கள் பயன்படுத்தியது அவர்களின் புனித கரம் அதில் பட்டிருப்பதால் தீயின் ஜூவாலை அதை எரிக்கவில்லை என்று மௌலானா ரூமி தமது மஷ்னவி ஷரீஃபின் பாடலை முடிப்பார்கள்.ஒரு முறை அன்னை பாத்திமா (ரலி) அவர்கள் தனது கையால் மாவு பிசைந்து அதைத் தட்டி பரத்தி ரொட்டிச் சுட்டுக்கொண்டிருந்தார்கள்.தனது அன்பு மகளுக்கு உதவலாம் என்று தானும் தனது கரத்தால் மாவைத் தட்டி நபியவர்கள் கொடுக்க அதை வாங்கி அடுப்பில் வைத்தார்கள் பாத்திமா (ரலி) அவர்கள்.ஆனால் ரொம்ப நேரம் ஆகியும் மாவு வேகாமல் இருந்தது.அதை திரும்ப திரும்ப திருப்பி திருப்பி அடுப்பில் வைத்தும் அது வேகவே இல்லை.தான் தட்டிய மாவு வெந்து ரொட்டியானது ஆனால் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தட்டிய மாவு வேகவில்லையே என கவலையுடன்.கண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கனிவாக கூறியபோது மகளே! கவலை வேண்டாம்.எனது கரம் பட்டது பற்றி எரியாது என்பது உனக்குத் தெரியாதா? நான் தட்டி கொடுத்த மாவை  நெருப்பு சுட்டால்தானே ரொட்டி வேகும்.நெருப்பே சுடவில்லையெனில் எப்படி வேகும் எனக்கேட்டார்கள்.நாயகம் (ஸல்)அவர்கள் இந்த விண்வெளிப் பயணத்தில் காற்று மண்டலத்தைத் தாண்டி வெட்ட   வெளிக்குச் செல்கிறபோதும், அவ்வாறே திரும்பும் போதும், வெட்ட வெளியிலிருந்து காற்று மண்டலத்தில் பிரவேசிக்கும் போதும் ஏற்படும் உராய்வினால், உஸ்னம் அதிகமாகி நெருப்புப்பிடிக்கும். ஆனால் நாயகத்  திருமேனியை நெருப்புத் தொடவில்லை.என்பதால்தான் இந்த மிஃராஜ் பயணம் இந்த வகையிலும் அதிசயமாக இருக்கிறது.

என்றும் தங்களன்புள்ள.


மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )


வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்

புனித மிஃராஜ் சிந்தனைகள் !!!

 முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா!

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 
ஹிஜ்ரி 1436 ரஜப் பிறை 27 (15-05-2015) வெள்ளிக் கிழமை பின்னேரம்,சனிக்கிழமை இரவு மஃரிபு தொழுகைக்குப் பின்பு 
லைலத்துல் இஸ்ரா மிஃராஜ் மார்க்கச் சொற்பொழிவு,மற்றும் 
திக்ரு மஜ்லிஸ்,மலேசியத் தலைநகர்,selayang இமாம் கஜ்ஜாலி 
மதரஸாவில், selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் தலைமை இமாம்,,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ், 
ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி 
ஹஜ்ரத் அவர்கள் தலைமையில்  மிகச் சிறப்பாக
நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்.




மிஃராஜ் பயான் -- சித்தார் கோட்டை



சித்தார்கோட்டை அல் மஸ்ஜிதுல் ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் பெரிய பள்ளிவாசலில்  26-05-2014 அன்று புனிதம் நிறந்த மிஃராஜ் இரவை முன்னிட்டு சிறப்பு பயான் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

சிறப்புப் பேருரை 
மௌலானா மௌலவி அல்ஹாஜ்,
எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத்.
தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா,
கோலாலம்பூர், மலேசியா.

இஸ்ராஃ மிஃராஜின் இரகசியங்கள் !!!


மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின் 
15-05-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை.


தலைப்பு ;- இஸ்ராஃ மிஃராஜின் இரகசியங்கள் !!!

இஸ்ராஃ மிஃராஜ் ஓர் ஆய்வு !!!!

14-05-2015 அன்று பத்து கேவ்ஸ் மதரஸா சிராஜுல் ஹுதாவில், 
மிஃராஜ் இரவை முன்னிட்டு, சிறப்பு பயான் நடைபெற்றது. 

அதில் தமிழகத்தின் தாய்க் கல்லூரியாம் வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் முன்னால் பேராசிரியரும், 
நாடறிந்த நாவலர்,நற்றமிழ் வேந்தர்,
ஷரீஅத்தின் சங்கநாதம் தலைசிறந்த பேச்சாளர், 
உஸ்தாஸுல் அஸாதிதா மௌலானா மௌலவி 
அல்லாமா Aமுஹம்மது ஷப்பீர் அலீ ஃபாஜில் பாக்கவி 
ஹழரத் கிிப்லா அவர்கள்.சிறப்புரையாற்றினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்.


இஸ்ராஃ மிஃராஜ் ஓர் ஆய்வு PART 1 


இஸ்ராஃ மிஃராஜ் ஓர் ஆய்வு PART 2



இஸ்ராஃ மிஃராஜ் ஓர் ஆய்வு PART 1 

ரஜப் நோன்பு எப்போது வைக்க வேண்டும்..?

கேள்வி: ரஜப் நோன்பு எப்போது வைக்க வேண்டும்..?

Raajab Nonbu Eppothu Vaika Vendum..? - Deen Oli - Moon Tv



பதிலளிப்பவர்கள்.



மௌலானா மெளலவி அல் ஹாஃபிழ் தாஜுல் உலூம்
அல்ஹாஜ் . M.ஷைகு அப்துல்லாஹ் 
ஜமாலி M.A. ஹஜ்ரத் கிப்லா அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)


மூன் டிவியின் புனித மிஃராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவுகள்

மூன் டிவியின் புனித மிஃராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு -பாகம் -1 
Isra Wal Miraj Bayan Part -1



மூன் டிவியின் புனித மிஃராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு -பாகம் -2 
Isra Wal Miraj Bayan Part -2


மூன் டிவியின் புனித மிஃராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு -பாகம் -3
Isra Wal Miraj Bayan Part -3

மிஃராஜ் விண்ணேற்றப் பயணம் !!!

தலைப்பு ;- மிஃராஜ் விண்ணேற்றப் பயணம் !!! 

சிறப்புப்பேருரை ;-
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் 
அரபுக் கல்லூரியின் முன்னால் பேராசிரியரும்,
சென்னை,புதுப்பேட்டை,ஜாமிஆ மஸ்ஜிதின் தலைமை இமாம்,
மௌலானா மௌலவி எஸ்.முஹம்மது அலி ஃபாஜில் 
மன்பயீ ஹஜ்ரத் .அவர்கள்.(23-05-2014) கோலாலம்பூர்,மஸ்ஜித் 
இந்தியாவில் ஆற்றிய ஜும்ஆ உரை.   


எஸ்எஸ்..கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் புனித மிஃராஜ் இரவு சிறப்பு பேருரைகள்.


தூத்துக்குடிமாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் முன்னால் தலைவரும்,காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபுக் கல்லூரியின் முன்னால்  முதல்வருமான, மௌலானா மௌலவி அல்லாமா மர்ஹும்.எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் புனித மிஃராஜ் இரவு சிறப்பு பேருரைகள்.

    MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 1/8


MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 2/8



MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 3/8

MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 4/8



MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 5/8


MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 6/8


MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 7/8


MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 8/8

மிஃராஜ் தரும் படிப்பினைகள்

தலைப்பு ;- மிஃராஜ் தரும் படிப்பினைகள்  

சிறப்புப்பேருரை ;-
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் 
ஷாஃபீஈ வாஹிதி ஹஜ்ரத் அவர்கள் .
(30-05-2014) கோலாலம்பூர்,மஸ்ஜித் இந்தியாவில் 
ஆற்றிய ஜும்ஆ உரை.   

புனித மிஃராஜின் இரகசியம்


தலைப்பு ;- புனித மிஃராஜின் இரகசியம் 
மலேசியத் தலைநகர்,கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில்
 19-03-2007 மார்ச் முதல் 30-03-2007 வரை நடைபெற்ற 
பெருமானாரின் மீலாதுப் பெருவிழா தொடர் சொற்பொழிவு

சிறப்புப் பேருரை ;- 
வேலூர் -- அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக்கல்லூரியின் 
முன்னால் முதல்வர்,மௌலானா மௌலவி அல்ஹாஜ்,அல்லாமா P.S.P.ஜைனுல் ஆபிதீன் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்.

மிஃராஜ் கூறும் படிப்பினைகள்


தலைப்பு ;- மிஃராஜ் கூறும் படிப்பினைகள்

சிறப்புப் பேருரை :-

அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் அவர்கள்.
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
( தலைவர்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் )

புனித மிஃராஜ்


பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் வாழ்விலும், இஸ்லாத்தின் வளர்ச்சியிலும் மிஃராஜ் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. அடியானுக்கும், அல்லாஹ்வுக்குமிடையிலான நெருக்கத்தின் எல்லையையும் அன்நெருக்கத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் மிஃராஜ் விளக்குகிறது. ஆன்மீகப் பயணத்தின் யதார்த்தமான விளக்கமாகவும், ஆன்மாவின் ஆற்றலின் வெளிப்பாடாகவும் மிஃராஜ் நிகழ்வு அமைகிறது.

பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் நபிமார்களின் நாயகர் என்பதையும், மலக்குகள் அர்ஷ், குர்ஷ் அனைத்தையும் விட மேலானவர்கள் என்பதையும் மிஃராஜ் நிரூபித்துக்காட்டுகின்றது.

வேந்தர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிரபஞ்சத்தில் எதிலும் தேவையற்றவர்கள் என்பதையும், வல்ல நாயனான அல்லாஹ்விடத்தில் மாத்திரமே தேவையுள்ளவர்கள் என்பதையும் மிஃராஜ் சுட்டிக் காட்டுகின்றது. ஆன்மீகப் படித்தரங்களில் அடிமைத்துவமே மேலானது என்பதையும், அதன் மூலமே எஜமானான இரட்சகனை அடையலாம் என்பதையும் மிஃராஜ் விளக்கிக் காட்டுகின்றது. இவ்வாறு பல்வேறு தத்துவங்களை உள்ளடக்கியுள்ள மிஃராஜினை பின்வருமாறு ஆராயலாம்.

1. மிஃராஜ் பயணம் ஏன் விண்ணகத்தில் ஏற்பாடாகியது?
2. மிஃராஜில் பொதிந்துள்ள தத்துவம் என்ன?
3. மிஃராஜ் கூறும் படிப்பினை என்ன?

மிஃராஜ் பயணம் ஏன் விண்ணகத்தில் ஏற்பாடாகியது?

நபிமார்களிடத்தில் சிதறிக் காணப்பட்ட அனைத்து அற்புதங்களும் அஹ்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) யிடத்தில் முழுமையாகக் காணப்பட்டன. நபிமார்களுக்கெல்லாம் நாயகமானவர் நபியுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டும் முக்கிய அம்சமாகவே மிஃராஜ் நிகழ்வு அமைகிறது. இதனை பின்வருமாறு நோக்கலாம்.

1. நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) தூர்சீனா மலையில் அல்லாஹ்வுடன் பேசினார்கள். நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நான்காம் வானம் உயர்த்தப்பட்டார்கள். எனவே பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நான்காம் வானம் தாண்டிச் சென்று அல்லாஹ்வை தரிசிக்க வேண்டியதால் விண்ணகம் சென்றார்கள்.

2. அர்ஷிலிருந்து பர்ஷ் வரையிலான அனைத்தும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஒளியிலிருந்து அவர்களுக்காகவே படைக்கப்பட்டன. படைப்பினங்களின் முதலானவரான பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் படைப்பினங்களின் அவசியத் தேவைகள் எதிலும் படைப்பினங்கள் பால் தேவையற்றவர்கள் என்பதையும் படைத்தவனிடம் மட்டுமே அவர்கள் தேவையுள்ளது என்பதையும் எடுத்துக் காட்டவேண்டி ஏற்பட்டதால் அர்ஷுக்கும் மேலால் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் விண்ணகம் சென்றார்கள்.

3. நபிமார்கள் அனைவரும் வானவர் தூதர் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மூலமே அல்லாஹ்வைப் பற்றியும், சொர்க்கம், நரகம் பற்றியும் அறிந்து மக்களுக்கு விளக்கம் கூறினார்கள். ஆனால் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஏனைய நபிமார்களைப் போன்று இரண்டாம் தரப்பு செய்திகளைக் கூறாமல் நேரடியாகவே அல்லாஹ்வையும், சொர்க்கம், நரகம் முதலியவற்றையும் நேரில் கண்டு கூறும் ‘ஷாஹிதாக’ இருக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்பினான். அதனால் விண்ணகம் நோக்கிய பயணத்திற்கு ஏற்பாடு செய்தான்.

“எனக்கு நான்கு அமைச்சர்கள் உள்ளனர் இருவர் மண்ணுக்கும் மற்றுமிருவர் விண்ணுக்கும்” என பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் நவின்றுள்ளார்கள்.

மண்ணுக்கான அமைச்சர்கள்.
அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு)
உமர் (ரழியல்லாஹு அன்ஹு)

விண்ணுக்கான அமைச்சர்கள்.
ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்)
மீக்காயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுமாவர். (மிஷ்காத்)

மன்னரின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் நிர்வாகத்தை கண்காணிப்பது அமைச்சர்களின் கடமை. மன்னகத்தின் நிர்வாகத்தை நேரில் அவதானித்துக் கொண்டிருக்கும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களை வின்னகத்தின் நிர்வாகத்தையும் ஒருமுறை நேரில் வந்து பார்த்துவிட்டுச் செல்லுமாறு விண்ணகத்திற்குப் பொறுப்பான இரு அமைச்சர்களையும் நேரில் அனுப்பி அழைப்பு விடுத்தான் அகிலத்தை ஆளும் வல்ல நாயன் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று விண்ணகம் சென்றார்கள் வேந்தர் நபியவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்).

“ஒவ்வொன்றும் அதன் அஸலை நாடிச் செல்லும்” என்பது நபிமொழி. இந்த வகையில் கஃபதுல்லாஹ் அமைந்துள்ள புனித இடமே பூமியின் அடிப்படை நிலமாகும். அதனால் பூமியின் எப்பகுதியிலும் சரி வாழும் மனிதர்கள் தாய் நிலமாகிய மக்கமா நகர சென்று ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுகின்றனர். அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் தாய்ப்பள்ளி மக்கமா நகரில் இருக்கும் கஃபாவுகும். அதனால் தாய்ப் பள்ளியாகிய கஃபாவை கிப்லாவாக ஆக்கி உலக முஸ்லிம்கள் தொழுகின்றனர். ‌

ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டதால், பெண்ணுக்கு ஆண் அடிப்படையாக இருக்கின்ற காரணத்தினால் ஆணுக்கு வழிப்பட்டவளாக ஆணின் துணையை நாடிச் செல்கிறாள். படைப்பினங்கள் அனைத்துக்கும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஒளியே அடிப்படையாக இருப்பதால் அனைத்துப் படைப்பினங்களும் அஹ்மது நபியை (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) விசுவாசிக்கின்றன. அன்னாரின் வேதமே இறுதி வேதமாகவும், முழுமையான வேதமாகவும் அங்கீகரிக்கப்பட்ட வேதமாகவும் அமைந்திருக்கிறது. அனைத்து நபிமார்களும் அஹமது நபியைப் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பற்றி அன்னவர்களின் உம்மத்தினருக்கு உபதேசித்து வந்தனர். அன்னாரிடமே மறுமையில் அபயம் தேடி நபிமார்கள் உட்பட அனைத்து மக்களும் செல்வர்.

அஹமது நபியின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஒளிக்கு அல்லாஹ்வின் ஒளியே அடிப்படையாக இருப்பதனால் அதனை இடம், காலம் என்ற படைப்பின் எல்லைகளை தாண்டிச் சென்று சந்திக்க வேண்டி ஏற்பட்டது. அதனால் விண்ணகம் சென்றார்கள்.

மிஃராஜின் படிப்பினை

1. மிஃராஜ் பயணத்தின் ஆரம்பத்தில் பெருமானாரின் உடல் பிளக்கப்பட்டு இதயம் வேறாக்கப்பட்டு இதயத்தில் சில பகுதிகள் நீக்கப்பட்ட பின் புதிதாக சில பகுதிகள் இதயத்துள் வைத்து பொருத்தப்பட்ட நிகழ்ச்சி புகாரி, முஸ்லிம் போன்ற நூற்களில் காணப்படுகின்றது.

2. மிஃராஜ் பயணம் மக்காவிலிருந்து சித்ரத்துல் முன்தஹா வரையிலும் ‘புராக்’ என்ற வாகனத்திலே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. “புராக்” என்பது “பர்க்” – மின்னல் என்ற பொருளைக் கொடுக்கும் சொல். இதனை மின்சாரத்தில் இயங்கும் ஒளிவேகங்கொண்ட வாகனம் என்றும் எடுத்துக்கொள்ள முடியும்.

3. காற்று மண்டலம், நெருப்பு மண்டலம் ஆகிய அனைத்து மண்டலங்களையும் தாண்டியதாக இப்பயணம் அமைந்திருக்கின்றது.

4. காலம், இடம், திசை இல்லாத அந்தர வெட்ட வெளியில் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் இறுதிப் பயணம் அமைந்திருக்கின்றது.

சிந்திக்க வேண்டியவை

1. பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் உடலின் யதார்த்தம் மண்ணின் கூறிய கத்தியால் உடல் கிழிக்கப்பட்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் சுட்டுவிரலினாலே உடல் கிழிக்கப்பட்டது. அப்போது குருதி கொப்பளித்திருக்க வேண்டும். இதுவும் நடக்கவில்லை. ஒரு சொட்டு குருதியும் வெளியேறவில்லை. இதயம் வேறாக்கப்பட்ட போதும் அதன் அடிப்பகுதிகள் நீக்கப்பட்ட போதும் அவர்கள் உணர்விழந்திருக்க வேண்டும். மாறாக முழு உணர்வுடன் நடந்தவற்றை பார்த்துக் கொண்டுமிருக்கின்றார்கள். இச்செய்கை மூலம் பின்வரும் படிப்பினைகளை பெருகின்றோம்.

பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடத்தில் கீழ்வரும் மூன்று நிலைகளும் காணப்பட்டிருக்கின்றன.

1. யுத்தத்தில் காயப்பட்ட போது உடலிலிருந்து குருதி வந்தபோதும், அகழி தோன்றும் போது பசியின் கடுமையால் மணிவயிற்றில் கல்லைக் கட்டிய போதும் உடலியல் (பஷரிய்யத்) மிகைத்தவர்களாக இருந்தார்கள். அதனால் மனிதத்துவ நிலை அவர்களில் மேலோங்கிக் காணப்பட்டது.

2. மிஃராஜ் பயணத்தின் முன் உடல் கிழிக்கப்பட்ட போதும், தொடர் நோன்பு நோற்றபோதும், தூக்கமின்றி விடியவிடிய வணங்கிய போதும், வின்னகப் பயணத்தில் காற்று, நெருப்பு மண்டலங்களை கடக்கும் போதும் மலக்கானியத் மிகைத்துக் காணப்பட்டார்கள்.

3. ‘இதற்கப்பால் ஒரு நூல் அளவு தாண்டினால் எரிந்து சாம்பலாகிவிடுவேன்’ என்று கூறி ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பின்வாங்கிய போது அச்சமோ, ஆயாசமோயின்றி அடக்கமாகவே முறுவலித்தவர்களாக பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மேற்கொண்ட பயணத்தின் யதார்த்தத்தை ஹக்கானியத் என்று சொல்லப்படும். அல்லாஹ்வும், அவனது ஹபீபும் தான் அறிவர். ஆனால் ஒன்று மட்டும் சர்வ நிச்சயம். இம்மூன்று பயணங்களிலும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் “அப்தாக” அடியாராகவே இருந்துள்ளார்கள். படைப்பினங்களின் சகல தரப்பையும் சுட்டும் பொதுவான சொல் ‘அப்து’ என்பதை தவிர வேறொன்றில்லை. ஆதலால் ‘தனது அப்தை இராவழி நடத்திய நாயன் தூயவன்’ என்று அல்லாஹ் கூறுகின்றான்.
“இராவழி நடாத்திய நாயன் தூயவன்” என்ற கூற்று இப்பயணம் அல்லாஹ்வின் விருப்பத்தின் அடிப்படையில் அவனது தனிப்பெரும் ஆற்றலால் நிகழ்ந்தது என்பதை சுட்டிக் காட்டுகிறது.

மிஃராஜ் பயணம் அல்லாஹ்வினுடனான சந்திப்பின் ஒழுக்கத்தை எடுத்துக் காட்டும் அம்சமாகவே அமைந்திருப்பதை இவ்வாறு அறியலாம்.

1. பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் இதயம் பரிசுத்தமாக்கப்பட்டு ஈமான் நிரப்பப்பட்ட விடயம்.
பரிசுத்தமான உள்ளமுடையவர்கள் மாத்திரமின்றி நிரப்பமான தூய ஈமான் உள்ளவர் மாத்திரமே அல்லாஹ்வின் திருக்காட்சியை காணும் தகுதி பெற்றவராவார் என்பதை உணர்த்திக் காட்டப்படுகின்றது. இதனையே ‘பரிசுத்தமான உள்ளமுடையவரே வெற்றி பெற்றார்’ என்ற திருவசனம் நமக்கு உணர்த்துகின்றது.

2. மஸ்ஜிதுல் அக்ஸாவில் நபிமார்களுடனான சந்திப்பு,
புனிதப் பயணங்கள் நல்லவர்களின் ஆசியுடன் அல்லது நல்லவர்களின் ஸியாரத்துடன் அமைதல் வேண்டும் என்பதை புலப்படுத்துகிறது. புராக்கிலான பயணமும், ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வழித்துணையும் இறைவழிப் பயணம் சடநிலையில் அல்லாமல் ஆன்மீக நிலையில் ஏற்கனவே வழியறிந்த, தெரிந்த காமிலான ஷெய்கின் துணையுடனே அடக்கமாக அமைதல் அவசியம் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) புராக், ஆகியவற்றின் பின்வாங்குதலும், றப் றப் பின் வருகையும், அதற்கப்பால் உள்ள பயணமும், மனித முயற்சியும், வழிகாட்டுதலும் குறிப்பிட்ட எல்லை வரையிலும்தான் என்பதையும் அதற்கப்பால் உள்ள பயணம் அதாவது முக்தி என்பது அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையில் “நிஃமத்தில்” – அருளில் தான் தங்கியிருக்கிறது என்பதையும் அவன் நாடியவர்களை மட்டுமே நேர்வழி காட்டி முக்தி பெறச்செய்வான் என்பதையும் காட்டுகிறது.

கப்ரில் தொழுகை

பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மக்காவிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா செல்லும் வழியில் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கப்ரில் தொழுது கொண்டிருப்பதை கண்டதாகவும், மஸ்ஜிதுல் அக்ஸா சென்றடைந்த போது பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களை வரவேற்க மூஸா (அலைஹிஸ்ஸலாம்) தயார் நிலையில் நின்றதாகவும் ஹதீஸ் கிரந்தங்களில் காணமுடிகிறது.

ஆன்மாவின் வேகம்

மேலும் கூடவே மஸ்ஜிதுல் அக்ஸாவில் தொழுத நபிமார்கள் பெருமானாரை வழியனுப்பிய பின்பே பிரிந்தார்கள். ஆனால், புராக் விண்ணகம் செல்லும் முன்பே நபிமார்கள் அங்கு சென்று விட்டார்கள்.
இது, நபிமார்களுடைய ஆன்மாவின் வேகம் உச்ச ஒளி வேகங்கொண்ட புராக்கின் வேகத்தை விட வேகமானது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

மரணித்தவர் உதவுதல்

அல்லாஹ்வை தரிசித்து உரையாடிய பின் ஐம்பது வேளை தொழுகையை பரிசாக கொண்டுவந்த போது மூஸா (அலைஹிஸ்ஸலாம்) ஐந்தாக குறைக்கும் வரை வாதாடியது.
“தொழுகை முஃமினின் மிஃராஜ்” அல்லாஹ்வை காண்பது மிஃராஜின் பூரணம். பெருமானாரை தவிர்த்து ஏனையோர் கலப்பால் அல்லாஹ்வை காணும் பாக்கியத்தை பெறுவார் என்பதனால்.
ஊசிக்காதளவு அல்லாஹ்வுடன் வசநித்து மதிமயங்கிய அனுபவத்தை பெருமானாரிடம் எடுத்துக்கூறி தினமும் ஐம்பது வேளை இறைவனை தரிசிக்கும் ஆற்றல எல்லா உள்ளங்களுக்கும் கிடையாது. எனவே குறைத்து வாருங்கள் என்று கூறியதிலிருந்து........

1. மரணித்தவர்கள் உயிருள்ளவர்களின் பலம், பலவீனம் ஆகியவற்றை அறிந்திருக்கின்றார்கள்.
2. உயிருள்ளவர்களின் நடவடிக்கைகளில் மரணித்தவர்கள் அக்கறை கொண்டுள்ளார்கள்.
3. உயிருள்ளவர்களுக்காக மரணித்தவர்கள் உதவி செய்ய முடியும் என்பது தெளிவாகின்றது.

விஞ்ஞான தத்துவம்

மிஃராஜ் பயணம் சிலேடையாகவும், இஸ்ராப் பயணம் வெளிப்படையாகவும் அல்குர்ஆனில் கூறப்பட்டிருப்பதானது தெரிந்த உண்மைகளை கொண்டே தெரியாத உண்மைகள் விளக்கப்பட வேண்டும் என்ற விஞ்ஞானத் தத்துவம் எடுத்துக் காட்டப்படுகிறது. பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட பௌதீக அதீத விடயங்களான மறைஞானங்கள் பகிரங்கமாக பாமரர்கள் மத்தியில் பேசக்கூடியதல்ல என்பதனால்தான் அறிவுள்ளவர்கள் மாத்திரம் அறிந்து கொள்ளும் அமைப்பில் அல்குர்ஆன் சிலேடையாக எடுத்துக் கூறுகின்றது.
மிஃராஜ் நிகழ்வு நபித்துவ 11 ½ ல் ரஜப் திங்கள் இரவின் பிற்பகுதியில் நடந்தேறியதிலிருந்து..... பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் மார்க்கம் நடுநிலையானது என்பதையும் நடுநிலை – மத்திமமானதே – மேலானது என்பதையும் காட்டுகின்றது அதாவது.

நடுநிலை

1. நபித்துவத்தின் முளுக்காலம் 23 ஆண்டுகள். இதன் சரிபாதி 11 ½ ஆண்டுகள்.

2. நுபுவ்வத்தின் ஆரம்பம் நல்ல கனவுகலாகும். இக்கனவு ரபியுல் அவ்வலில் தொடங்கியது. இதனை நுபுவ்வத்தின் தொடக்கம் என கணக்கிட்டால் ரஜப் வருடத்தின் மத்தியாகும்.

3. ஷரீஅத்தினடிப்படையில் வெள்ளிக்கிழமை முதல் நாளாகும். இதன்படி கிழமையின் மத்தி திங்களாகம்.

4. முந்திய மார்க்கங்களில் சில ஜவாலியத் – (தீவிரம்) ஆகவும், வேறுசில ஜமாலியத் (சாத்வீகம்) ஆகவும் அமைந்துள்ளன. ஆனால் இறுதி வேதமான இம்மார்க்கம் இரண்டையும் உள்ளடக்கிய சமநிலையான மத்திய மார்க்கமாக இருப்பதனால்,

“ இந்த உம்மத் நடுத்தரமான உம்மத்” என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். “நடுத்தரமானதே சிறந்தது” என்ற அடிப்படையில் “இதுவரை தோற்றுவிக்கப்பட்ட உம்மத்துகளில் இந்த உம்மத்தே சிறந்த உம்மத்” என சிறப்பித்துக் குறிப்பிட்டுள்ளான். இதனால், மிஃராஜ் நிகழ்வு, மத்திமத்தில் நிகழ்ந்திருப்பதால் இஸ்லாம் நடுநிலையையே போதிக்கிறது. அதுவே அழகானது. அழகையே அல்லாஹ் விரும்புகிறான் என்பதனை புலப்படுத்திக் காட்டுகிறது.

மிஃராஜ், ஹபீப், மஹ்பூபை நாடிச்செல்லும் பயணமாகும். இப்பயணத்தின் இன்பம் (விஸாவில்) சந்திப்பில் தங்கியிருக்கிறது. இச்சந்திப்பு அடக்கமான இரவு நேரத்தில் நிகழ்வதால் பூரண இன்பத்தை பெற முடியும் என்பதை மறைமுகமாக எடுத்துக் காட்டுகின்றது.

எனவே மிஃராஜ் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் யதார்த்த நிலையை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகவும் ஆன்மீகப் பயணத்தின் ஒழுக்கத்தை விளக்கும் ஒரு செயல்முறை பயிற்சியாகவும் அமைந்திருப்பது புலனாகின்றது.

தொழுகை மிஃராஜின் பரிசாகும். இது முஃமினீன் மிஃராஜாகும். அதனால், தொழுகையின் அசைவுகள் அடிமைத்துவத்தின் வெளிப்பாடாக அமைந்திருக்கின்றன. “அடிமைத்துவத்தின் பலன் வெற்றியாகும். இதனை அத்திய்யாத்தில் பெறமுடியும். அத்தஹிய்யாத் இறைவனுக்கு முன்னாள் நபி ﷺ அவர்கள் உரையாடியதை நினைவுப்படுத்துகின்றது. அதனால், தொழும்போது நாம் நேரே அல்லாஹ்வுடன் வசனிப்பதாகவும், நபி ﷺ அவர்களுக்கு ஸலாம் கூறுவதாகவும் கருதிக்கொள்ள வேண்டும். அதனால் நபி ﷺ அவர்களை நேரில் பார்ப்பதாக கற்பனை செய்துகொண்டு ஸலாம் கூறினால் நபி ﷺ அவர்கள் பதில் கூறுவார்கள் என்று ஹஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் இஹ்யாவில் குறிப்பிட்டுள்ளார்கள்.

நன்றி ;- MAIL OF ISLAM.

Friday, April 15, 2016

குத்துபுல் ஹிந் ஹஜ்ரத் கரிப நவாஸ் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி, ஹஸனுஸ் ஸன்ஜரி (ரலி) ,அவர்கள் மீது நாகூர் ஷுஃபி முச்சுடர்கள் பாடிய பாடல்





வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

குத்துபுல் ஹிந் ஹஜ்ரத் கரிப நவாஸ் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி, ஹஸனுஸ் ஸன்ஜரி (ரலி) அவர்களைப்பற்றி,நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ், மர்ஹூம்,நாகூர் E.M.ஹனீஃபா (ரஹ்) அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்கள்



அஜ்மீர் ராஜாவே கருணை(க்) குவாஜாவே



அஜ்மீரின் ராஜா ஆன்மீக ரோஜா



அழகான அஜ்மீரில் ஆட்சி செய்யும் ராஜா 



வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

குத்துபுல் ஹிந் ஹஜ்ரத் கரிப நவாஸ் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி, ஹஸனுஸ் ஸன்ஜரி (ரலி) அவர்களின் புனித தர்ஹா ஷரிஃப் பற்றிய சில தகவல்கள்




வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு !!!


குராசானைச் சேர்ந்த ஸீஸ்தானில் ஹிஜ்ரி 530 ரஜப் பிறை பதினான்கில் அதாவது கி.பி. 28-04-1116 இல் ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்தார்கள். அவர்களின் தந்தையின் பெயர் காஜா ஸையிது கியாஸுத்தீன் ஹஸன், தாயாரின் பெயர் ஸையிதா மாஹினூர் என்பதாகும்.

ஹழ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை போலவே இவர்களும் தந்தை வழியில் ஹஸனி என்றும், தாயார் வழியில் ஹுஸைனி என்றும் சொல்லப்படுகிறது.
உள்ளூர் மதரஸாவில் திருக்குர்ஆன், ஹதீஸ் பாடங்களை சிறுவயதிலேயே கற்ற அவர்கள் தம் ஒன்பதாம் வயதிலேயே திருக் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து ஹாபிள் ஆகிவிட்டார்கள்.

ஹிஜ்ரி 550 வரை புகாரா, சமர்கந்தில் தங்கிய ஹழ்ரத் அவர்கள் மௌலானா ஹுஸாமுத்தீன்
​ரலியல்லாஹு அன்ஹு, ஷரபுத்தீன் ரலியல்லாஹு அன்ஹு, ஷரபுல் இஸ்லாம் ரலியல்லாஹு அன்ஹு
​போன்ற பெரியார்களிடம் திருக்குர்ஆன் வியாக்கினம், ஹதீஸ், பிக்ஹு ஆகிய மார்க்க ஞானக் கலைகளை
கற்றார்கள்.

இதன் பின் கிவா, தூஸ் போன்ற நாகரிகமிக்க பட்டணங்களுக்கும் சென்று பெரியார்களை சந்தித்து விட்டு பக்தாதை
நோக்கி பயணமானார்கள். பக்தாதை விட்டு நீங்கிய ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு
அவர்கள், நிஷாப்பூரை ஒட்டியிருந்த ஹாரூன் என்ற ஊருக்கு போய்ச் சேர்ந்தார்கள். அங்கே ஷெய்கு உதுமான் ரலியல்லாஹு அன்ஹு என்ற பெரியார் பேரும், புகழும் பெற்ற மகானாய் விளங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சமூகத்தில் சென்ற காஜா அவர்கள், “அடியேனைத் தங்கள் சீடர்களின் ஒருவனாய் ஏற்றருள வேண்டும்.” என்று பணிவுடன் வேண்டி நின்றார்கள். ஹழ்ரத் உதுமான் ஹாரூனி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காஜாவை எதிர்ப்பார்த்தவர்கள் போலத் தழுவித் தம்மால் இயன்ற ஆத்மஞான போதனையை அருள்வதாக வாக்களித்து அவர்களை ஆசிர்வதித்தார்கள். இறுதியில் ஹிஜ்ரி 582 இல் ஹழ்ரத் உதுமான் ஹாரூனி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு விலாயத் ஸனத்தையும், தம் கலீபா என்ற பட்டத்தை வழங்கினார்கள்.

ஹிஜ்ரி 583 இல் மீண்டும் ஹஜ் செய்வதற்காக ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்கா சென்றார்கள். ஹஜ்ஜை முடித்துக்கொண்டு மதீனா வந்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ரௌலா ஷரீப் அருகில் நாற்பது நாட்கள் தங்கியிருந்து ஆத்ம அனுஷ்டானங்களில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். அப்போது ஒருநாள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள், ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கனவில் தோன்றி, “முயீனுத்தீன்! நீங்கள் உலகில் இஸ்லாமிய சன்மார்க்க நெறியைப் போதித்துப் பரப்ப வேண்டும். இப்போது இந்தியா சென்று அஜ்மீர் எனும் இடத்தில் தங்கிக் கொண்டு இஸ்லாத்தைப் போதியுங்கள்” என்று ஆணையிட்டார்கள். விழிப்படைந்த ஹழ்ரத் காஜா இத்தகைய உத்தரவு கண்டு உளமகிழ்ச்சியடைந்தார்கள்.

ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நம் அன்புக்கும், மதிப்புக்கும் முக்கிய பாத்தியமாகப் காரணம் அவர்கள் தீனுல் இஸ்லாத்துக்காகச் செய்த மகத்தான சேவைதானன்றே! அவர்கள்தாம் இந்தியாவில் இஸ்லாத்தை பெரிய அளவில் பரப்பி ஆயிரம் ஆண்டுகள் நடைபெற்ற முஸ்லிம் ஆட்சிக்கும் காரண புருஷராய் விளங்கியுள்ளார்கள். ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புன்னியத்தொண்டை அதற்குரிய பின்னணியில் நாம் உணராமலிருக்க முடியாது.
ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அஜ்மீரில் தங்கியிருந்த காலத்தில் மட்டும் ஏழரை இலட்சம் ஹிந்துக்களை இஸ்லாத்திலாக்கினார்கள் என்று காரி அப்துர் ரஹ்மான் ஈராக்கி என்ற பெரியார் எழுதுகிறார்கள். உலகம் முழுவதிலும் இஸ்லாம் பரவிய விதத்தைச் சரித்திர ஆதாரங்களுடன் விளக்கி ‘இஸ்லாமியப் பிரச்சாரம்’ என்ற நூல் எழுதியுள்ள அறிஞர் டி. டப்ளியூ. ஆர்னில்ட், தொண்ணூறு இலட்சமே பேர்களை அதாவது ஒரு கோடிக்குப் பத்து இலட்சமே குறைவானவர்களை ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்திலாக்கியுள்ளதாக எழுதியுள்ளார். இது இந்தியாவின் பல்வேரிடங்களிலும் அவர்களால் இஸ்லாத்தைத் தழுவியவர்களுடைய தொகையாக இருக்கலாம். ஆனால், இத்தகவல் சரித்திரப் பூர்வமானது. இஸ்லாமிய சரித்திரத்திலேயே இத்தனை பெரிய அளவில் இஸ்லாத்தைப் பரப்பிய ஒரு பெரியாரைக் காண்பது அரிது.

இத்தனைக்கும் அவர்கள் பின்பற்றிய முறை யாது? பட்டாளங்கள், படைகள், ஆயுதங்கள், ஆதரவாளர்கள், இப்படி ஏதேனும் இருந்ததா? நான்கே நான்கு சீடர்களுடன் முற்றும் துறந்த முனிவராகவே வந்தார்கள். எவர் தயவையும் அவர்கள் நாடவுமில்லை. வந்த நாட்டிலோ யாரையும் அவர்களுக்குப் பரிச்சயமுமில்லை. அவர்கள் போதித்ததற்கு முற்றும் முரணான கொள்கையுடைய ஜாதி பேத உணர்ச்சி மிக்க மக்களிடையில் அவர்கள் பணியாற்ற வேண்டியதிருந்தது. பிருதிவிராஜனைப் போன்ற அரசர்களின் வெறுப்புக்கு இடையில் அவர்கள் கடமையாற்ற வேண்டியதிருந்தது. அவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் தொலைக்கும் எண்ணங் கொண்ட ஒரு சிறு கூட்டத்திடையே அவர்கள் இருக்க வேண்டியதாயிற்று. இத்தனைக்கும் அவர்கள் தாய் மொழியோ பாரசீக மொழி, பழக்கத்தால் அரபியும் பேசுவார்கள். ஆனால், அச்சமயம் இந்தியாவிலுள்ள மக்களுக்கு இவற்றில் பிரசாரம் செய்தால் விளங்கிக் கொள்ளவே முடியாது. இந்த நிலையில் அவர்கள் தொண்ணூறு இலட்சம் பேர்களை இஸ்லாத்திலாக்கினார்களென்றால், அவர்களுடைய சேவையின் மகத்துவத்தை நாம் உணர முடிகிறதன்றோ?

ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சேவையோ முற்றும் வேறு விதமானது. முஸ்லிம்களே இல்லாத ஓரிடத்திலே, இஸ்லாத்தைப் பற்றியே அறிந்திராத மக்களிடையே, முஸ்லிம் படையெடுப்புகளால், கொள்ளையடிப்புகளால், கோயில் இடிப்புகளால் இஸ்லாத்தைப் பற்றி தவறாக எண்ணிக் கொண்டிருந்தவர்களிடையே அவர்கள் வேலை பார்க்க வேண்டியதிருந்தது. அவர்களைச் சன்மார்க்கத்தின் பக்கம் அழைப்பதே அவர்களுடைய முக்கியமான வேலையாய் இருந்தது. அதிலும் அவர்கள் மூலம் இஸ்லாத்தை ஏற்றவர்கள் எத்தகையவர்கள்? இந்தியாவில் மிலேச்சர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்களோ, விவசாயிகளோ, பணியாக்களோ அல்லர்: வீர மரபினர்: போர் என்றாலே குதித்தெழுபவர்கள்: வெற்றி அல்லது மரணம் என்று போரிடுபவர்கள். மானம் பெரிது என்று தங்கள் பெண்டிரை நெருப்பிடைப் புகச் செய்யும் இராஜபுத்திரர்கள் தாம் ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்களினால் பெருத்த அளவில் இஸ்லாத்தைப் பலப்படுத்தி முயீனுத்தீன் இஸ்லாத்தைப் பலப்படுத்தியவர் என்ற தங்கள் பெயரின் உண்மையை நிரூபித்தார்கள்.

ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு ஏராளமான நூற்களை எழுதியுள்ளார்கள். ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களுடைய 97 ஆம் வயதில் ஹிஜ்ரி 627 ரஜப் மாதம் 6 ஆம் தேதி திங்கட்கிழமை கி.பி 21. 05. 1229 அன்று வபாத்தானார்கள். 

நன்றி -- mail of islam.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

புனிதம் நிறைந்த ரஜப் மாதம் !!!

02-05-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான்.

தலைப்பு ;- புனிதம் நிறைந்த ரஜப் மாதம்  

குத்பா பேருரை ;- 
மௌலானா மௌலவி அல்ஹாஜ் 
எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத்.
தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா,
கோலாலம்பூர், மலேசியா.