Sunday, December 30, 2012

இப்போதைக்கு உலகம் அழியாது!



மாயன் இன காலண்டர்.இதுதான் இப்போது உலகெங்கிலும் பேச்சு.மத்திய அமெரிக்காவில் கி.மு.2600 க்கும் கி.பி.900 த்திற்கும் இடையில் வாழ்ந்த ஒரு முன்னேறிய சமூகம் மாயன் இனம்.தொண்மையான நாகரிகத்தைக் கொண்ட இந்த இனம்,கட்டிடக் கலை,வானவியல்,நாள்காட்டித் தயாரித்தல் போன்ற துறைகளில் திறமையுள்ளவர்களாகத் திகழ்ந்தார்கள்.

சூரிய,சந்திர நகர்ச்சியைக் கணக்கிட்டு இரண்டு காலண்டர்கள் தயாரித்து நடைமுறையில் வைத்திருந்தினர்.ஒன்று ஒரு வருடத்திற்கு 360 + 5 நாட்கள்,18 மாதங்களை கொண்டது.இன்னொன்று,ஒரு வருடம் என்பது 260 நாட்கள்,13 மாதங்களாகும்.ஒருமாதம் என்பது இவர்களிடம் 20 நாட்களாகும்.இந்த மாயன் இன காலண்டர்,21,12,2012 என்ற தேதியுடன் முடிவடைகிறது. இதனால் இந்த தினத்தோடு -- அதாவது இன்றோடு இந்த உலகம் அழிந்துவிடும் என புரளி கிளப்பிவிடப்பட்டுள்ளது.

இந்த மூட நம்பிக்கையினால் ஒரு பக்கம் பீதியும்,மறுபக்கம் பிராத்தனை,பாதுகாப்புச்சாதனங்கள் என வியாபாரமும்,சூடுபிடித்துள்ளது.மத அடிப்படையும்,தெளிவும் உள்ளவர்களுக்கு இதில் எந்தக்குழப்பமும்,பயமும் இப்போதும்,எப்போதும் இருந்ததில்லை.இந்த உலகம் முடிவில் ஒருநாள் அழிந்து போகும்.இது முஸ்லிம்களின் உறுதியான நம்பிக்கை.இந்த யுகமுடிவுக்கான தேதிகுறிக்கப்பட்டு விட்டது.ஆனால் அது வெளிப்படையாகவும்,குறிப்பாகவும் அறிவிக்கப்படவில்லை.

ஆகவே யுக முடிவுக்கான 21.12.2012 தேதி உள்ளிட்ட எந்த தேதியும் அடிப்படை ஆதாரமற்றது. மறுமைநாள் மறுப்பாளர்கள் அது பற்றித் திரும்பத் திரும்ப யுக முடிவுநாள் எப்போது வரும் எனக் கேட்டு நச்சரித்தும்,திருக்குர்ஆன் அது பற்றி மூச்சுவிடவில்லை.இது பற்றிச் சொல்வதற்கு நபிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

எனவே இது குறித்து யார் என்ன சொன்னாலும் அது சரிதான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.'' ( நபியே!) இறுதி நாளைப்பற்றி அது எப்பொழுது வரும் என அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்; அதன் அறிவு என இறைவனிடத்தில்தான் இருக்கிறது. அது வரும் நேரத்தை அவனைத்தவிர மற்றெவரும் தெளிவாக்க முடியாது.(அது சமயம்) வானங்களிலும் பூமியிலும் மகத்தான சம்பவங்கள் நிகழும்.திடீரென்றே தவிர (அது) உங்களிடம் வராது... (அல்குர்ஆன்,7 ; 187)

இதல்லாமல் இப்போதைக்கு உலகம் அழிவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.சூரியன் பலகோடி ஆண்டுகள் எரிந்து போயிருந்தாலும்,இன்னும் பல கோடி ஆண்டுகள் பிரகாசிப்பதற்குத் தேவையான எரிபொருள் அதிடம் இன்னமும் மிச்சமிருக்கிறது என விஞ்ஞானிகளும் கோடிட்டுக்காட்டியுள்ளனர்.எனவே உலகம் இப்போதைக்கு அழியாது.அதற்கு முன்பு பயங்கரமான பல சம்பவங்களெல்லாம் நிகழவேண்டியதிருக்கிறது.

வாழ்க்கையின் சகல பரிமானங்களுக்கும் பரிகாரம் சொல்லியிருக்கும் இஸ்லாமிய மார்க்கத்தில்,யுக முடிவு நாளைக்குறித்தும் அதன் அடையாளங்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. எதையும் விட்டும் வைக்காத ஏந்தல் நபி (ஸல்) இது பற்றி  கூறியிருக்கிற விபரங்களை இப்போது தெரிந்து கொள்வது ரொம்ப பொருத்தமாகும்.'' இனி எந்த காலமும் வராது,அதற்குப்பிறகுள்ளது அதை விட மிக மோசமாக இருந்தே தவிர'' (நபிமொழி,புகாரி ;7068) 

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசிக்கொண்டிருந்த தனது தோழர்களிடம் வந்து,என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? எனக்கேட்க '' நாங்கள் அழிவு நாளைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்'' என அவர்கள் பதில்கூறினார்கள்.அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அதற்கு முன் பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அது வராது என அந்தப்பத்தையும் கூறலானார்கள்.

1.புகை.2,தஜ்ஜால் வருகை.3,கால்நடை வெளிப்படுதல்.4,மேற்கிலிருந்து சூரியன் உதயமாகுதல்.5,ஈஸா நபி இறங்குவது.6,யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டம்.7,மூன்று நிலநடுக்கம்.ஒன்று கிழக்கில் 8,இன்னொன்று மேற்குலகில்.9,மற்றொன்று அரேபியத் தீபகற்பத்திலும் ஏற்படுவது.10,யமனிலிருந்து தீ பரவி மக்களை மஹ்ஷருக்கு ஒன்று (திரளுமிடத்திற்கு) விரட்டுவது. (முஸ்லிம் ; 2901)

இந்த நபிமொழி சற்று விரிவாக வேறு அறிவிப்பில் வந்துள்ளதைப் பார்ப்போம்.தஜ்ஜால் ; (ஏசுகிறிஸ்து மற்றும் முஸ்லிம்களின் எதிரி) ஒற்றைக்கண்ணன்.அவனது இருகண்களுக்கு மத்தியில்'' இறை மறுப்பாளன்''  என எழுதப்பட்டிருக்கும்.இதை எழுதத்தெறியாத நம்பிகையாளரும் வாசிப்பார். சிரியா, இராக் தேசங்களுக்கிடையிலிருந்து கிளம்புவான்.

பூமியெங்கும் மிகவேகமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பெருங்குளப்பங்கள் செய்வான்.இவன் பூமியில்  நாற்பது நாட்கள் தங்குவான். இதில் ஒருநாள் ஒரு வருடம் போலவும்  அடுத்த ஒருநாள் ஒருமாதம் போலவும்,அடுத்து வரும் ஒருநாள் ஒரு வாரம் போலவும்,அதற்கடுத்த நாட்கள் சாதாரன மற்ற நாள்களைப் போலவும் இருக்கும்.

 நான்தான் கடவுள் என பிதற்றுவான்.இவனுக்குப்பின் யூதர்கள் அணிதிரள்வார்கள்.இவனது அட்டகாசம் கட்டுக்கடங்காமல் போகும் போது,வானிலிருந்து ஈஸா நபி (அலை) ,சிரியா நாட்டின் ஜாமிஃமஸ்ஜிதின் கிழக்கு வெள்ளை மினராவில் வந்து இறங்குவார்கள்,பைத்துல் முகத்தஸ் அருகிலுள்ள '' பாபுல் லுத்து'' என்னுமிடத்தில் வைத்து தஜ்ஜாலை,ஈஸா நபி கொல்லுவார்கள்.

அடுத்து யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டம்.இவர்களை எதிர்த்து யுத்தம் செய்ய முடியாது.அதனால் உங்கள் சகாக்களை சேர்த்துக்கொண்டு தூர்சினாய் மலை பொதும்பில் ஒதுங்கி ஒளிந்து கொள்ளுங்கள் என  ஈஸா நபிக்கு அல்லாஹ் வஹி அறிவிப்பான் (காண்க ; 21 ; 96) இக்கூட்டம் புறப்பட்டு வரும்போது,இவர்களின் முதல் பிரிவினர் திப்ரீயஸைக் (கலீலி கடல்) கடப்பார்க்ள். (திப்ரீயஸ் ஏரி,கின்னரெட் ஏரி என்றும் அழைக்கப்படுகிற) இதிலிருந்து அவர்கள் நீர் அருந்துவார்கள். 

அவர்களின் கடைசி பிரிவினர் கடந்து செல்லும் போது இங்கு ஒரு காலத்தில் தண்ணீர் இருந்தது என்று கூறுவார்கள்.இப்பூமியில் உள்ளவர்களைக்கொன்று குவிப்பார்கள்.இப்போது விலைவாசி,தாற்மாறாக ஏறி இருக்கும்.ஒரு மாட்டுத்தலை 100 தீனாரை விட அதிகமாக இருக்கும்.இந்த நேரத்தில் ஈஸா நபியும் தோழர்களும் பிராத்திப்பார்கள்.

அப்போது அல்லாஹ் அந்த யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தினர் மீது ஒரு விஷப் பூச்சியை அனுப்பி அவர்களை ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாக அழித்தொழிப்பான்.அப்போது பூமியெங்கும் பிணக்காட கிடக்கும்.இராட்சத பறவைகளைக் கொண்டு அப்பிரேதங்கள் அப்புறப்படுத்தப்படும்.அதற்குப் பிறகு இப்பூமியெங்கும் பெரும் மழை பொழிவிக்கப்பட்டு,பூமி கழுவப்பட்டு,கண்ணாடி போல சுத்தமாக்கப்படும்.

மீண்டும் பூமி செழிப்பாகும்.ஒரு மாதுளம் பழத்தை ஒரு கூட்டமே சாப்பிடுவர்.பாலில் அபிவிருத்தி செய்யப்படும்.ஒரு ஒட்டகையின் பால்,பெருங்கூட்டத்திற்கும்,ஒரு மாட்டின் பால் ஒரு கோத்திரத்திற்கும்,ஒரு ஆட்டின் பால்,ஒரு குடும்பத்திற்கும் போதுமானதாக இருக்கும்.இவ்வாறு மக்கள் சுபீட்சமாக இருந்துகொண்டிருக்கையில்,அல்லாஹ் வசந்தக் காற்றை அனுப்புவான்.

அது மக்களுக்கு அக்குலுக்கு கீழே பாதிப்பை ஏற்படுத்தும்.அதில் இறை நம்பிக்கையாளர்களுடைய உயிர் கைப்பற்றப்படும்.அதன் பிறகு தீயவர்கள் மட்டுமே இவ்வுலகில் மீத மிருப்பர்.அப்பொழுது இந்த உலகம் அழியும்.(முஸ்லிம் ; 2937,திர்மிதி 2240)  '' மர்யமுடைய மகன் ஈஸா நிச்சயமாக நீதியான ஆட்சியாளராக உங்களுக்கு மத்தியில் இறங்கி வருவார்.சிலுவைகளை உடைப்பார்.பன்றியைக்கொல்லுவார் '' (புகாரி ; 3438) 

'' ஈஸா நபி இறங்கி வந்து கல்யாணம் முடிப்பார்கள்.அவருக்கு குழந்தை பிறக்கும்.45 வருடம் வாழ்வார்.பிறகு மரணிப்பார்.என்னுடன் எனது கப்றில் அடக்கம் செய்யப்பட்டு நானும்,ஈஸாவும் ஒரே கப்றில் அபூபக்கர்,உமருக்கு மத்தியில் (மறுமையில்) எழுவோம் '' (மிஷ்காத் ;5497) உலகம் அழிவதற்கு முன்பு சூரியன் மேற்கிலிருந்து உதயமாகும்.அதற்குப்பிறகு நம்பிக்கை கொண்டால் ஏற்றுக்கொள்ளப்படாது '' (முஸ்லிம் ;158)

'' ஒரு மனிதன் இறந்து விட்டால் அவனது மறுமை நிலை பெற்றது ''.தேவையில்லாமல் இவ்வுலக அழிவைப்பற்றி சிந்திக்காமல் நமக்கு மரணம் சம்பவித்தால் அதற்குப்பிறகுள்ள வாழ்க்கைக்கு நம் கை வசம் என்ன  அறச்செயல்கள் உள்ளது? என்று யோசிப்போம்.அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.வஸ்ஸலாம்..




என்றும் தங்களன்புள்ள

மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி
(தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர்,மலேசியா.)

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Friday, December 28, 2012

ஒடுக்கத்து புதனுடைய முக்கியத்துவம் (ஸஃபர் மாதத்தின் கடைசிப் புதன் கிழமை)




நக்சபந்திய்யா தரீக்காவின் பிரபலமான தலைவர் இமாம் ஷைகு ஃபரீதுத்தீன் (ரலி) அவர்கள் பின் வருமாறு அறிவிக்கிறார்கள்.ஸஃபர் மாதத்தின் கடைசிப்புதன் கிழமையன்று (இதை நமது மக்கள் ஒடுக்கத்துப் புதன் என்பார்கள்) உலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் வியாதிகளும், முஸீபத்துகளும் இறங்குவதாகவும்,அந்த நாளில் பின் வரும் ஸலாமத்துடைய ஏழு ஆயத்துகளையும் பீங்கான் பாத்திரத்தில் அதற்கான விஷேச மைய்யினால்) எழுதித் தண்ணீர் விட்டுக் கரைத்து குடித்தால் அந்த முஸீபத்துகளிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும் எனவும் அறிவிக்கிறார்கள்.


 (ஓதிய நீரை குடித்துவிட்டு நக்சபந்திய்யா ஷைகுமார்கள் மீது ஃபாத்திஹா ஓதிக்கொள்ளவும்) அதோடு பின் வரும் துஆவையும் ஒரு முறை ஓதுவது நல்லது.

(1) ஸலாமுன் கவ்லம் மிர் ரப்பிர் ரஹீம் (36--58)

(2) ஸலாமுன் அலா நூஹின் ஃபில் ஆளமீன் (37--79)

(3) ஸலாமுன் அலா இப்றாஹீம் (37--109)

(4) ஸலாமுன் அலா மூஸா வஹாரூன் (37--120)

(5) ஸலாமுன் அலா இல்யாஸீன் (37--130)

(6) ஸலாமுன் அலைக்கும் திப்தும் ஃபதுஹுலூஹா ஹாலிதீன் (39--73)

(7) ஸலாமுன் ஹிய ஹத்தா  மத்லயில் ஃபஜ்ர் (97--05)

அல்லாஹும்மஃஸிம்னா மினல் பலாயி வதர்க்கிஸ்சகாயி, வசூயில் கலாயி,வஷமாததில் அஃதாயி வமல்ஜூமில் வபாயி, வமவ்த்தி ஃபுஜாஅத்தின்,வமின் ஜவாலில் பரக்கத்தி,வனிஃமத்தி,வமினல் பரஸி,வல்ஜுதாமி,வல்ஜுப்னி, வல்பர்ஸாமி,வல் ஹும்மா,வஸ்ஸகீகத்தி,வமின் ஜமீயில் அம்ராழி,வல் அஸ்காமி,பிஃபழ்ளிக்க,வஜூதிக்க யாதல் ஜலாலி வல்இக்ராம்.பிரஹ்மத்திக்க யா அர்ஹமர் ராஹிமீன். வஸல்லல்லாஹு அலா சைய்யிதினா முஹம்மதின் வஅலா ஆலிஹி வஅஷ்ஹாபிஹி வஸல்லம்.வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.ஆமீன்.


நமது ஊர்களில் அரிசியைக் கரியாக்கி தண்ணீரில் குழப்பி அந்த மையைக்கொண்டு ஆயத்துக்களை நாணல் குச்சியால் எழுவது வழக்கம்.இவ்வாறு அரிசியைக் கரியாக்கி மை உண்டாக்கப்படுவதால் அதைக்குடிப்பதால் தீங்கு இல்லை.

கிராமப் புறங்களில் ஏழை மக்களிடம் பீங்கான் தட்டைகள் இருப்பது அரிது.ஆகவே சில ஆலிம்களும்,லெப்பைமார்களும் வழவழப்பாக இருக்கும் மா இலையில் அந்த ஏழு ஆயத்துக்களையும் எழுதிக் குடிக்கும் பழக்கத்தை ஏற்ப்படுத்தி இருக்கிறார்கள். மா இலை கிடைக்காவிட்டால் வழவழப்பான முந்திரி இலை போன்ற வேறு இலைகளிலும் எழுதிக் குடிக்கலாம்.

ஒடுக்கத்து புதனுடைய தினத்தில் ஸலாத்துல் இஸ்திகாரா என்ற நிய்யத்தில் நான்கு ரக்அத்துகள் தொழுவது விஷேசம்.ஒவ்வொரு ரக்அத்திலும் ஸுரா ஃபாத்திஹா ஒரு தடவையும்,இன்னாஅஉத்தைனா 17 தடவையும்,குல் குவல்லாஹு அஹத் 5 தடவையும்,குல் அஊது பிரப்பில் ஃபலக் ஒரு தடவையும், குல் அஊது பிரப்பின்னாஸ் ஒரு தடவையும் ஓதி தொழவேண்டும் 

இந்த நல்ல காரியங்களைத் தவறு என்றும், பித்அத் என்றும், விபரம் அறியாத சில முல்லாக்கள் பேசுவதும் ஒடுக்கத்துப் புதன்களிலுள்ள துஆ முதலிய நிகழ்ச்சிகளையே ஒட்டுமொத்தமாக இல்லை என்று சொல்வதும் ஸுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களிலும் கூட இதைக்கண்டித்து இமாம்கள் பயான் செய்வதும் அறியாமையாகும்.இந்த ஆயத்துக்களைத் தலையில் தேய்த்து குளிப்பது தவறு.காரணம் பரக்கத்தான தண்ணீர் கால்களில் மிதிபட வாய்ப்புண்டு



தொகுப்பு ;; அப்தலுல் உலமா அஷ்ஷெய்கு டாக்டர் தைக்கா ஷுஐபு ஆலிம் B.A.(Hons),M.A..,Ph.D.
நன்றி -- அல் முன்ஜியாத் (உள்ளம் மற்றும் உடல் நோய்களை நீக்கும் அருமருந்து)

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Thursday, December 27, 2012

தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் 11 ஆம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி




பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த பொன்னான மாதமாகிய ரபீஉல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு வழமைபோல் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் 1487 வது மீலாதுன் நபி (ஸல்) தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் வருகிற 12--01--2013 சனிக்கிழமை தொடங்கி 23--01--2013 புதன்கிழமை வரை 12 தினங்களுக்கு இஷா தொழுகைக்குப் பின் சரியாக ஒரு மணி நேரம் பயான் நடைபெறும்.

உரையாற்றுபவர்கள் ;---
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்
H.அப்துர் ரஹ்மான் ஃபாஜில் பாக்கவி,M.A
பேராசிரியர்,ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா -- அரபுக் கல்லூரி,நீடூர்,மயிலாடுதுறை.

ஆன்மாவுக்கும்,அறிவுக்கும் மிகுந்த பலன் தரும் இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரும் திரளாக வருகை தந்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேற்ப்படி பேச்சாளரை மலேசியாவில் மற்ற இடங்களுக்கு அழைக்க, மலேசியத் தலைநகர்,கோலாலம்பூர்,மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம்,மேலப்பாளையம்,மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் எஸ்.எஸ்,அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் அவர்களை  016--9276127  இந்த  எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

                         நிர்வாகக் குழு மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர்.

நாமறிவோம்!

நபி (ஸல்) பிறந்தநாள்
ஹி.மு.53 ரபீஉல் அவ்வல் --12
கி.பி.570 ஆகஸ்ட் --20
திங்கட்கிழமை -- அதிகாலை

வெளியீடு ;-- 
மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Wednesday, December 26, 2012

ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி 150 வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு குறித்த சிறப்புக் கூட்டம்


.
ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி 150 வது ஆண்டு நிறைவு விழா  நிகழ்வு குறித்த சிறப்புக் கூட்டம்  மன்பவுல் அன்வார் தாருல் ஹதீஸ் வளாகத்தில்  ஜாமிஆ முதல்வர் மௌலானா ஏ. நூருல் அமீன் ஹஜ்ரத் தலைமையில் 24.12.2012 காலை நடைபெற்றது  செயலாளர் ஹாஜி பி.எம். முஹமத் யஹ்யா பொருளாளர் ஹாஜி ஜபார் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


காரி   முகமத் அஹமத் ஹஜ்ரத் இறை வசனம் ஓதி துவக்கி வைத்தார்
இந்த சிறப்புக் கூட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நமது ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி 150 வது ஆண்டு நிறைவு விழாவை சிறப்பாக நடத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


*ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி 150 வது ஆண்டு நிறைவு விழா  & பட்டமளிப்பு விழா
   2013 ஜூன் 22,23.ஆகிய இரண்டு நாட்கள் நடத்துவது
.
* விழாவிற்க்கு சமுதாய அரசியல் கட்சி தலைவர்களை அழைப்பது
.
* ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி 150 வது ஆண்டு நிறைவு விழாவின் சிறப்பு மலர் வெளியிடுதல்
 .
* ஜாமிஆவின் 150 வது ஆண்டு  நினைவு வளைவு காயிதே மில்லத் சாலை ,மற்றும்
ஏரிக்கரை மெயின் ரோடு ஆகிய  இரண்டு இடங்களில் அமைப்பது.
.
* நமது ஜாமிஆவில் பட்டம் பெற்று சென்ற அணைத்து மன்பஈ  ஆலிம்களை  அழைத்து
   கண்ணியபடுத்தும் வகையில் நினைவு பரிசு வழங்குதல்.
 .
* விழா குழு  அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் வெளியிடப்பட்டன.
 .
விழா நிகழ்வு குறித்த சிறப்புக் கூட்டத்தில்  ஜாமிஆவின் பேராசிரியர்கள், உலமா பெருமக்கள், ஜாமிஆ நிர்வாககுழு  உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள் .

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Tuesday, December 25, 2012

கலங்கரை விளக்கம் அல்லாமா கலந்தர் மஸ்தான் ஹஜ்ரத் கிப்லா!

வியாழக்கிழமை காலை (20-12-2012) அன்று  அலுவலகம் வந்த உடனே தொலைபேசி வந்தது, இடியென என் நெஞ்சிற்கு செய்தியொன்றும் தந்தது அது நம் நெஞ்சுக்குகந்த பெருமேதை, நாநிலமறிந்த மார்க்க வல்லுநர், தமிழ் இஸ்லாமிய சமூகத்தின் கலங்கரை விளக்கம் மெளலவி எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சென்னையில் அதிகாலை 2.30 மணி அளவில் ஏகனளவில் ஏகிவிட்டார்கள் என்பது தான், தொலைபேசியில் ஒளித்த குரல் மிக வருத்தப்பட்டு சொன்னது தமிழகத்தில் எத்தனையோ மார்க்க மேதைகள் இருந்தாலும் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்களும், திருச்சி ரப்பானி ஹஜ்ரத் அவர்களும் பிரதான அறிஞர்களின் மகுடமாக திகழ்தார்கள் ஊருக்கு சென்றால் மனதார பல மார்க்க விளக்கங்களை கேட்டு மன அமைதியடைந்து வருவோம் அவர்களில் ரப்பானி ஹஜ்ரத்தை தொடர்ந்து நம் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்களும் இறையடி சேர்ந்து விட்டார்களே இனி நாம் ஊருக்கு சென்றால் இது போன்ற மாமேதை யாரை காண்போம்.. என தன் அங்கலாய்ப்பை சொல்லி புலம்பி அழுதார்! அவர் சொன்னது மிக உண்மை தான் தமிழகத்தின் பெரும்பகுதி மக்களுக்கு இஸ்லாமியமார்க்க கருத்தின் ஆழிய கருத்துக்களை அபூர்வ விளக்கங்கள் கொடுத்து இஸ்லாமிய அறிவூட்டியவர்கள்மறைந்த கலந்தர் மஸ்தான் சாஹிப் என்றால் மிகையாகாதுமிக சிறப்பான மனிதர்,கண்ணியமானவர் இவைகளை எல்லாம் அவரது நடை உடை பாவணைகளே சான்றுகள்கூறும்எங்கும் எப்போதும் அல்லாஹ்ரசூலின் பேச்சே இவரது மூச்சுகாவும்ஞானிகளின்ஞானஒளியிலேயே இவரது கணங்கள் என்றும் என இவரது வாழ்வு அற்புதபெருவாழ்வாகவே இருந்தது.




1998 ஆம் ஆண்டு வழுத்தூரில் நாங்கள் நடத்திய மீலாது விழாவிற்குசிறப்புப்பேச்சாளர்களில் பிரதானமானவராக ஹஜ்ரத் பெருந்தகை அவர்களை அழைக்கவேண்டும் என விரும்ப ஹஜ்ரத் பெருந்தகை  அவரக்ளோடு மிக நெருக்கம் கொண்டஎங்களூர் தர்ஹா பள்ளி இமாம் ஹஜ்ரத் ஜாபர் சாதிக் நூரி அவரகள் மூலம் முதலில்தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஹஜ்ரத் பெருந்தகை அவர்களின் சூழ்நிலைஅறிந்து கொள்வோம் என அன்றைய செல்போன் வசதிகளெல்லாம் இல்லாத அந்த நேரத்தில்இராஜகிரி பூத்திலிருந்து போன் செய்த போது தான் நான் பார்த்த அந்த நிகழ்வு என்னைமிகவும் நெகிழ்ச்சி அடைய செய்தது…. ஆம்ஹஜ்ரத் பெருந்தகை இருப்பதோ காயல் மாநகர்தர்ஹாபள்ளி இமாம் ஹஜ்ரத் ஜாபர் சாதிக் இருப்பதோ இராஜகிரி.. தொலைபேசி மணிஅடித்ததும் யாரோ எடுக்க பிறகு ஹஜ்ரத் அவர்களின் கரத்திற்கு மாறுகிறது ஹஜ்ரத்அவர்களின் குரல் கேட்டதும் உட்கார்ந்து பேசுங்கள் என சொல்லியும் கேட்காது நின்றுகொண்டே பேச ஆரம்பித்த தர்ஹா பள்ளி இமாமின் உடல் கூனி குறுகி போய் நடுக்கத்துடன்..ஜீஜீஎன மிக மரியாதையுடன் பணிவை வெளிப்படுத்திய வண்ணமாகவே இருந்தது.. பிறகுநான் கேட்டபோது தான் சொன்னார் ஹஜ்ரத் பெருந்தகை அவர்களின் சிறப்பிற்கு முன் நான்மிக எளியவன்அவர்களது பார்வை அல்ல அவர்களது வார்த்தைக்கு முன் கூட என்னால்நின்று பேச முடியாது என சொன்ன போது இவ்வளவு தூர இடைவெளியில் ஹஜ்ரத்பெருந்தகை அவர்களுக்கு எவ்வகையிலும் தெரியாத நிலையிலும் கூட இவரின் செயல் பாடுஎன்னை ஆச்சரிபப்பட வைத்தது ஹஜ்ரத் பெருந்தகையின் மீது இப்படி பலபேர்மரியாதையும்அன்பும் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவரின் கண்ணியத்தை இதிலிருந்துநாம் அளவிட்டுக்கொள்ளலாம்.

தமிழகத்து ஊர்களில் ஹஜ்ரத் பெருந்தகை செல்லாத ஊர்கள் இருக்குமா என்பது சந்தேகம்தான் அந்த அளவிற்கு எல்லா ஊர்களுக்கும் சென்று இறைப்பணி ஆற்றியுள்ளார்கள்சற்றுமுந்தைய காலங்கள் வரை வழுத்தூரின் எந்த ஒரு விழாவாக இருந்தாலும் அதில் முக்கியபேச்சாளாராக ஹஜ்ரத் பெருந்தகை அவர்கள் இருப்பார்கள்ஹஜ்ரத் பெருந்தகைஅவர்களின் பெயர் இருந்தாலே அவர்களின் பேச்சை கேட்பதெற்கென்றே மிகப்பெரும் கூட்டம்கூடும்அறிஞர்கள் என்றாலே உடன் அழைத்து வாரி அணைத்து புலங்காகிதப்படும் புண்ணியமண்ணான எங்கள் தஞ்சை மாவட்டம் வழுத்தூருக்கு இம்மாபெரும் அறிஞரின் வருகைஅடிக்கடி நிகழும் அந்த வகையில் ஹஜ்ரத் அவர்களிடம் எனக்கு நல்ல பரிச்சயம் உண்டு.எங்கள் ஊரில் ஹஜ்ரத் பெருந்தகை அவர்கள் பேசாத தெருக்களோதிக்குகளோ இல்லைஎனலாம் முக்கியமாக எங்களூர் தர்ஹா பள்ளிக்கு அப்பள்ளியின் இமாம் ஜாபர் சாதிக் நூரிஅவர்கள் அடிக்கடி அழைத்து வந்து உரைநிகழ்த்த வைத்து மக்களுக்குநல்லுணர்வூட்டுவார்கள் என்பதும் இந்த நேரத்தில் நினைவு கூற தக்கது
ஹஜ்ரத் பெருந்தகை ஒவ்வொரு ஆண்டும் கல்கத்தாவில் மாதக்கணக்கில் உர்தூ தொடர்பயான் நிகழ்த்துவார்கள்கேரளாவில் அதிகமதிகம் சென்று மக்களுக்கு மார்க்கசொற்பொழிவாற்றுவார்கள்இன்னும் கடல்கடந்து பல நாடுகள் சென்று தன் செந்தமிழ்ஆளுமையால் செம்பணி செய்தார்கள்மெய்ஞான சொரூபர்களிடம் மிகுந்த கண்ணியம்கொண்டு அவர்களின் வழிநடத்துதலில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்ட ஹஜ்ரத் பெருந்தகை அவர்கள் தங்களது எல்லா பேச்சின் தொடக்கத்திலும் அல்லாஹ்வை புகழ்ந்து,அண்ணலாருக்கு சலாம் சொல்லி ஞானியர் திலகமாம் மஹ்பூபு ஸுப்ஹானி முஹையத்தீன்அப்துல் காதிர் ஜீலானி (ரலிஅவர்களை ஷைகாகவும்வழிகாட்டியாகவும் நினைவு கூர்ந்துபின்னரே உரையை துவக்குவது இவர்களது வழக்கம்.

ஹஜ்ரத் பெருந்தகை அவர்களின் பேச்சில் தமிழ் அழகு சிந்தும்அடுக்கு தொடர்கள் முந்தும்,சிலேடைகளும்சிறப்புயர் வாக்கியங்களும் இழையோடும்பேச்சில் கண்ணியம் விஞ்சிநிற்கும்ஹுப்பே ரசூல் மிகுந்து காணப்படும்அவரது நேர்த்தியான பேச்சு பலரின்நேத்திரங்களில் நீர் கசிந்துருக வைத்திருக்கும்எதிர் தரப்பை தாக்கி பேசினாலும் அதில் ஓர்தகைமை இருக்கும் வன்மம் இருக்காதுசாத்வீகம் தான் அவர்களது பாணியே அன்றிமூர்க்கம் இவர்களது அல்லஹஜ்ரத் பெருந்தகை அவர்களின் ஒரு பேச்சை கேட்டு விட்டுஎழும் ஒவ்வொருவரும் நிச்சயம் உள்ள நிறைவுடனும்ஈமான் வழுவுடனும் மட்டுமேஎழுந்து செல்வார் என்பது திண்ணம்இன்றும் இணையத்தின் யூடியூப்-ல் நிறைய பேச்சுக்கள் மக்களெல்லாம் பயனெய்தும் வகையில் காணக்கிடைப்பது தமிழ் இஸ்லாமியர்களுக்கு ஓர் புண்ணிய சொத்தாகும். ஆகவே அன்பர்களே உங்களில் யாரேனும் இன்னும் ஹஜ்ரத் அவர்களின் பயான் நிகழ்வுகளை பதிவு செய்து இருந்தால் தயங்காமல் அதை தமிழ் கூறும் நல்லுலகிற்கு தாரைவார்த்துக் கொடுத்து பயன்யெய்துங்கள், அல்லாஹ் அருள்வான்! உங்களின் செயல் கண்டு மகிழ்வான்!!

 காயல் மஹ்லரா ஹஜ்ரத் பெருந்தகை தவமாய் மார்க்கப்பணி செய்தபதிஅதன் விளைவுதான்  இன்று மக்களால் கொண்டாடி மகிழும் ஹஜ்ரத்அப்துல் காதிர் மஹ்லரி முதல்எண்ணிரந்த உலமாக்கள் உலகத்திற்கு தீன் சேவையாற்ற புறப்பட்டிருக்கிறார்கள் என்றால்மிகையாகதுஇவர்களது தலைமையில் வருடா வருடம் காயல் மஹ்லராவில் நடக்கும்திக்ரும்புகாரி மஜ்லிஸ் விழாவும் மிகப்பிரசித்தி பெற்றவை.

21ம் தேதி வெள்ளிக்கிழமை கடையநல்லூரில் நடைபெற்ற ஹஜ்ரத் பெருந்தகையின் நல்லடகத்தில் பல்லாயிரம் பேர் கலந்து கண்ணீர் மல்க தங்களின் உஸ்தாதும்மார்க்கபோதகருமான அல்ஹாஜ் எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்களின்ஜனாஸாவில் கலந்து கொண்டு தங்களுக்கு நேர்ந்த ஈடுசெய்ய இயலாத இழப்பினை குறித்துஒருவரோடு ஒருவர் தங்களுக்கு ஆறாகுறையாக ஆகிவிட்ட நிகழ்வினை குறித்து ஆர்த்துஆர்த்து  நினைவு கூர்ந்து வருந்தி வாடினர்இந்தியாவின் பலமுனைகளிலிருந்தும்கடையநல்லூருக்கு வருகை தந்த பெரும் பெரும் மார்க்க மேதைகள்அரசியல் தலைவர்கள்,மற்றும் பொது மக்களுள் தஞ்சை மாவட்டம் எங்கள் வழுத்தூரிலிருந்து இரண்டு வேன்கள்நிறைய சென்ற  ஹஜ்ரத் அவர்களின் நேசர்களும் அடக்கம்.

முக்கியமாக நமது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர்முனீருல் மில்லத் கே.எம்.காதர் முஹைதீன் சாஹிப் சென்று கலந்து தன் நெஞ்சத்தின்இரங்களை பதிவு செய்து வந்திருப்பது குறிப்பிட தக்கது.  ஏனென்றால் ஹஜ்ரத் அவர்களின்மறைவை குறித்து மணிச்சுடரில் முனீருல் மில்லத் அவர்கள் எழுதிய மிக நீண்ட  இரங்கல்கட்டூரையை நான் படிக்க நேர்ந்தது அதில் பேராசிரியர் அவர்களுக்கு ஹஜ்ரத் அவர்களின்தாக்கம் எந்த அளவுக்கு இருந்திருக்கிறது அவர்களது பிரிவால் எந்த அளவுக்கு அவர்துயருறுகிறார் என்பதை விளங்கிக் கொண்டேன் மேலும் அக்கட்டூரையில் ஹஜ்ரத்தொடர்பான எல்லோரும் அறிந்திடாத ஆனால் அறிய வேண்டிய பல வரலாற்றுதகவல்களையும் ஹஜ்ரத் அவர்களின் மேன்மையையும் பேராசிரியர் சுட்டிக்காடியது மிகஅற்புதமாக இருந்ததுகட்டூரையில் முத்தாய்ப்பாக அரபிப்பழமொழியாம் "மவ்த்துல் ஆலிம்மவ்த்துல் ஆலம்அதாவது ஒரு அறிஞரின் மரணம் என்பது இந்த உலகமேமரணமெய்தியற்கு சமம் என்பதை சுட்டிக்காட்டி இருந்ததை ஹஜ்ரத் அவர்களுக்குபேராசிரியர் செய்த மிகப்பெரிய அரிய சமர்பணமாக கருதினேன்அதற்கு முற்றும் பெரும்தகுதியான பெருந்தகை ஹஜ்ரத் அவர்கள் என்பது பேருண்மை.

வல்ல அல்லாஹ் அவனது ப்ரியமான ஹபீப் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்மற்றும் ஞானிகளின் திலகம் ஹஜ்ரத் முஹையத்தீன் ஆண்டகை அவர்களின் பொருட்டாலும்''அல் உலமாவு வரதத்துல் அன்பியா – (சத்திய) அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகளாவர்கள்" என்ற நபிமொழிக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த அன்னாரின்ஆன்மாவை மட்டற்ற பேரமைதியிலும்மகிழ்விழும் நீந்த வைப்பானாகஹய்யுல்கய்யுமாகிய வல்லவன் முடிவற்ற பேரின்பத்தை அவர்களுக்கு வழங்குவானாகதாரணியில்அவரது ஓங்கு புகழை என்றும் நிலைக்கச்செய்வானாகஇன்னும் சங்கை படுத்துவானாக! அவரை பிரிந்து வாடும் எல்லா நெஞ்சங்களுக்கும் சப்ரன் ஜமீலாவை கொடுத்தருள்வானாக!.ஆமீன். வஸ்ஸலாம்.

அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் தகுதிமிக்க தலைமையை இழந்து வாடும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் அழகிய பொருமையையும்,ஹஜ்ரத் கிப்லா போன்ற   உயர்ந்த மாமேதைகளை இந்த சமுதாயத்துக்கு அதிகமாக  வாரி வழங்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடத்தில், சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர்,மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினரும், மனமுருகி துஆச்செய்கிறார்கள்.வஸ்ஸலாம்..

நன்றி ;-- அறிவுத்தடாகம்.

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்.