Thursday, August 25, 2016

ஏர்வாடி ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம் ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வரலாறு -- முதல் பாகம்.

ஏர்வாடி ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்த ஏர்வாடி ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்,நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் 18- வது தலைமுறையில் மதீனாவில் பிறந்த ஏர்வாடி ஷஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹிஅலைஹி அவர்கள், சுமார் 3000 தொண்டர்களுடன் இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்தார்கள்.

அக்காலத்தில் இந்தியாவின் நுழைவாயிலாக இருந்த சிந்து மாகாணத்தில் தங்கினார்கள். அங்கு தம் தொண்டர்களை பல பிரிவாகப் பிரித்து சிந்து மாகாணத்தின் பொது மன்றங்கள், சந்திப்புகள், சந்தைகள், மக்கள் ஒன்று கூடும் இடங்களெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்ய அனுப்பி வைத்தார்கள். இவர்களின் அன்பான அழைப்பை ஏற்று பலர் இஸ்லாத்தை ஏற்றனர்.அங்கிருந்து சிறு குழுவுடன் குஜராத் சென்று அங்கும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள்.


அங்கெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்த போது அங்குள்ள அரசர்களால் இழைக்கப்பட்ட இடையூறுகள் ஏராளம்.அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு இஸ்லாத்தை வளர்த்தார்கள்.பிறகு குஜராத்திலிருந்து புறப்பட்டு இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காக தொண்டர்கள் புடைசூழ கன்னனூர், ஆலப்புழை, கொச்சி, கொல்லம்,கண்ணியாகுமரி வழியாக காயல்பட்டிணம் வந்தனர்.

அந்நேரத்தில் நெல்லைப் பகுதியை ஆட்சி செய்த குலசேகரப்பாண்டியன் தனது பகுதிக்கு வந்து தங்கியிருப்பவர்கள் யார் என்று அறிய தூது அனுப்பினான்.அப்போது இப்றாஹீம் ஷஹீத் பாதுஷா அவர்கள் தான் பெருந்திரளாக நாடு பிடிக்க வரவில்லை என்றும்,இஸ்லாமியப் பிரச்சாரம் செய்யவே வந்ததாக தெறிவித்தனர்.பின்பு அங்கிருந்து தொண்டர்கள் புடைசூழ மதுரையை நோக்கி வந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்ட போது, மதுரை மன்னன் திருப்பாண்டியன் அதை ஏற்காமல் இவர்களுடன் போர் செய்ய தயாரானான்.

இப்போரில் திருப்பாண்டியன் தோல்வியுற்று குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்று தஞ்சம் புகுந்தான்.இப்றாஹீம் ஷஹீத்
பாதுஷா அவர்கள் மதுரைக்கு முழுப்பொறுப்பேற்று ஆட்சி நடத்தினார்கள்.13 ஆண்டு கால ஆட்சியில் தென்னிந்தியா முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள்.



பின்பு திருப்பதியில் தஞ்சம் புகுந்த திருப்பாண்டியன் பெரும்படையோடு தமிழகம் நோக்கி வர, ஷஹீத் அவர்களின் படையில் பெரும்பாலானோர் மக்கா நகருக்கு திரும்பியிருந்தார்கள். எனவே எளிதாக திருப்பாண்டியன் மதுரையை கைப்பற்றி பின்பு ஷஹீத் இப்றாஹீம் பாதுஷா அவர்கள் தங்கியிருந்த இராமநாதபுரத்திற்கு வந்து ஷஹீத் அவர்களை எதிர்கொண்டான். மீதமிருந்த சிறுபடையுடன் போரில் இறங்கினார்கள்.

உச்சகட்டமாக ஷஹீத் அவர்களின் குதிரையின் கால்களை பாண்டியமன்னன் வெட்ட, பதிலுக்கு அவனின் தோள் புஜங்களை ஷஹீத் அவர்கள் வெட்டினார்கள்.மயங்கி விழுந்த அவன் பின்பு தெளிவடைந்து எதிர்பாராத விதமாக ஈட்டியால் ஷஹீத் அவர்களின் மார்பைத் தாக்க,


ஷஹீத் இப்றாஹீம் பாதுஷா அவர்கள் வீரமரணம் அடைந்தார்கள்.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன். இவர்களின் அடக்கஸ்தலம் ஏர்வாடியில் உள்ளது.

ஏர்வாடி தர்ஹாவில் வாழும் இப்புனித ஷுஹதாக்களை நாம் முறையாக ஜியாரத் செய்து அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுக்கொள்வோமாக ஆமீன்.. 


தகவல்- காயல்பட்டிணம் முஅஸ்கருர் ரஹ்மான் 
அரபுக்கல்லூரியின் 15-வது ஆண்டு மலர்) வஸ்ஸலாம்..

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

0 comments:

Post a Comment