அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் தமிழக மஸ்ஜிதுகளின் கூட்டமைப்பு துவக்க விழா ( 01.06.2013 ) சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஜமால் முஹம்மது கல்லூரி அருகிலுள்ள, வி.எஸ். எம்.மஹாலில் நடைபெறவுள்ளது.
மௌலானா ஹாபிழ் யூசுப் அலி கிராஅத் ஓதுகிறார். தமிழக மஸ்ஜித் கூட்டமைப்பு அமைப்பாளர் எம். முஹம்மது சிக்கந்தர் தலைமை தாங்குகிறார்.திருச்சி டவுண் காஜி மௌலானா ஜே. ஜலீல் சுல்தான் மன்பயீ ஆலிம், ஜமாஅத்துல் உலமாப் பொதுச் செயலாளர் திருச்சி மௌலானா எஸ்.எம். முஹம்மது மீரான் பாக்கவி, திருச்சி ஐக்கிய ஜமாஅத் தலைவர் எம்.முஹம்மது அன்சார் கும்பகோணம் எம்.ஏ. முஹம்மது ஜியாவுதீன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபைத் துணைத் தலைவர் மௌலானா ரூஹுல் ஹக், மவ்லானா உமர்ஃபாரூக், முஹம்மது ரபிக் (வேலூர்), எம். முஹம்மது பஷீர் (சென்னை), எம்.எஸ்.ஏ.ஷாஜகான் (இராமநாதபுரம்),
எம்.ஏ. இனாயதுல்லா (கோவை),டி.நஜ்முதீன் (மதுரை), எம்.ஏ.ஹாரூன் ரஷீத் (சேலம்), ஹாஜிகே. செய்யது அப்பாஸ், (திருநெல்வேலி ),முஹம்மது சாதிக்,(மாயவரம்) எம்.எஸ். முஹம்மது யூனுஸ் (கடலூர்) ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். எம். முஹம்மது சிக்கந்தர் மஸ்ஜிதுகள் கூட்டமைப்பின்அவசியம் குறித்தும், மௌலானா அபுதாஹிர் பாஜில் பாக்கவி`ஹஜ்ரத் இளைஞர்களும் – மஸ்ஜித் நிர்வாகிகளும்' என்ற தலைப்பிலும், `மௌலானா சதீதுத்தீன் பாக்கவி ஹஜ்ரத், மக்தப் மதரஸாவும் – மத்ஹபும்' என்ற தலைப்பிலும், சிறப்புரை நிகழ்த்த உள்ளனர்.
முஹம்மது ரபீக், பி.எஸ்.எம்.சையது அப்துல் காதர், டாக்டர் ஹாஜா மஜீத் உள்ளிட்ட சமுதாயப் புரவலர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளனர். எஸ்.முஹம்மது பேக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.புதுக்கோட்டை எம்.ஏ.எம்.ஷபியுல்லா நன்றியுரையாற்றுகிறார்.வஸ்ஸலாம்...
நன்றி ;-- Lalpet express.com
வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.
0 comments:
Post a Comment