Saturday, May 31, 2014

பெரு விரல்களை முத்தமிட்டுக் கொள்ளல்


கண்ணிய மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அறிவிக்கப்படுகிறது, "கியாமத் நீதி தீர்ப்பு நாளிலே, அதானின் போது என்பெயர் கேட்டவுடன் தன் பெருவிரல்களை தன் கண்களில் ஒற்றிக் கொள்வதை வழமையாக்கிக் கொண்டவரை நான் தேடுவேன். அவரை நான் சுவனத்திற்கு இட்டுச் செல்வேன்."
[ஸலாத் அல் மஸ்'ஊதி, பாகம் - 2, அத்தியாயம் - 20]

பெரு விரல்களை முத்தமிடுவதற்கான அனுமதி

அதானின் போது பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அன்னவர்களின் திருநாமம் கேட்டவுடன் தம் பெருவிரல் நகங்களை கண்களில் ஒற்றிக் கொள்வது ஹராம் என சிலர் கூறுவார்கள். ஆனால் அஹ்லு ஸுன்னத் வல் ஜமா'அத், பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அன்னவர்களின் திருப்பெயரை அதானின் போது கேட்டவுடனேயே ஸலவாத்துக்கூறி பெருவிரல்களை முத்தமிட்டுக் கொள்வதற்கு அனுமதி உண்டு என்றுக் கூறுகிறது.

பரிசுத் மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள், "யாராயினும் ஒருவர் முஹம்மத் எனும் என் நாமத்தை தன் கரங்களால் தொட்டு அக்கரங்களை தன் உதடுகளால் முத்தமிட்டு கண்களிலும் தடாவிக் கொள்வாரேயானால், அவர் அல்லாஹ்வை( நாளை மறுமை நாளில்) அவனுடைய நேர்வழிப்பெற்ற நல்லடியார்கள் காண்பது போல் காண்பார். அவர் பாவியாக இருந்தாலுங்கூட அவருக்காகப் பரிந்துரைப்பது எனக்கு நெருக்கமாகிவிடும்."
[அந் நவாfபி'உல் அத்ரிய்யா]

சுவரக்க லோகத்தில் ஆதி பிதா ஹஸ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை காண்பதற்கு ஆவலுற்றப்போது அல்லாஹ் வஹி மூலம் அவர்களுக்கு அறிவித்தான்,
"பிற்காலங்களில் உங்களுடைய சந்ததியில் அன்னவர்கள் தெளிவாக வெளியாகுவார்கள்"
பிறகு ஹஸ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடம் தான் பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லல்லத்தைக் காண ஆவலுற்றிப்பதாகக் கூறினார்கள். அல்லாஹுத'ஆலா ஹஸ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வலது கரத்தின் ஷஹாதது விரலில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லத்தின் நூரொளியை வெளியாக்கிக் காட்டினான்.

அந்த நூரொளி அல்லாஹுதஆ'லாவை தஸ்பீஹ் செய்துக் கொண்டிருந்தது.
இந்தக் காரணத்தால்தான் இந்த விரல் கலிமா விரல் என அறியப்படுகிறது.
அத்தோடு அல்லாஹுத'ஆலா ஹஸ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இரண்டு பெருவிரல் நகங்களிலும் பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லலம் அன்னவர்களின் அழகை ஒரு கண்ணாடியில் காண்பது போல் வெளியாக்கிக் காட்டினான்.

உடனே ஹஸ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் தன் இரண்டு பெருவிரல் நகங்களையும் முத்தமிட்டு தனது முபாரக்கான கண்களில் தடாவிக் கொண்டார்கள்.

இதனால்தான் ஹஸ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இந்த ஸுன்னாவை அவர்களின் 
பரம்பரையினர் பற்றிப்பிடித்துக் கொண்டனர்.
இப்படி ஜிப்ரீல் அமீன் அலைஹிஸ்ஸலாம் பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களிடம் அறிவித்தப்போது, அன்னவர்கள் கூறினார்கள்,
" ஒருவர் அதானின்போது என் பெயர் சொல்லக் கேட்டு தன் பெருவிரல்நகங்களை முத்தமிட்டு கண்களிலும் தடாவிக் கொள்வாரேயானால் அவர் ஒருபோதும் குருடாகமாட்டார்."

தfப்ஸீர் ரூஹுல் பயான்

(அன்னவர்களுக்குரிய கண்ணியத்தைக் கொடுக்காததாலேயே இன்று அகக்கண் குருடர்களையும் அறிவுக்கண் குருடர்ளையும் ஏராளமாக சந்தித்துக் கொண்டிருக்கிறோம்)

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.

சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment