பல்வேறு தளங்களில் பதியப்பட்ட கட்டுரைகளின் மொத்த
தொகுப்பு தான் தலை நகர் மஸ்ஜித் இந்தியா இமாம், மௌலவி
ஹாஃபிழ் அல்உஸ்தாத் S.S. அஹ்மது பாகவி அவர்கள் எழுதிய “வெளிச்சப்பூக்கள்” என்னும் நூல். இது இதயத்தின் உட்சுவரை
அழகுப் படுத்தும் இஸ்லாமிய சமய சிந்தனைகள்.
இதில்
▷ அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே
▷ மகத்தான் வெற்றி
▷ அறிவியலுக்கு அடித்தளமிட்ட இஸ்லாம்
▷ ஹிஜ்ரத் சிந்தனைகள்
▷ விஞ்ஞானத்திற்கு மெஞ்ஞானமே முன்னோடி
▷ முதல் மீலாது மாநாடு
▷ மதீனாவின் மாண்பு
▷ சூஃபியிசம்
▷ இமாம்களின் நுண்ணறிவு
▷ மிஃராஜ் விண்ணேற்றப் பயணம்
▷ பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை
▷ நோன்பு ஒரு அதிசயம்
▷ ஜக்காத் வருடா வருடம் வழங்குவது கடமையா ?
▷ ஹஜ்ஜுப் பெருநாள் : இரவே இல்லாத பகல்
▷ இஸ்லாமிய பெண்ணியம்
▷ ஹஜ் யாத்திரை சில சிந்தனைகள்
▷ குர்ஆன் கூறும் நடுநிலை சமுதாயம்
▷ அழைப்புப் பணி ஓர் ஆய்வு
▷ சந்தோஷம் வெளியே இல்லை
ஆகிய 19 தலைப்புகளில் பூக்கள் மனம் பரப்புகின்றன.
8/3/2014 ல் காணாமல் போன M.H. 370 விமானத்தில்
காணப்பட வேண்டிய காணொளி களை “அனைத்தையும்
அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே” என்ற கட்டுரையில் காணலாம்.
உலகத்தலைவர்களில் உத்தம நபி (ஸல்) அவர்கள் பெற்ற
இமாலய வெற்றியை “மகத்தான வெற்றி” யில் பார்க்கலாம்.
இஸ்லாம் உலகத்திற்கு அறிமுகப்படுத்திய விஞ்ஞான ரீதியான
அறிவியல் உண்மைகளை “அறிவியலுக்கு அடித்தளமிட்ட
இஸ்லாம்” என்ற கட்டுரை விரிவாக எடுத்துரைக்கிறது.
“ஹிஜ்ரத் சிந்தனைகள்” என்ற கட்டுரை ஹிஜ்ரத் –
அகதியாகுதல் – என்பது அவமானம் அல்ல.தன்மானத் தோடு
வாழ்வதற்கான ஓர் அரிய வாய்ப்பு. அது அவமரியாதை அல்ல.
சுயமரியாத கிடைப்பதற்கான புதிய சுழலை ஏற்படுத்துவதாகும்
என ஹிஜ்ரத்திற்கு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சு கிறது.
கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர
விசாரிப்பதும் பொய் தான் என்று அதிர்ச்சி ஆரம்பம் தரும்
“விஞ்ஞானத்திற்கு மெஞ் ஞானமே முன்னோடி” என்னும்
ஆக்கம் இந்தியாவின் மக்கள் ஜனாதிபதி விஞ்ஞானி அப்துல்
கலாமின் “கனவு காணுங்கள்” என்ற அறிவியல் அறை
கூவலுக்கு இஸ்லாமே அடிப்படை என்பதை விளக்குகின்றது.
முதல் மீலாது மாநாடு எங்கே நடந்தது ? மண்ணிலா ?
விண்ணிலா ? அதை நடத்தியது யார் ? பங்கு பெற்றவர்கள் யார் ?
நிறைவுரை நிகழ்த் தியது யார் என்பதற்கு பல அரிய தகவல்களை
குர்ஆன் ஒளியில் முதல் மீலாது மாநாடு
என்னும் கட்டுரை கொட்டித்தருகிறது.
சூஃபியிசம் என்றால் என்ன ? வாழ்வின் ஒவ்வொரு
கணத்தையும் இறை விழிப்போடு கட்டிக்காப்பது,ஒவ்வொரு
அசைவிலும் படைத்தவனை தரிசிப்பது இதன் மூலம் வாழ்வை
அணு அணுவாக அனுபவித்து உயிர் வாழ்தலுக்கு அர்த்தமும்
எழிலும் சேர்ப்பதாகும் என்று “சூஃபியிசம்” சொக்க வைக்கிறது.
ஓரறிவு பெற்ற படைப்பு எது ? அவ்வாறே ஈரறிவு மூவறிவு
நாலறிவு ஐயறிவு ஆறறவு பெற்ற சிருஷ்டிகள் யாவை ?
ஏழாவது எட்டாவது அறிவு படைத்த மனிதர் யார் ? இதில்
விஞ்ஞானிகளும், சட்ட நிபுணர்களான இமாம்களும் எந்த
அறிவைப் பெற்றிருந்தார்கள் ? என்ற நுணுக்கத்தையும்
ஃபிக்ஹின் சட்ட ஞானம் மற்றும் அதன் ஆராய்ச்சியின்
அடி ஆழத்தையும் “இமாம்களின் நுண்ணறிவு”
நயம்பட எடுத்துரைக்கிறது.
“மிஃராஜ் வின்னேற்றப் பயணம்” இஸ்ரா மிஃராஜின்
வினோதத்தை விஞ்ஞான ஒளியில் விவரிக்கிறது.
“பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை” என்னும் கட்டுரை
பராஅத்தின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை குர்ஆன் ஹதீஸ்
ஒளியில் புரிய வைக்கிறது.
நோன்பின் பௌதீக குணங்களையும் ஆன்மீக அகமியங்களையும்
“நோன்பு ஒரு அதிசயம்” அறிவிக்கிறது.
“ஜக்காத் வருடா வருடம் வழங்க வேண்டும்” என்பதை
குர்ஆன் ஹதீஸ் ஒளியில் தர்க்க வாதத்தோடு ஜக்காத் கட்டுரை எடுத்துரைக்கிறது.
“ஹஜ்ஜிப் பெருநாள்” என்ற தலைப்பு இரவே இல்லாத
ஒரு பகலை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
“இஸ்லாமியப் பெண்ணியம்” பெண் கல்வியின் முக்கியத்துவம்,
இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளை உலகிற்கு
வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
“ஹஜ் யாத்திரை சில சிந்தனைகள்” ஹஜ் செல்வோருக்கும்
ஹஜ் சென்று வந்தோருக்கும் பயனளிக்கும் ஒரு கட்டுரை.
“குர்ஆன் கூறும் நடுநிலை சமுதாயம்” என்னும் கட்டுரை
சிறந்த சமுதாயமான இந்த இஸ்லாமிய சமுதாயம் சிறப்புற்று
விளங்குவது எப்படி என்பதை விவரிக்கிறது.
இஸ்லாத்தை மழையாக மக்கள் இருக்கும் இடத்திற்கு
எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை “அழைப்புப் பணி
ஓர் ஆய்வு” நமக்கு அழைப்பு விடுக் கின்றது.
நிறைவாக சந்தோஷம் என்பது நமக்கு வெளியே காலத்திலோ
இடத் திலோ இல்லை.அது உனது அசைக்க முடியாத
நம்பிக்கையின் பிறப்பிட மான உனது உள்ளில் உள்ளது.
உள்ளம் இறைவனின் பார்வை விழுமிடம். உறுதியான
நம்பிக்கை அதில் உறைந்து விட்டால் சந்தோஷம் பொங்கி
எழும்.அது உனது உயிரின் மீதும் ஆத்மாவின் மீதும்
நிரம்பி வழிந்து அகிலத்தாரின் மீதும் பரவும்.ஆக
சந்தோஷம் வெளியே இல்லை என்பதற் கான
சூத்திரத்தை சொல்லித்தருகிறது.
மஸ்ஜித் இந்தியாவின் தலைவர் A.V.M ஹாஜா மைதீன்
அவர்கள் தனது அணிந்துரையில் தெரிவித்திருப்பது
போல தெள்ளிய நடையில் எளிய முறையில் எல்லோரும்
இலகுவாக புரிந்து கொள்ளும் அளவுக்கு ஆசிரியர் எடுத்த முயற்சி பாராட்டத்தக்கது.
ஆக மொத்தத்தில் தமிழ் கூறும் இஸ்லாமிய நல்லுலகம்
இந்த புத்தகத்தைப் படித்து பயன் பெற வேண்டிய நூலாகும்.
அல்லாஹ் இந்த புத்தகத்தை ஏற்றுக் கொண்டு ஆசிரியருக்கும் இதை நுகர்வோருக்கும் பயனளிக்க தவ்ஃபீக் செய்வானாக ஆமீன்.
வஸ்ஸலாம்.

இப்படிக்கு ; படித்த பரிந்துரையாளன் (1-12-2015,ஸஃபர் 19)
வெளியீடு ;--
மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர்
மற்றும் மலேசியக் கிளைகள்.
மற்றும் மலேசியக் கிளைகள்.
0 comments:
Post a Comment