Friday, December 28, 2012

ஒடுக்கத்து புதனுடைய முக்கியத்துவம் (ஸஃபர் மாதத்தின் கடைசிப் புதன் கிழமை)




நக்சபந்திய்யா தரீக்காவின் பிரபலமான தலைவர் இமாம் ஷைகு ஃபரீதுத்தீன் (ரலி) அவர்கள் பின் வருமாறு அறிவிக்கிறார்கள்.ஸஃபர் மாதத்தின் கடைசிப்புதன் கிழமையன்று (இதை நமது மக்கள் ஒடுக்கத்துப் புதன் என்பார்கள்) உலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் வியாதிகளும், முஸீபத்துகளும் இறங்குவதாகவும்,அந்த நாளில் பின் வரும் ஸலாமத்துடைய ஏழு ஆயத்துகளையும் பீங்கான் பாத்திரத்தில் அதற்கான விஷேச மைய்யினால்) எழுதித் தண்ணீர் விட்டுக் கரைத்து குடித்தால் அந்த முஸீபத்துகளிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும் எனவும் அறிவிக்கிறார்கள்.


 (ஓதிய நீரை குடித்துவிட்டு நக்சபந்திய்யா ஷைகுமார்கள் மீது ஃபாத்திஹா ஓதிக்கொள்ளவும்) அதோடு பின் வரும் துஆவையும் ஒரு முறை ஓதுவது நல்லது.

(1) ஸலாமுன் கவ்லம் மிர் ரப்பிர் ரஹீம் (36--58)

(2) ஸலாமுன் அலா நூஹின் ஃபில் ஆளமீன் (37--79)

(3) ஸலாமுன் அலா இப்றாஹீம் (37--109)

(4) ஸலாமுன் அலா மூஸா வஹாரூன் (37--120)

(5) ஸலாமுன் அலா இல்யாஸீன் (37--130)

(6) ஸலாமுன் அலைக்கும் திப்தும் ஃபதுஹுலூஹா ஹாலிதீன் (39--73)

(7) ஸலாமுன் ஹிய ஹத்தா  மத்லயில் ஃபஜ்ர் (97--05)

அல்லாஹும்மஃஸிம்னா மினல் பலாயி வதர்க்கிஸ்சகாயி, வசூயில் கலாயி,வஷமாததில் அஃதாயி வமல்ஜூமில் வபாயி, வமவ்த்தி ஃபுஜாஅத்தின்,வமின் ஜவாலில் பரக்கத்தி,வனிஃமத்தி,வமினல் பரஸி,வல்ஜுதாமி,வல்ஜுப்னி, வல்பர்ஸாமி,வல் ஹும்மா,வஸ்ஸகீகத்தி,வமின் ஜமீயில் அம்ராழி,வல் அஸ்காமி,பிஃபழ்ளிக்க,வஜூதிக்க யாதல் ஜலாலி வல்இக்ராம்.பிரஹ்மத்திக்க யா அர்ஹமர் ராஹிமீன். வஸல்லல்லாஹு அலா சைய்யிதினா முஹம்மதின் வஅலா ஆலிஹி வஅஷ்ஹாபிஹி வஸல்லம்.வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.ஆமீன்.


நமது ஊர்களில் அரிசியைக் கரியாக்கி தண்ணீரில் குழப்பி அந்த மையைக்கொண்டு ஆயத்துக்களை நாணல் குச்சியால் எழுவது வழக்கம்.இவ்வாறு அரிசியைக் கரியாக்கி மை உண்டாக்கப்படுவதால் அதைக்குடிப்பதால் தீங்கு இல்லை.

கிராமப் புறங்களில் ஏழை மக்களிடம் பீங்கான் தட்டைகள் இருப்பது அரிது.ஆகவே சில ஆலிம்களும்,லெப்பைமார்களும் வழவழப்பாக இருக்கும் மா இலையில் அந்த ஏழு ஆயத்துக்களையும் எழுதிக் குடிக்கும் பழக்கத்தை ஏற்ப்படுத்தி இருக்கிறார்கள். மா இலை கிடைக்காவிட்டால் வழவழப்பான முந்திரி இலை போன்ற வேறு இலைகளிலும் எழுதிக் குடிக்கலாம்.

ஒடுக்கத்து புதனுடைய தினத்தில் ஸலாத்துல் இஸ்திகாரா என்ற நிய்யத்தில் நான்கு ரக்அத்துகள் தொழுவது விஷேசம்.ஒவ்வொரு ரக்அத்திலும் ஸுரா ஃபாத்திஹா ஒரு தடவையும்,இன்னாஅஉத்தைனா 17 தடவையும்,குல் குவல்லாஹு அஹத் 5 தடவையும்,குல் அஊது பிரப்பில் ஃபலக் ஒரு தடவையும், குல் அஊது பிரப்பின்னாஸ் ஒரு தடவையும் ஓதி தொழவேண்டும் 

இந்த நல்ல காரியங்களைத் தவறு என்றும், பித்அத் என்றும், விபரம் அறியாத சில முல்லாக்கள் பேசுவதும் ஒடுக்கத்துப் புதன்களிலுள்ள துஆ முதலிய நிகழ்ச்சிகளையே ஒட்டுமொத்தமாக இல்லை என்று சொல்வதும் ஸுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களிலும் கூட இதைக்கண்டித்து இமாம்கள் பயான் செய்வதும் அறியாமையாகும்.இந்த ஆயத்துக்களைத் தலையில் தேய்த்து குளிப்பது தவறு.காரணம் பரக்கத்தான தண்ணீர் கால்களில் மிதிபட வாய்ப்புண்டு



தொகுப்பு ;; அப்தலுல் உலமா அஷ்ஷெய்கு டாக்டர் தைக்கா ஷுஐபு ஆலிம் B.A.(Hons),M.A..,Ph.D.
நன்றி -- அல் முன்ஜியாத் (உள்ளம் மற்றும் உடல் நோய்களை நீக்கும் அருமருந்து)

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment