Tuesday, November 14, 2017

பெரியகுளம் மௌலானா அபூபக்கர் பாகவி ஹழ்ரத் மறைவு !!!


 "ஹிதாயதுஸ் ஸிப்யான் ஃபீ தஜ்வீதில் குர்ஆன்" நூலாசிரியர், 
மர்ஹும் மெளலானா காரி சையது முகம்மது இப்ராஹிம் 
பாகவி அவர்களின் தம்பி பெரியகுளம்
 "மவ்லானா அபூபக்கர் பாகவி ஹழ்ரத் அவர்கள் 
நேற்று (13-11-2017 ) இரவு 9 மணியளவில் தாருல் 
ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


*சுமார் 97 வயதுடைய மூத்த பாகவி ஆலிம் என்பது குறிப்பிடத்தக்கது.*


மர்ஹும் மெளலானா அபூபக்கர் ஹழ்ரத் அவர்கள், சமீபத்தில் 
சென்னை மண்ணடியில் நடைபெற்ற வேலூர் ஜாமிஆ 
பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் மத்ரஸாவின் நிறுவனர் 
அஃலா ஹழ்ரத் அவர்களின் நூற்றாண்டு நினைவு 
விழாவில் கலந்து கொண்டவர்கள்.


எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் 
நல்லறங்களை, ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து 
தன்னுடைய 'ஜ‌ன்ன‌த்துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் 
நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் 
பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், 
உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' 
எனும் அழகிய பொறுமையை தந்தருளவும்,சித்தார் கோட்டை 
சுன்னத் ஜமாஅத்  இணைய தளத்தினர் 
துஆச் செய்கிறார்கள். ஆமீன் ஆமீன்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.

0 comments:

Post a Comment