Saturday, November 29, 2014

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மாபெரும் மௌலிது மஜ்லிஸ் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர் !!!!



மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் 
setiawangsa masjid muadz bin jabal 
(செடிய வங்ஸா மஸ்ஜிது முஆது இப்னு ஜபல்) 
பள்ளிவாசலில் மாபெரும் புனித மௌலிது ஷரீஃப் 
மஜ்லிஸ் ( 28-11- 2014) வெள்ளிக்கிழமை 
மஃரிப் தொழுகைக்குப் பிறகு மிகச்சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ். இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் 
பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் 
மரியாதைக்குரிய al habib ali zaenal abidin   
ஷைகு அல் ஹபீப் அலி ஜைனல் ஆபிதீன்  அவர்களும்,
மரியாதைக்குரிய 
al habib umar bin muhammed salim 
ஷைகு அல் ஹபீப் உமர் பின் முஹம்மது சலீம் 
மற்றும் அரபு நாடுகளை சேர்ந்த் அதிகமான 
ஷைகு மார்களும்,அரபியில் உரை நிகழ்த்தினார்கள்.
இச்சிறப்புப் பேருரைகளை மலாய் முஸ்லிமைச் 
சார்ந்த உஸ்தாது மார்கள்,மிக அழகாக  மலாய் 
மொழியில் மொழிபெயர்த்தார்கள்.
இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸை
majlis ta' lim darul murtadza மற்றும் 
setiawangsa masjid muadz bin jabal 
பள்ளிவாசல் நிர்வாகமும் மிகச்சிறப்பான 
முறையில் ஏற்பாடு செய்து நடத்தினார்கள்.
 
இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் 
setiawangsa  mp haji  dato 
Ahmad Fauzi Bin Hj Zahari அவர்களும்,
முன்னால் உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் 
haji  dato Syed Hamid Albar ஆகியோர் 
சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டார்கள்.

இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸ் 
நடந்து கொண்டிருக்கும்  போது 
அல்லாஹ்வின் அருள், மழையாக பொழிந்தது.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் 
கலந்து கொண்ட பல்லாயிரக்கண்க்கானோர்,
பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ 
அலைஹிவ ஸல்லம் அவர்களின் மீது  மௌலிது 
ஓதி அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் 
பெற்றுக்கொண்டார்கள். இறுதியில் சிறப்பு 
துஆவோடு இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸ் 
நிறைவை அடைந்தது .வஸ்ஸலாம்.

வெளியீடு 
மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment