Monday, August 29, 2016

மலேசியாவில் இப்னு தைமியாவின் நூல்கள்,கருத்துக்களுக்குத் தடை !!!


மலேசியாவில் பஹாங் மாநிலத்தில் இப்னு தைமியாவின் 
கிதாபுகளையோ, கொள்கைகளையோ மேற்கோள் 
காட்டி பேசுவது ஹராம்.
.
இவ்வாறு அம்மாநிலத்தின் முஃப்தி டத்தோ ஸ்ரீ அப்துல் ரஹ்மான்
 ஒஸ்மான் அவர்களும் மலேசிய இஸ்லாமிய அமுலாக்க துரையினர், 
மற்றும் மற்ற மாநிலத்தின் மார்க்க அறிஞர்களின் ஆய்வு முடிவில் 
இப்னு தைமியாவின் தீவிரவாதக் கருத்துக்களை கொண்ட 
எந்த ஒரு கிதாபுகளை உபயோகித்து பேசக்கூடாது 
என்று பத்வா வெளியிடப்பட்டுள்ளது.
.
இது மட்டுமல்லாமல் சமீபத்தில் நடந்த தீவிரவாததிற்கு எதிரான 
விழிப்புணர்வு மக்கள் சந்திப்பில், தீவிரவாதக் குற்றப் புலனாய்வு 
உயர் அதிகாரி டத்தோ அயுப் கான் மைடின் பிச்சை அவர்கள் 
கூறும்போதும் இதையே வலியுறுத்தி பேசினார். 
.
இதுவரையில் மலேசியாவில் தீவிரவாதப் போக்கில் சென்று 
பிடிபட்டு கைதானவர்கள் அனைவருமே இப்னு தைமியாவின் 
கொள்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்களே.
.
இப்னுதைமியா போன்ற கடும்போக்கு கொண்ட வஹாபிகள் 
மிகவும் அச்சுருத்தலுக்கு உரியவர்களே என்றும் பேசப்பட்டது.
.
மேலும் முஃப்தி அப்துர் ரஹ்மான் ஒஸ்மான் அவர்கள் 
கூறும்போது மலேசியா காலங்காலமாகவும் இனி எந்தக் 
காலத்திலும் அஷ் அரியா, மாத்துரிதியா 
(ஸுன்னத் வல் ஜமாஅத்) கொள்கையிலேயே 
அமல் செய்யக் கூடியவரகள். 
.
அதனால் இப்னு தைமியா போன்ற வழிகேடுகளையும், 
தீவிரவாதக் கொள்கைகளையும் பரப்பக்கூடிய எந்த 
கருத்துக்கும் அனுமதி கிடையாது என்றார்.
.
மேற்காசிய நாடான மெஸ்ஸிர், ஜோர்டான் மற்றும் 
அல்ஜீரியா போன்ற நாடுகளில் ஏற்கனவே இப்னு தைமியா 
போன்ற வழிகெட்ட கொள்கைகளை கொண்ட பலருடை 
நூல்கள் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
.
இந்த உம்மத்தில் பிளவுகளை ஏற்படுத்தி குழப்பத்தை 
உண்டாக்கியவர் இந்த வஹாபிகள் என்பதை 
மக்கள் விளங்கி விலகிக் கொள்ளவேண்டும் 
என்றும் வலியுறுத்தினார்.
.
முஃப்தி அவர்களின் இதற்கு முந்திய 
எச்சரிக்கைகளும் ஃபத்துவாவும் கீழே..

https://m.facebook.com/story.php…
https://m.facebook.com/story.php…
.
நன்றி: Aziz Ahamed Bin Habib.

வெளியீடு ;-  மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

0 comments:

Post a Comment