லால் பேட்டையில்,புனித மிகு புஹாரி ஷரீஃபின், 37 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸ் 11-05-2013 சனிக்கிழமை மாலை,ஞாயிறு இரவு 9 மணியளவில் ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் தாருத் தப்ஸீர் கலைக்கூடத்தில்,ஜாமிஆவின் முதல்வர் மௌலானா மௌலவி,காரீ.ஏ.நூருல் அமீன் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.மௌலானா மௌலவி ஷைகுல் ஃபிக்ஹ்,முப்தி எஸ்.ஏ.அப்துர் ரப் ஹஜ்ரத் கிப்லா அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவரும்,ஜாமிஆவின் பேராசிரியர்,ஷைகுல் ஹதீஸ்,அபுல் பயான்.மௌலானா மௌலவி ஏ.இ.எம்.அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் கிப்லா,தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின்,துணைத் தலைவர் செங்கோட்டைச் சிங்கம், மௌலானா மௌலவி ஆவூர், எம்.அப்துஸ் சுக்கூர் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத்,தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின்,துணைத் தலைவர் செங்கோட்டைச் சிங்கம், மௌலானா மௌலவி ஆவூர், எம்.அப்துஸ் சுக்கூர் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் அவர்களின் மகனார்,மௌலானா அ.இஸ்மாயீல் ஹஸனி ஹஜ்ரத்,காட்டு மன்னார் கோயில் வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவரும்,ஜாமிஆவின் பேராசிரியர் மௌலானா மௌலவி,காரீ அ.முஹம்மது அஹமது ஹஜ்ரத் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
மற்றும் ஜாமிஆவின் பேராசிரியப் பெருமக்களும்,உள்ளூர் உலமாப் பெருமக்களும்,உரையாற்றினார்கள்.இறுதியாக ஜாமிஆவின் முதல்வர் மௌலானா மௌலவி,காரீ.ஏ.நூருல் அமீன் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் அவர்கள் திக்ரு மஜ்லிஸ் நடத்தி,சிறப்பு துஆச் செய்தார்கள்.இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் ஏராளமானோர் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொண்டார்கள்.வஸ்ஸலாம்..
வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.
0 comments:
Post a Comment