ஹிப்ரு மொழியைச் சார்ந்த இச்சொல்லின் பொருள் பத்தாவது நாள் என்பதாகும். யூதர்களின் 'திஷ்ரி'மாதத்தின் பத்தாம் நாளிற்கு இந்தப் பெயர் இருந்தது.யூதர்களின் 'திஷ்ரி' மாதம் பத்தாம் நாளிற்கு இந்தப் பெயர் இருந்தது. யூதர்களின் 'திஷ்ரி; மாதம் பத்தாம் நாளும், அரபிகளின் 'முஹர்ரம்' மாதம் பத்தாம் நாளும் இணையாக வருவதாகும். அல்லாஹ் குறிப்பிட்ட நாளிலேயே அடுத்தடுத்துத் தன் பத்துக் கற்பனைகளை வெளிப்படுத்தியதால்'ஆஷூரா' நாள் என்று பெயர் பெற்றதாக மெய்நிலை கண்ட ஞானி முஹிய்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கீழ்கண்டபடி அறிவிக்கிறார்கள். 1. ஹள்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நீண்டகால பச்சாதாப வேண்டுகோள் ஏற்கப்பட்டதும், 2. ஹள்ரத் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சுவனப் பெருவாழ்வு கிட்டியதும், 3. ஆறு மாத காலம் பிரளயத்தில் சிக்குண்டு தவித்த ஹள்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மரக்கலம் ஜூதி மலை ஓரம் ஒதுங்கியதும், 4. ஹள்ரத் இபுறாகீம் அலைஹிஸ்ஸலாம் பிறந்ததும், அல்லாஹ் அவர்களைத் தன் கலீபாவாக ஏற்றதும், நம்ரூதுடைய நெருப்புக் குண்டம் அவர்களுக்குச் சுவனப் பூங்காவாக மலர்ந்ததும், 5. ஹள்ரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் பிழை பொறுக்கப்பட்டதும், 6. ஹள்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இழந்த ஆட்சியை மீண்டும் அடையப் பெற்றதும், 7. சோதனை வயப்பட்ட ஹள்ரத் அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிணிகள் அனைத்தும் நீங்கி நலம் பெற்றதும், 8. ஹள்ரத் மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர்களது சமூகத்தைச் சார்ந்த பனீஇஸ்ராயீல்களையும் கொடுங்கோலன் பிர் அவ்னது பிடியிலிருந்து விடுவிப்பதற்காக கடல் பிளந்து அவர்களை விடுவித்ததும், அவர்களை பின்தொடர்ந்து சென்ற பிர்அவ்னும் அவனது பெரும்படையும் அதே கடல் நீரில் மூழ்கியதும், 9. கடலின் ஆழத்தில் கடும் இருட்டில் மீனின் வயிற்றில் நாற்பது நாட்கள் கிடந்து அழுது புலம்பிய ஹள்ரத் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் மீண்டும் மீனின் வயிற்றிலிருந்து வெளியானதும், 10 கொலையாளிகளிடமிருந்து ஹள்ரத் ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் காத்ததும் இந்தப் புனிதமான பத்தாவது நாளாகிய ஆஷூராவுடைய நாளிலாகும். இம்மாதம் பத்தாம் நாளில்தான் கர்பலா என்ற நகரில் பெருமானாரின் பேரரான இமாம் ஹுஸைன்ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஜனநாயகத்திற்காக நடந்த போரில்ஷஹீதாக்கப்பட்டார்கள்.
ஆஷூரா தினம் அன்று செய்ய வேண்டிய அமல்கள்.
அஷூரா நாளுக்கு முன்தினம் பிறை 9> ஆஷூரா நாள் பிறை10 அல்லது பிறை 10 மற்றும் பிறை 11ஆகிய இரு தினங்கள் நோன்பு வைப்பது சுன்னத்தாக்கப்பட்டுள்ளது. யாராவது ஒரு மனிதர் ஆஷூரா தினத்தில் பின்வரும் திக்ரை 70 தரமும் அதன் கீழ் தரப்படும் துஆவை ஏழுதரமும் ஓதினால் அவருக்கு அந்த வருடம் முழுவதும் மரணம் சம்பவிக்காது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நாட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தரக்கூடிய வல்லமை மிக்க நாயனே! கிருபையுள்ளஅல்லாஹ்வே! எங்களுடைய நாட்ட தேட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவாயாக!தீமைகள், பொல்லாங்குகள் அனைத்தையும் அகற்றி நிவர்த்தி செய்கின்ற நாயனே! எங்கள் தீமைகளையும், பொல்லாங்குகளையும் நிவர்த்தி செய்தருள் புரிவாயாக! மேலும் இவ்வுலகத்தின் ஆபத்து, தீங்குகளை விட்டும், பயங்கரச் சோதனைகளை விட்டும், பலாய் முஸீபத்துகளை விட்டும், பீடை, பிணி, வியாதிகளை விட்டும்எங்களை காப்பாற்றியருள்வாயாக! மேலும் மறு உலக வாழ்வின் பயங்கரங்களை, அபாயங்களை,தண்டனைகளை, அமளிகளை விட்டும் எங்களை பாதுகாத்து கொள்வாயாக! என்றென்றும் நிலைத்திருப்பவனே! மகத்துவம் மிக்கவனே! சங்கைமிக்க தயாபரனே! தீர்ப்பு நாளின் அதிபதியே! உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவிதேடுகிறோம். எங்கள் இந்த துஆக்கள் அனைத்தையும் இரு லோகத்திற்கும் சர்தாரும்,ஈருலக இரட்சகரும், அனைத்துலகுக்கும் அருட்கொடையாக வந்துதித்தரஸூல்மார்களுக்கெல்லாம் தலைவரும்,நபிமார்களுக்கெல்லாம் அதிபதியும், நபிமார்களில் முத்திராங்கமாகத் தோன்றிய எம்பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொருட்டினாலும், அவர்களுடைய அருந்திருப்பேரர்கள், ஷஹீதுக்கெல்லாம் தலைவராகிய இமாம் ஹுஸைன், இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்களின் பொருட்டினாலும் நீ கிருபையுடன் கபூல் செய்து ஏற்றுக் கொள்வாயாக! அங்கீகரிப்பாயாக! இறைவா! எங்கள் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இரு கண்மணிகளான அவ்விரு பேரர்களையும் மேலும் சிறப்பாக்கி ,கண்ணியப்படுத்தி வைப்பாயாக! ஆமீன்.
ஆஷூரா நாள் தொழுகை.
முஹர்ரம் மாதம் பத்தாம் நாளன்று குளித்து சுத்தமான பின்னர் காலை பத்து மணி முதல் பதினோறு மணிக்குள்ளாக நான்கு ரக்அத் நபில் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஹம்து ஸூரா ஓதிய பின்னர் குல்ஹுவல்லாஹு அஹது சூராவை பதினைந்துதடவை ஓதித் தொழ வேண்டும். தொழுத பின்னர் பாத்திஹா கூறி> சூராக்கள் ஓதி இந்த துஆ ஆஷூராவை ஓத வேண்டும். இதன் தவாபு அனைத்தையும் செய்யிதினா இமாம் ஹஸன்>செய்யிதினா இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவருக்கும் ஹதியாச் செய்ய வேண்டும். (அன்று தஸ்பீஹ் நபில் தொழுகையையும் தொழுது பெரும் நன்மை ஈட்டலாம்) பிறகு பின்னவரும் துஆவை 7 தடவை ஓதிக் கொள்ள வேண்டும்.
''நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததும் நிகழ்வுகளுக்கு தேதி குறிப்பிடும்படி உத்தரவிட்டார்கள்.நபியவர்கள் ரபீவுல் அவ்வல் மாதத்தில் மதீனா வந்தார்கள்.மக்கள் நபியின் மதீனா வருகையிலிருந்து தேதி குறித்தனர். முதன் முதலாக பதிவுகளில் தேதி குறித்தவர் யமனில் இருந்த யஃலா பின் உமைய்யா வாகும் '' (முஸ்தத்ரக் ஹாகிம் ; 479/3 முர்ஸலான அதாவது அறிவிப்பாளர் வரிசைத்தொடரில் நபித்தோழர் பெயர் கூறப்படாத -- ஹதீஸ் அறிவிப்பாளர் -- அம்ரு பின் தீனார்) இஸ்லாத்தில் முதன் முதலாக (தபால் மற்றும் அரசு சார்ந்த -- சாராத பதிவுகளுக்கு) தேதி குறிக்க உத்தரவிட்டவர் கலீபா உமர் (ரலி) அவர்களாகும்.'' எனக்கூறப்படுகிறது. (தாரிகுத்தபரி 3/2) பிரபலமான இந்தக்கூற்றுப்படி நாயகம் (ஸல்) அவர்கள் மறைந்து ஆறு வருடம் கழித்து ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் (கி.பி.639) இஸ்லாமிய ஆண்டை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் உணரப்பட்டது.நிறைவான இஸ்லாமியச் சகாப்தம் மலருவதற்கு முன்பு,அரபிகள் தங்களது ஆண்டுகளைத் தங்கள் பொது வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சியிலிருந்து கணக்கிட்டு வந்தார்கள். அனுமதி ஆண்டு, நில அசைவு ஆண்டு, யாணை ஆண்டு என பல ஆண்டுகளை நடைமுறையில் வைத்திருந்தனர். பின்னர் இரண்டாம் கலிபா உமர் (ரலி) அவர்கள் குறிப்பு ஒன்றை தயாரித்து அதில் ஷஃபான் மாதம் என்று குறிப்பிட்டார்கள்.இதனை பின்னர்தான் பார்ப்பின் எந்த ஆண்டின் ஷஃபான் மாதம் என்று விளங்குவது? என தனக்குத்தானே கேள்விக் கேட்டுக் கொண்டார்கள்.இந்த நிலையில், கலீபாவிடமிருந்து தங்களுக்கு தேதி குறிப்பிடாமல் கடிதங்கள் வருகிறது.என மாநில ஆளுனர்களிடமிருந்து முறையீடுகள் வந்தன.குறிப்பாக அபூ மூஸல் அஷ்அரி (ரலி) அவர்கள் தேதி குறிப்பிடாத தாங்களின் கடிதம் கிடைத்தது'' என நறுக்கென்று எழுதினார்கள்.இதனைத்தொடர்ந்து கலீபா அவர்களின் அவையில் ஆலோசனை நடைபெற்றது.இஸ்லாமிய ஆண்டை ஆரம்பிப்பது என முடிவானது.எதனை அடிப்டையாக வைப்பது என்பதில் பல்வேறு கருத்துக்கள் ஆராயப்பட்டது. நபி(ஸல்) பிறந்தது,நபித்துவம் கிடைத்தது முதலிய பலதையும் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக நபி (ஸல்) அவர்கள் திரு மக்காவிலிருந்து திரு மதீனாவுக்கு புலம் பெயர்ந்து வந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹிஜ்ரத்தை அடிப்படையாகக்கொண்டு இஸ்லாமிய ஆண்டை ஆரம்பிப்பது என ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.ஏனெனில் நபித்துவம் பிறப்பின் மூலம் தொடங்கினாலும், அது துலங்கியது ஹிஜ்ரத்தின் மூலமேயாகும்.நபித்துவம் தொடங்கியது மக்காவில். ஆனால் அது தொடர்ந்தது மதீனாவில். இறைத்தூது வெளிப்பட்டது மக்காவில். ஆனால் அது வெளிச்சத்தில் வந்ததும்,வளர்ச்சி பெற்றதும் மதீனாவில்தான். இந்த வகையில் இஸ்லாம் புத்துணர்ச்சியோடு புதுப்பொழிவு பெற்று,உலகமெல்லாம் பரவியதற்கு காரணம் ஹிஜ்ரத்.ஏகத்துவம் இந்த ஜெகமெங்கும் ஜொலிக்க காரணமான ஹிஜ்ரத், நபி (ஸல்) அவர்களின் சரித்திரத்தில் திருப்பு முனையாக அமைந்த அழகான அற்புதமான ஒரு நிகழ்வு.இஸ்லாத்தின் குரல் தரையில் கூட ஒலிக்க விடாமல் ஒடுக்கப்பட்டபோது,அது அகிலமெங்கும் ஜெட் வேகத்தில் பறந்து சென்று பரப்ப இறக்கை கட்டிக் கொடுத்தது ஹிஜ்ரத்தாகும். ஹிஜ்ரத்திற்கு முன்னர் சொற்பமாக இருந்த முஸ்லிம்கள்,ஹிஜ்ரத்திற்குப்பிறகு பல்கிப்பெருகினர். ஹிமுவில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்த முஸ்லிம்கள்,ஹிஜ்ரி 6-- ல் நபி (ஸல்) அவர்களோடு உம்ராவுக்கு வந்தவர்கள் 1400-- பேராகவும், ஹிஜ்ரி 8 -- ல் மக்கா வெற்றிக்கு வந்தவர்கள் 12,000 பேராகவும்,ஹிஜ்ரி 10--ல் நபியோடு இறுதி ஹஜ்ஜூ செய்த முஸ்லிம்கள் 1,24,000 மாகவும் உயர்ந்தார்கள். இந்த நபித்தோழர்கள் மூலம் உலகமெங்கும் இஸ்லாம் பரவி இன்று உலக மக்கள் தொகையில் 2.1 PILLIAN (210-- கோடி) முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்றால் இவ்வளவு பெரிய வெற்றிக்கு வித்திட்டது ஹிஜ்ரத் அல்லவா! அதனால் தான் இன்று உலகில் நடைமுறையில் உள்ள ஆண்டு அடிப்படையில் ஹிஜ்ரத்தைப்போல அழுத்தமான தாக்கத்தை தரக்கூடியது எதுவும்மில்லை என வரலாற்று ஆய்வாளர்கள் வியக்கின்றார்கள். ஹிஜ்ரத் என்பது அச்சமுள்ள குஃப்ரு (இறை மறுப்பு) ஸ்தானத்தை விட்டு புலம்பெயர்ந்து,அச்சமற்ற ஆதரவுள்ள தலத்திற்கு சென்று விடுவதற்குப்பெயர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபித்துவத்தின் 13 -- வது ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதம் முதல் தேதி வியாழக்கிழமை மக்காவிலிருந்து ஹிஜ்ரத் புறப்பட்டார்கள்.ரபீவுல் அவ்வல் 12 --ஆம் நாள் (28 ஜூன் கி.பி.622) திங்கள் கிழமை லுஹர் நேரம்,தங்களது 53 --வது வயதில் மதீனா நகர் வந்துசேர்ந்தார்கள். ஸவ்ர் குகையிலிருந்து பெருமானார் (ஸல்) அவர்கள் புறப்பட்டதிலிருந்து 69--நாட்கள் முன்பாயிருந்த முஹர்ரம் மாதம் முதல் நாளே ஹிஜ்ரி ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது.காரணம் ஹஜ்ஜு முடிந்து வாணிபம் தொடங்கப்பெறும் மாதமாக முஹர்ரம் இருந்தது.இதல்லாமல் முஹர்ரம் மாதம் பல்வேறு சிறப்புகளைப்பெற்று திகழ்கிறது. (1) ஷஹ்ருல்லாஹ் அல்லாஹ்வுடைய மாதம் (2) ரமலானுக்குப்பிறகு நோன்பு பிடிக்க சிறந்த மாதம்.(நபிமொழி-- முஸ்லிம் 1163) (3) முஹர்ரமில் ஒரு நாள் நோன்பு பிடித்தால் ஒரு நாளுக்கு முப்பது நாள் (நன்மை) உண்டு (நபிமொழி -- தபரானி மஜ்மவுல் ஹைஸமி --190/3) (4) முஹர்ரமில் ஒரு சமூகத்தாருக்கு தௌபா (மன்னிப்பு) வழங்கினான்.மற்ற சமூகத்தாருக்கும் (கேட்டால்) இதில் தௌபா வழங்க இருக்கிறான். (திர்மிதி-- 741) (5) இதில் தான் கஃபாவின் திரைத்துணி மாற்றி புதியது அணிவிக்கப்படும். (தாரிகுத்தபரி -- 4/2) ஹிஜ்ரத் என்பது இடம் பெயர்வது மட்டுமல்ல.ஷிர்க் (இறைவனுக்கு இணை வைப்பு) குஃப்ரு (இறை நிராகரிப்பு) ஃபிஸ்க் (பாவ காரியங்கள்) அனைத்தையும் விட்டு விலகி விடுவதுதான் உண்மையான ஹிஜ்ரத். '' அல்லாஹ் விலக்கிய அனைத்தையும் விட்டு விலகி விடுவதே ஹிஜ்ரத்'' என்ற (புகாரி --10) நபிமொழியை ஹிஜ்ரத் சிந்தனையாக உங்களின் உள்ளங்களில் விதைத்து எல்லா மக்களுக்கும் எனது இனிய மஅல் ஹிஜ்ரா புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.அல்லாஹ்வின் பேரருள் நம்மனைவர் மீதும் பொழியட்டுமாக! ஆமீன்!!
என்றும் தங்களன்புள்ள.
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )
வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.
ஓதுபவரை பார்த்து, ஷைத்தான் வருடம் முழுக்க நான் பாடுபட்டு வழிகெடுக்க நான் மிகவும் சிரமப்பட்டேன்.ஒரு நொடியில் எனது முயற்சிகளனைத்தையும் நாசமாக்கிவிட்டானே என்று சொல்கிறான். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.
'' சூஃபி ஹளரத்'' என்றும்,சேது நாட்டின் தீன் முத்து என்றும் புகழ் பெற்ற இவர்களின் இயற்பெயர் அஹ்மது இப்றாஹீம் என்பதாகும்.இவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டையில் கி.பி.1882 ல் பிறந்தார்கள்.
தந்தை பெயர் ; சீனி சையீது. பதிமூன்று வயதிலேயே வாணிபத்தின் பொருட்டு மலேயா ( மலேசியா ) அனுப்பி வைக்கப்பட்ட இவர்கள்,வாணிபத்தில் விருப்பமில்லாது ஊர் திரும்பி,கொழும்பு ஆலிம் சாஹிபின் ஆதரவில்,அதிராம்பட்டணம் சென்று மார்க்க கல்வி பயின்றார்கள்.
பின்னர் வேலூர் மதரஸா அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தில் ஓதித் தேர்ந்தனர்.அங்கேயே ஆசிரியராக பணியாற்றுமாறு, அக்கல்லூரியின் முதல்வர் இவர்களிடம் கூற,தாம் பிறந்த ஊர் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறிச் சித்தார் கோட்டைக்கு வந்த இவர்கள். அங்கு சின்னப்பள்ளி வாயிலுக்கு அண்மையில்
'' மதரஸா மல்ஹருஸ் ஸூஅதா '' என்ற பெயருடன் ஒரு கல்விக்கூடத்தை நிர்மாணித்து மார்க்கப் பணிபுரிந்து வந்தனர்.
'' யா அல்லாஹ்.'' '' யா ரஹ்மான்,'' '' யா ரஹீம்.'' என்ற இறைவனின் திருப் பெயர்களை அடிக்கடி கூறி வந்த இவர்கள், '' தவகல்து அலல்லாஹ் என்பதை அடிக்கடி மொழிந்து வருமாறு நோயாளர்களிடம் பணிப்பதோடு,நோய் வராமல் தடுக்க அதுவே சிறந்த மருந்து என்று ஏனையோரிடமும் கூறுவர்.இவர்கள் தம் ஊரில் பல சீர்திருத்தங்களை செய்தனர்.திருமணத்தை வெள்ளியன்று ஜூம்ஆவிற்குப்பின் பள்ளியில் வைத்து நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு இவர்கள் கூறிய சுருக்கமான வாசகம் '' பள்ளி,வெள்ளி,பகல் '' என்பதாக இருந்தது.
இல்லை என்பார்க்கு இல்லை என்னாது வழங்கி வந்த இவர்களின் வரவு,செலவு புத்தகத்தில் '' அல்லாஹ்விற்காக அழகிய கடன்கள் '' என்ற தலைப்பில் பல்லாயிரக் கணக்கான ரூபாய்கள்,ஏழைப் பெண்களின் திருமணத்திற்காகவும்,பயணம் செல்பவரின் கப்பல் கூலிக்காகவும்,ஏழைகளின் பசிப்பிணி நீக்குவதற்காகவும் செலவழிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.ஏழை,எளியவர்கள் தலையில் சுமந்து விற்கும் பொருள்களை மொத்தமாக வாங்கிப் பலருக்கும் பங்கிட்டுக் கொடுத்து மகிழ்வார்கள்.
மக்களிடையே நீதிபதி போன்றிருந்து அவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தார்கள் இவர்கள். ஷாதலியா தரீக்காவைப் பின்பற்றி வந்த இவர்கள்.அந்தத் தரீக்காவின் திக்ரு முறைகளை நியமமாகப் பின்பற்றி வரும் வழக்கத்தையும் சித்தார் கோட்டையில் ஏற்படுத்தினார்கள்.
இவர்கள் 1967 செப்டம்பர் 29 வெள்ளிக்கிழமை வைகறையில் காலமானார்கள்.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.இவர்களின் நல்லடக்கத்தில் கலந்து கொண்ட ஷைகு நாயகம் அவர்கள். '' நான் என் கண்ணால் கண்ட இரு வலிமார்கள்,பல்லாக்கு வலியுல்லாஹ்வும்,அஹ்மது இப்ராஹீம் வலியுல்லாஹ்வும் ஆவர் '' என்று கூறினார்கள். இவர்களின் புனித அடக்கஸ்தலம் சித்தார் கோட்டை சின்னப் பள்ளியின் வடபுறத்தில் இருக்கிறது.வஸ்ஸலாம்...
நூல் ஆதாரம் ; இஸ்லாமியக் கலைக் களஞ்சியம், நான்காம் பாகம்,பக்கம் -185.
வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.
இராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டை,சித்தாரியா அரபுக் கல்லூரியின் நிறுவனர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் I.சைய்யிது முஹம்மது புஹாரி ஆலிம் ஃபாஜில் மன்பயீ ஹழரத் அவர்கள், 20-09-2016 இன்று தன்னுடைய 20 வது புனித ஹஜ்ஜை நிறைவேற்றி ஊர்வந்த அவர்கள், இன்று காலை சுப்ஹு தொழுகைக்குப்பிறகு, பெரிய பள்ளிவாசலில் சிறப்பு பயான் செய்து அனைவருக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்தார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மௌலானா மௌலவி அல்ஹாஜ் I.சைய்யிது முஹம்மது புஹாரி ஆலிம் ஃபாஜில் மன்பயீ ஹழரத் அவர்களுக்கு இன்னும் பல ஹஜ்ஜுகள் செய்யக்கூடிய நற்பாக்கியத்தை வழங்குவானாக ஆமீன். நன்றி ;- செய்யிது இப்றாஹீம் ஆசிரியர்.
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள்.