Friday, September 30, 2016

சேது நாட்டின் தீன் முத்து சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின் 49 வது நினைவு தினம் மிகச்சிறப்பாக நடைபெற்றது !!


பெரிய ஆலிம் 49 வது நினைவு தினம் - வீடியோ



முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! 
முஸல்லியன்! வமுஸல்லிமா !!!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

'' சூஃபி ஹழரத் '' என்றும் '' சேது நாட்டின் தீன் முத்து 
'' என்றும் புகழ்பெற்ற, சித்தார் கோட்டை பெரிய ஆலிம் 
ஷாஹிப் அவர்களின் 49 வது நினைவு தினம்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 
29-09-2016 வியாழக்கிழமை காலை 10-30 மணியளவில்,
சித்தார்கோட்டை,சின்னப் பள்ளிவாசலில்,மிகச்சிறப்பாக 
நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.




                       
ஆரம்பமாக பெரிய ஆலிம் சாஹிப் அவர்களுக்கு 
குர்ஆன் ஷரீஃப் ஓதப்பட்டது, பின்பு மௌலிது ஷரீஃபும்,
மலை பைத்துகளும்,ஓதப்பட்டு,உலக 
மக்களின் நலனுக்காகவும்,ஊர் மக்களுக்காகவும் 
சிறப்பு துஆச்செய்யப்பட்டது.







.'' சூஃபி ஹழரத் '' என்றும் '' சேது நாட்டின் தீன் முத்து '' 
என்றும் புகழ் பெற்ற சித்தார் கோட்டை பெரிய 
ஆலிம் ஷாஹிப் அவர்களைப்பற்றி, சித்தார்கோட்டை 
ஜாமிஆ மஸ்ஜிதின் தலைமை இமாம் மௌலானா 
மௌலவி அல்ஹாஃபிழ் காரீ அப்துல் காதிர் மஹ்ழரி 
ஹழரத் சிறப்பு பயான் செய்தார்கள்.




இறுதியாக சித்தார்கோட்டை ஜாமிஆ சித்தாரிய்யா 
அரபுக் கல்லூரியின் பேராசிரியர்,மௌலானா மௌலவி 
அபூதாஹீர் அரூஸி ஃபாஜில் ஜமாலி ஹழரத் 
அவர்கள் சிறப்பு துஆ ஓதினார்கள்.



இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில், சுற்றுப்புற 
உலமாப் பெருமக்களும்,ஏராளமான முஸ்லிம்களும் 
கலந்து கொண்டு அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும் 
அருளையும் பெற்றுக்கொண்டனர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் 
ஜீரணிகள் வழங்கப்பட்டது.

விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும்,சித்தார் கோட்டை 
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினர் மிகச்சிறப்பாக 
ஏற்பாடு செய்திருந்தார்கள்.இது போன்ற சிறப்பு மஜ்லிஸ்கள், 
கியாம நாள் வரை உலகம் முழுவதும் நடைபெற, 
அல்லாஹ் பேருதவிசெய்வானாக ஆமீன்.வஸ்ஸலாம்.

தகவல் ;- மௌலவி சுலைமான் 
அலி ஹைரி ஆலிம் வாழூர்.

அவ்லியாக்களை ஞாபகம் செய்யும் இடத்தில் 
அல்லாஹ்வின் பேரருள் இறங்குகிறது. ( நபிமொழி )

வெளியீடு - மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் சித்தார் கோட்டை கிளை.

0 comments:

Post a Comment