Saturday, July 30, 2016

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் மகான் பாபா செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் அவர்களின் 50ம் ஆண்டு நினைவு நாள் விழா

முதஅவ்விதன்!!   முபஸ்மிலன்!!!  முஹம்திலன்!!!   
முஸல்லியன் !!!வமுஸல்லிமா!!!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 
இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் மகான் பாபா 
செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் அவர்களின், 
50ம் ஆண்டு நினைவு நாள் விழா 28.7.2016 அன்று பனைக்குளம் 
முஸ்லிம் பரிபாலன சபை, முஸ்லிம் நிர்வாக சபை, ஐக்கிய 
முஸ்லிம் சங்கம், வாலிப முஸ்லிம் சங்கம் ஆகியவற்றின் 
நிர்வாகிகள் முன்னிலையில், பனைக்குளம் மகான் பாபா 
செய்யிது முஹம்மது வலியுல்லாஹ் நினைவு நாள் விழா 
ஜும்ஆ பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.


மஃரிப் தொழுகைக்குப் பின் ஷாதுலிய்யா திக்ரு மஜ்லிஸும்,
அதனை தொடர்ந்து யாஸீன் ஓதி சிறப்பு துஆவும் நடைபெற்றது.



 இவ்விழாவில் பனைக்குளம், பேரையூர், மதுரை, சென்னை,வாலிநோக்கம்,ஆற்றங்கரை,அழகன்குளம், புதுவலசை, 
அத்தியூத்து, சித்தார்கோட்டை,வாழூர்,பெருங்குளம், உச்சிப்புளி, இராமநாதபுரம், மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்தும் மகான்பாபாவின் 
நேசர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.












விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மகான்பாபாவின்
 குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தார்கள்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள். 

Thursday, July 28, 2016

பனைக்குளம்.மெய்நிலை கண்ட தவஞானி,அறிவுலகப் பேரொளி மஹான் பாபா,செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் (ரலி) அவர்களின், நினைவு நாள் விழா,


முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! 
முஸல்லியன்! வமுஸல்லிமா!!!

பனைக்குளம்.மெய்ஞான மாமேதை,மெய்நிலை கண்ட தவஞானி,
அறிவுலகப் பேரொளி அல்ஹாஜ், அல்லாமா,மலிகுல் உலமா,
அஷ்ஷெய்குல் காமில், குத்புஸ்ஜமான், மஸீகுல் அனாம்,
ஆரிபு பில்லாஹ், ஷெய்குணா, செய்யிதி, மாமஹான் பாபா,
செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் (ரலி) 
ஹழரத் கிப்லா அவர்களின்,50- ஆம் ஆண்டு நினைவு 
நாள் விழா,நாள்  ( 28-07-2016 ) வியாழன் பின்னேரம்
வெள்ளி இரவு 7-00 மணிக்கு



தர்ஹா ஷரீஃபில் அன்னார் பெயரில் குர்ஆன் கானி செய்யப்பட்டு,
  ஜீரணி வழங்கப்படும்.அது சமயம் கண்ணியம் நிறைந்த உலமாப் பெருமக்களும்,பல அறிஞர் பெருமக்களும், சிறப்பான இந்த மஜ்லிஸில் கலந்துகொண்டு துஆச்செய்ய இருக்கின்றார்கள்.அனைவரும் சிறப்பான
 இந்த மஜ்லிஸிற்கு வருகை தந்து சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸில் கலந்து கொண்டு நல்லாசி பெற்று உங்கள் வாழ்விலும், தொழிலிலும்,சிறப்புப் பெற்று,மனம் நிறைந்த நோய் நொடி இல்லாத நல் வாழ்வு வாழ 
அன்புடன் அழைகின்றோம்.

இப்படிக்கு.

மௌலானா மௌலவி அல்ஹாஜ் 
            M. செய்யிது முஹம்மது ஆலிம் மன்பயீ.                 

 S/O அல்ஹாஜ் மௌலானா மர்ஹூம் 
M.முஹம்மது முபாரக் ஆலிம் மன்பயீ.

விழாக் குழுவினர், பனைக்குளம்.


  
இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் அனைவர்களும் தவறாது 
கலந்துகொண்டு,அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,
அருளையும்,பெற்றுக் கொள்ளுமாறு,சித்தார் கோட்டை 
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும்,
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் 
கிளையினரும், துஆச்செய்து அகமகிழ்ந்து,அன்புடன் 
அழைக்கின்றார்கள் வஸ்ஸலாம்.

வெளியீடு- மன்பயீ ஆலிம்.காம்.

மெஞ்ஞான கருவூலங்களே மேன்மைமிகு வலிமார்களே! 
நால்வகை அரண்போன்ற வலிமார்களே! 
நாடிவருவோரை காப்பீர்களே!

கவிஞர் நாகூர் காதர் ஒலி 1975 ல் எழுதிய பாடல் 
1977ல் பாடகர் A.ஜெய்னுல் ஆபிதீன் சிங்கப்பூர் 
மஜீது பிரதரஸ் ஆடியோ நிறுவனத்தில் பாடியது.

முஸ்தபா மஸ்லஹியின் முன் மண்டியிட்ட வஹ்ஹாபிசம் ( த த ஜ )


கோவையில் நடந்த மாநாடு ஒன்றில் வஹ்ஹாபிகளே! உங்களுக்கு ஆண்மை இருந்தால் நீங்கள் பெட்டைகள் இல்லையென்றால் வாதத்துக்கு வாருங்கள் என ஓர் குரல் ஒலித்து சொரணைகெட்டுக் கிடந்த வஹ்ஹாபிசத்துக்கு கொஞ்சம் ரோஷமேற்றியது. அந்த குரலுக்குச் சொந்தக்காரர்தான் முஹம்மது முஸ்தபா மஸ்லஹி என்னும் வஹ்ஹாபிசத்தின் சிம்ம சொப்பணம்!ரோஷத்தி விளைவு வேறு வழியில்லாமல் விவாத களத்தை சந்தித்து தனக்கு தானே மண்ணைவாரிப்போட்டுக்கொண்டார்கள ததஜ மூடர்கள்.விவாதத்தில் த த ஜ வினர் எழுந்து நிற்க முடியாத வகையில் சொத்தைகளாக்கப்பட்டனர்.

திருக்குர் ஆனில் எழுத்துப்பிழையென ஓர் கொள்கையை வகுத்து யூத கைக்கூலித்தனத்தின் முழு செல்லப்பிள்ளைகளாக வலம் வந்த ஜெயினுலாபிதீன் கோஷ்டியினரின் வேஷ்டியை தூத்துக்குடியில் அவிழ்த்தெறிந்ததில் தொடங்கியது மஸ்லஹியின் விவாதப்பயணம்! அல்ஹம்துலில்லாஹ்!

அற்புதமான பேச்சாற்றலும் தெளிவான சொற்களும் கொண்ட முஸ்தபா மஸ்லஹியின் வாதங்களுக்கு முன் வஹ்ஹபிசத்தால் எழுந்து நிற்கமுடியவில்லை.இதுவே கோவை விவாதத்திலும் தொடர்ந்தது.

எந்தெந்த ஹதீதுகளை எல்லாம் ஆபாசம் என த த ஜ காபிர்கள் மறுத்து வந்தார்களோ அவை அத்துனையையும் தெளிவாக மொழிபெயர்த்து ஆபாசம் என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் விளக்கமளித்து பெருமானாரின் ஹதீதுகளின் கௌரவத்தை விவாத களத்தில் பாதுகாத்த முஸ்தபா மஸ்லஹி ஹசரத் அவர்களின் வாதங்கள் எதிர்த்தரப்பு பார்வையாளர்களைக்கூட சிந்திக்க வைத்திருந்தது என்பதில் ஐயமில்லை!

த த ஜ இயக்கத்தின் போதை என அறியப்படக்கூடிய கஞ்சா இபுராஹீம் செய்த கேலி கிண்டல்களுக்கெல்லாம் உணர்ச்சிவசப்படாமல் புன்சிரிப்போடு ஹசரத் அவர்கள் வைத்த மறுப்புக்கள் நிச்சயம் கஞ்சாவை கடுப்பாக்கியிருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை!

ஹழரத் அவர்களின் வழிகேட்டுக்கெதிரான சத்தியமெனும் வாள் மத் ஹபு விவாதத்திலும் வஹ்ஹபிசத்தை கருவறுக்கும்! வஹ்ஹாபிசத்தின் மரண ஓலத்தை கோவையில் மீண்டும் ஒலிக்கச் செய்யும்!

முஸ்தபா மஸ்லஹி போன்ற இளம் அறிஞர்கள் களத்தில் இருப்பது த த ஜ போன்ற யூத சரக்கு வியாபாரிகளுக்கு ஒரு போதும் நல்ல சகுணமாக இருக்கப்போவதில்லை!

யா அல்லாஹ்! முஸ்தபா மஸ்லஹி ஹழரத் அவர்களின் ஆயுளை நீடித்து அவர்களின் இல்மிலும் பரக்கத் செய்து சத்தியத்துக்காக தொடர்ந்தும் போராடக்கூடிய ஆற்றலையும் வழங்கிடுவாயாக!

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள். 

யார் இந்த தலைமை காஜி !!!



அரபு நாட்டில் இருந்து சுமார் 700 வருடங்களுக்கு முன்பு இந்தியா வந்த அரபு வம்சாவளியினரின் குடும்பத்தினர் இவர்கள் நவாயத் என்று அழைக்கப் படுகின்றனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குடியேறிய இவர்கள் 1700 களில் தமிழகத்தின் ஆற்காடு பகுதியிலும் பிறகு சென்னை பகுதிகளில் குடியேறினர். மார்க்க அறிஞர்கள் நிரம்பிய இவர்களின் குடும்பம் காஜி என்ற பெயராலேயே அழைக்கப் பட்டது. இவரது மூதாதையர்கள் பல மார்க்க விளக்க நூல்களை எழுதியவர்கள். குர்ஆனுக்கு உருது மொழியில் மொழி பெயர்ப்பு, தப்சீர் எனும் விளக்கவுரை என மார்க்கத்துக்கு அளவற்ற சேவைகள் புரிந்த இவர்களது குடும்பத்தை சார்ந்த அறிஞர்கள் ஆற்காடு நவாபுகளால் அரசு காஜியாக நியமிக்கப் பட்டனர். (அந்த காலத்து உச்ச நீதிமன்ற நீதிபதி என்று வைத்துக் கொள்ளுங்களேன்).அன்றைய தமிழகத்தை ஆற்காடு நவாபுகளே ஆண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஜி சலாஹூத்தீன் அய்யூப் இந்த குடும்ப பாரம்பர்யத்தில் பிறந்தவர். உலகப் புகழ் பெற்ற இஸ்லாமிய பல்கலைக் கழகமான எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்.

நவாபுகள் காலத்தில் 1800 களில் ராயப் பேட்டை திவான் தோட்டத்தில் மதரஸா முஹம்மதியா என்ற பெயரில் பள்ளிவாசலுடன் இணைந்த மார்க்க கூடத்தை இவர்களது முன்னோர்கள் நடத்தி வந்துள்ளனர். அதுவே தற்போதைய தலைமை காஜியின் அலுவலகமாகவும்,இருப்பிடமாகவும் உள்ளது.

இங்கு அரிய வகை 
நூல்களை கொண்ட நூற்றாண்டுகளை கடந்த ஒரு நூலகம் இயங்கி வருகிறது. சென்னையின் பழமையான நூலகம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். உருது,பார்சி,அரபி மொழிகளின் பழமையான மேனுஸ்கிரிப்ட் என்று சொல்லப்படும் குர்ஆன்,மார்க்க,வரலாற்று நூல்களை தேடி உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள்,ஆராய்ச்சி மாணவர்கள் இங்கு வருகின்றனர்.

கடைசியாக விஷயத்துக்கு வருவோம். தமிழக காஜியின் பத்வா அடிப்படையிலிலேயே தமிழக முஸ்லிம்கள் தங்கள் பெருநாள்களை கொண்டாடி வருகின்றனர். சுன்னத் வல் ஜமாத்இனரின் எந்த பத்வாவையும் ஏற்காத மாறாக முஷ்ரிக்குகள் என்று தங்கள் கருத்துக்களை ஏற்காத சுன்னத் ஜமாத்தினரையும் பிற அமைப்புகளை சார்ந்த முஸ்லிம்களையும் தூற்றி வரும் ததஜ அமைப்பினர் பிறை விஷயத்தில் தங்கள் விருப்பத்துக்கு தலைமை காஜியை பத்வா கொடுக்க வேண்டும் என நினைப்பதும், அவ்வாறு நடக்கவில்லையென்றதும் தலைமை காஜியின் வயதையும் அவர் மார்க்க அறிஞர் என்பதையும் பொருட்படுத்தாமல் மிகக் கேவலமாக ஏசி வருவதையும் சகிக்க முடியவில்லை.

இறுதியாக தலைமை காஜியை மாற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்திலும் இறங்கியுள்ளனர்.

தலைமை காஜி அவர்களை நன்கறிந்தவர்களுக்கு தெரியும் அவர் மிக,மிக எளிமையானவர், மக்கள் எளிதில் அணுகக் கூடியவர் அது மட்டுமல்ல எந்த நிர்பந்தத்திற்கும் அடி பணியாதவர்.தான் வகிக்கும் பொறுப்புக்காக அரசிடம் இருந்து சம்பளமோ,சலுகைகளோ பெறாதவர்.

தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். தமிழகத்தின் ஒரு கோடி முஸ்லிம்களும் தலைமை காஜிக்கு ஆதரவாக உள்ளனர். ததஜ வினரின் நிர்பந்தத்துக்கு அரசு இணங்கினால் பெரும்பான்மை முஸ்லிம் மக்களின் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை சொல்லி வைக்கிறோம்.


வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

தமிழ்நாடு அரசு தலைமை காஜி !!!


தமிழ்நாடு அரசு தலைமை காஜி மௌலவி “அப்லளுள் உலமா” 
முப்தி டாக்டர் ஸலாஹுத்தீன் முஹம்மத் ஐயூப் (அல் அஸ்ஹரி)
 M.A, M.Phil, Phd. 
.
இவர்கள் உலக முஸ்லிம்களின் மார்க்க தீர்ப்பு தலைமையகமான 
எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைகழகத்தில் கற்றவர். வயதில் 
முதிர்ந்த நல்ல அனுபவசாலி, மார்க்க கல்வியும் உயர்கல்வியும் கற்றவர். ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
.
1. அரசு கொடுத்த சைரன் வைத்த காரை வேண்டாம் என்று புறக்கணித்தவர்.
.
2. அரசு ஒதுக்கிய வீட்டை (கோட்டஸ்) வேண்டாம் என்று புறக்கணித்தவர்.
.
3. அரசு கொடுத்த சம்பளத்தை புறக்கணித்தவர்.
.
4. அரசு கொடுத்த தலைமை அலுவலகத்தை புறக்கணித்தவர்.
.
5. அரசு அதிகாரி என்ற கிரீன் கார்டு சலுகைகள் அனைத்தையும் புறக்கணித்தவர்.
.
இத்தகைய ஒரு மார்க்க அறிஞரை ஒழிப்பதில் மும்முரமாக செயல்படும் தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் என்னும் வஹாபி இயக்கம் ஒரு ஸியோனிச கைக்கூலி என்று தமிழ்நாட்டு முஸ்லிம்கள் தெரிவிக்கின்றார்கள்.
.
காலம் முழுதும் பொய் பேசி, மார்கத்தை அரசியலாக்கி ஹராத்தை சாப்பிட்டு இயக்கம் வளர்க்கும் தமிழ்நாட்டு தௌஹீத் ஜமாஅத் என்னும் வஹாபி தருதலைகள் இவரைப் போன்ற ஒரு நேர்மையான மார்க்க அறிஞர் மீது குற்றம் சாட்டுவது சாத்தான் வேதம் ஓதிய கதைதான் என்றும் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.
.
மேலும் இவர்கள் மீது எந்தவொரு தமிழக முஸ்லிம் ஆலிம்கள் யாரும் சுட்டு விரல் நீட்டி அவரை குற்றம் சாட்டியதில்லை. வஹாபிகள் 
மட்டும்தான் குறை கூறி திரிகிறார்கள்.
.
தமிழ்நாடு அரசு தலைமை காஜி அவர்கள் தமிழக முஸ்லிம்களுக்கு மட்டும்தான் காஜி வஹாபிகளுக்கு அல்ல என்றும் தமிழக 
முஸ்லிம்கள் கூறுகிறார்கள். 
.
ஆதலால் முஸ்லிம்கள் அனைவரும் வஹாபிகளின் சொல், செயலை பின்பற்றாமல், வஹாபிகளின் சூழ்ச்சிகளில் சிக்கி விடாமல் உங்களையும், உங்கள் குடும்பத்தார்களையும் பாதுகாத்து கொள்ளுங்கள்.
.
நன்றி: தமிழக முஸ்லிம்கள்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள். 

Wednesday, July 6, 2016

ஈத் முபாரக் ( புனித ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.)


முதஅவ்விதன்!!   முபஸ்மிலன்!!!  முஹம்திலன்!!!   முஸல்லியன் !!!வமுஸல்லிமா!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

அன்பார்ந்த பெரியோர்களே! இளைஞர்களே! 
அருமைத் தாய்மார்களே! சகோதர சகோதரிகளே! 
பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து 
வணக்கம் செய்தால் உயர் பதவி கிடைக்கும் என்பார்கள்.இம் மூன்றையும் கடைபிடிக்கிற நல் வாய்ப்பினை எல்லாம் வல்ல 
அல்லாஹ் இந்த ரமழான் மாதத்திலே நமக்கு வழங்கினான்.

பகலெல்லாம் நோன்பு வைத்து,இரவிலே இருபது ரக்கஅத்துகள் 
தொழுது, அல்லாஹ்வுடைய அளப்பெரும் அன்பையும், 
அருளையும் பெற்ற எங்கள் இஸ்லாமிய அன்பு நெஞ்செங்களே! 
உங்கள் அனைவர்களுக்கும் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,இன்னும் ஆறு நோன்புகள் நோற்க இருக்கின்ற, 
உயர்ந்த சீதேவிகளுக்கு ஆறு நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,
சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர் சார்பாக அகமுவந்து தெறிவித்துக் கொள்கிறோம் வஸ்ஸலாம்…..

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .

பெருநாள் அன்று பேன வேண்டியவை !!!


1.அதிகாலையில் பேரீச்சம் பழம் சாப்பிடுவது.
2.மிஸ்வாக் செய்து வாயைச் சுத்தப் படுத்துதல்.
3.ஈது தொழுகைக்காக குளிக்கிறேன் என்ற 
நிய்யத்துடன் குளித்தல்.
4.உணவு உண்டுவிட்டுத் தொழுகைக்கு வருதல்.
5.ஆகுமான நல்ல ஆடைகளை அணிதல்.
6.நறுமணம் பூசுதல்,சுருமா இடுதல்.
7.பெருநாள் தொழுகையை மகிழ்வுடன் நிறைவேற்றுதல்,
8.சந்தோசத்துடன் இருத்தல்,சந்தோசத்தை வெளிப்படுத்துதல்,
9.முஸாபஹா,முஆனகா செய்து வாழ்த்துக்களைப் 
பறிமாறிக்கொள்ளுதல்.
10.தர்மங்கள் அதிகமாக செய்தல்.
11.உறவுகளைச் சந்தித்து அன்பை பறிமாறுதல்.
12.அனாதைகள்,ஏழைகள்,நோயாளிகளுக்கு உதவிகள் புரிதல்.
13.அல்லாஹ்வின் அன்பும்,நட்பும், நெருக்கமும் தரும் 
காரியங்களை எப்பொழுதும் செய்தல்.

14.பெருநாள் வந்துவிட்டால் நபி ஸல்லல்லாஹு 
அலைஹிவ ஸல்லம் அவர்கள் போவதற்கும் 
வருவதற்கும் பாதைகளை மாற்றிக்கொள்வார்கள். 
ஆதாரம் ; புகாரி.
வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள்.

ஷவ்வால் மாத ஆறு நோன்புகள்-Shawwal Six Fasting


நோன்பு என்பது ஒரு வகை வணக்கமாகும். நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமலான் மாத கடமையான நோன்புகளை நோற்பதோடு மட்டுமல்லாமல், கீழ்கண்ட தினங்களிலும் உபரியாக நோன்பு நோற்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். அதை நமது இமாம்கள் சுன்னத்தான நோன்பாக நமக்கு ஆக்கித் தந்திருக்கிறார்கள்.

01. ஷவ்வால் மாத ஆறு நோன்புகள்.

02. பிரதி திங்கள், வியாழக் கிழமைகள் நோன்பு வைப்பது சுன்னத்து முஅக்கதாவாகும்.

03. ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள். அவை அய்யாமுல் பீழ் என்ற வெள்ளை நாட்களாகும்.அதாவது மாதத்தின் 13, 14, 15 ஆகிய மூன்று நாட்கள் மற்றும் ஒவ்வொரு மாதத்திலும் பிறை 27, 28, 29 ஆகிய மூன்று இரவு இருளான (அய்யாமுஸ்ஸூத்) என்ற நாட்களிலும் நோன்பு வைப்பது சுன்னத்தாகும். துல்ஹஜ் மாதம் பதிமூன்றுக்குப் பதிலாக பதினாறில் நோன்பு வைக்க வேண்டும்.

04. ஆஷுரா நாள்: முஹர்ரம் பத்தாம் நாள். மேலும் அதற்கு ஒரு நாள் முந்தி அல்லது ஒரு நாள் பிந்தி சேர்த்து வைப்பது சுன்னத்தாகும்.

05. அரபா நாள்: துல்ஹஜ் மாதம் 9 ஆம் நாள்.

ரஜப், ஷஃபான் மாதங்கள் நோன்பு நோற்பது ஏற்றமானதாகும்.

களாவான ஃபர்ளான நோன்பு நோற்கும்போது சுன்னத்தான நோன்பையும் நோற்பதாக நிய்யத் வைத்துக் கொண்டால் இரண்டும் நிறைவேறி இரண்டிற்குரிய தவாபும் கிடைக்கும். நிய்யத் வைக்கவில்லையெனில் சுன்னத்தான நோன்பு உடைய தவாபு கிடைக்காது.

ஷவ்வால் மாத ஆறு நோன்புகள்.

ரமலான் மாதத்தை அடைந்த நாம் அதைத்தொடர்ந்து வரக்கூடிய ஷவ்வால் மாத ஆறு நோன்புகளைப் பற்றிய சிறப்புகளை அறிந்து அதை நோற்பது அவசியமான ஒன்றாகும்.

அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் முஹம்மது(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள்:

'யார் ரமலான் மாதத்தின் நோன்பையும் நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) காலமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமம்' என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

'ஒரு மாத நோன்பு பத்து மாத நோன்புக்குச் சமமானது அதன் பின்னர் ஆறு நோன்பு இரண்டு மாதங்களுக்குச் சமமானது' என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஃப்வான் (ரலியல்லாஹு அன்ஹு); நூல்: தாரிமி, இப்னுமாஜா, அஹ்மத்

இந்த ஹதீஸின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினை வருடமெல்லாம் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் எவ்வளவு பலனை அடைவாரோ அந்நன்மைகளை ரமலானின் 30 நோன்புகளையும், ஷவ்வாலின் ஆறு நோன்புகளையும் நோற்றால் கிட்டுகின்றது.

இந்த ஆறு நோன்புகளை ஈதுப் பெருநாள் முடிந்ததன் மறுநாளிலிருந்து துவங்கி, தொடர்ச்சியாக ஆறு நாட்கள் நோன்பிருக்க வேண்டும். அதுவே சிறப்பானதாகும் என்பது இமாம் ஷாபிஈ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களது கருத்தாகும்.

ஷவ்வால் மாதத்தின் ஏனைய நாட்களில், அந்த மாதம் முடிவடைவதற்குள் பிரித்து பிரித்துக் கூட 6 நோன்பையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று இமாம் அபூஹனிஃபா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்.

ஏனென்றால் இரு பெருநாட்களிலும் நோன்பு நோற்பது ஹராம் என்பதை நாம் பொதுவாக அறிந்த ஒன்றாகும். எனவே சுன்னத்தான ஷவ்வால் மாத ஆறு நோன்புகளை பெருநாளுக்கு பிறகு விரும்பினால் தொடர்ந்தோ அல்லது ஷவ்வால் மாதத்தில் எந்த நாளையிலும் விட்டுவிட்டோ நோற்கலாம். எனவே, இவற்றில் எது தங்களுக்கு இயலுமோ அந்த வகையில் ஷவ்வால் ஆறு நோன்பை நோற்பது சிறந்தது.

இதை அடிப்படையாக வைத்து பெரும்பான்மையான புகஹாக்கள் குறிப்பாக ஹனபி, ஷாபிஈ மற்றும் ஹன்பலி மத்ஹப் இமாம்கள் ஷவ்வால் மாதத்தில் நோன்பு நோற்பதை அறிவுறுத்துகிறார்கள். – ஆதாரம்: ரத்துல் முக்தார், முங்னி அல் முஹ்தாஜ் ஷாஹ் அல் மின்ஹாஜ், கஸாஸஃப் அல் கினா.

ஷாபிஈ மற்றும் ஹன்பலி இமாம்கள் மிகச் சிறந்தது, ஆறு நோன்பு நோற்பதற்கு பெருநாள் கழித்த மறுநாளிலிருந்து நோன்பு நோற்பதுதான் என்று சொல்கிறார்கள். – மின்ஹாஜ், ஹயாத் அல் முன்தஹா.

இதற்குரிய காரணத்தை அல்லாமா கதீப் அல் ஷிர்பினி விவரிக்கிறார்கள், நோன்பு நோற்பதை விரைவுபடுத்துவது மிகவும் நல்லது. சோம்பேறித்தனம் மற்றைய காரணங்களால் இந்த சுன்னத்தை இறுதியில் நிறைவேற்ற முடியாமலாகிவிடும்.  எவ்வாறிருப்பினும் நோன்புப் பெருநாளை தொடர்ந்து தொடர்ச்சியாக அல்லது தொடர்ச்சியில்லாமல் ஷவ்வால் மாதம்ஆறு நோன்புகள் நோற்பதன் மூலம் இந்த சுன்னத்தை நிறைவேற்றிடலாம்;. -முங்னி அல் முஹ்தாஜ்.

இறுதியில் ஹனபி மத்ஹப் இமாம்கள் சொல்கிறார்கள், இரண்டும் அதாவது பெருநாளைத் தொடர்ந்த ஆறு நோன்புகள் அல்லது ஷவ்வால் மாதத்தில் தொடர்ச்சியில்லாமல் விட்டுவிட்டு நோற்கப்படும் ஆறு நோன்புகள் சுன்னத்தைத்தான் பிரதிபலிக்கின்றன. – ரத்துல் முக்தார்.

இருப்பினும் எவர் ஒருவர் சோம்பேறித்தனம், மறதியின்மை மற்றும் பல்வேறு காரணங்களைக் கொண்டு இந்த நோன்பை நோற்க முடியாது என்று பயந்தால், அவர்கள் ஆறு நோன்பு நோற்பதை பெருநாளைத் அடுத்த நாட்களில் விரைவுபடுத்த வேண்டும்.

- ரத்துல் முக்தார் அலா அல் துர்ருல் முக்தார் 2:125, முங்னி அல் முஹ்தாஜ் ஷரஹுல் மின்ஹாஜ் 2:184,185, புஹுதி, கஸஅஸஃப் அல் கினா 2:237,238

நன்றி ;- sufimanzil.org