Monday, August 1, 2016

மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் !!!


காயல்பட்டணம் மொகுதூம் தெருவில் ஹிஜ்ரி 1232 முஹர்ரம் பிறை 18 (கி.பி.1816) செவ்வாய்க் கிழமை அன்று வெள்ளை அஹ்மது லெப்பை ஆலிம் அவர்களின் மகனாக, மாதிஹுர் ரஸூல் சதக்கத்துல்லாஹில் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிச வழியில் மகான் இமாமுல் அரூஸ் செய்யித் முஹம்மது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்தார்கள். இவர்களது இரண்டாம் வயதில் இவர்களின் குடும்பம் கீழக்கரை சென்று குடியேறியது.

ஞான மேதை கீழக்கரை தைக்கா ஸாஹிபு ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மாணவராக விளங்கும் பேற்றினை பெற்றார்கள். தமது பத்தாம் வயதில் திருக்குர்ஆனை மனனம் செய்து, பின் இஸ்லாமியக் கலை ஞானங்களை கற்றுத் தேர்ந்தனர். தமது ஆசிரியரின் மகளான சாரா உம்மாளை மணமுடித்தார்கள். அதனால் மாப்பிள்ளை என்று அழைக்கப்பட்டதால் மாப்பிள்ளை லெப்பை ஆலிமாக-இமாமுல் அரூஸாக அழைக்கப்பட்டார்கள்.

 தமது மாமனாரிடம் பைஅத்தும், கிலாபத்தும் பெற்றார்கள். அரூஸிய்யா மத்ரஸாவை அமைத்து அதில் நூலகம் ஒன்றை நிறுவினார்கள். இவர்களுக்கு கல்வத் நாயகம், சாகுல் ஹமீது என்ற ஜல்வத் நாயகம் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இரு மகன்கள் பிறந்தார்கள்.

இலங்கையிலும், தமிழகத்திலும் இவர்கள் ஆற்றிய மார்க்க சேவை மிக மகத்தானது. இலங்கையில் 355 பள்ளிவாசல்களையும் தைக்காக்களையும் நிறுவினர். இலங்கையில் போர்ச்சிக்கீசியர்கள் மார்க்கத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை தகர்த்து மார்க்கத்தை புணருத்மானம் செய்ய இவர்கள் ஆற்றிய பங்கு மிகவும் மகத்தானது.

மஙானீ, பத்ஹுத் தைய்யான், ஙனீமத்துஸ்ஸாலிஹீன்,மின்ஹத்து ஸரன்தீப், ஹதிய்யா மாலை, ஹத்யா ஷரீப், ராத்திபத்துல் ஜலாலிய்யா போன்ற எண்ணற்ற கிரந்தங்களை நமக்குத் தந்துள்ளார்கள்.

தங்களது 84 ம் வயதில் ரஜப் பிறை 5 ஹிஜ்ரி 1316 சனிக்கிழமை 
மாலை (கி.பி. 1898)யில் மறைந்தார்கள். இவர்களின் 
அடக்கஸ்தலம் கீழக்கரை தைக்காவில் உள்ளது.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

0 comments:

Post a Comment