Friday, January 23, 2015

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) வாழ்வும் வாக்கும் !!!!


ஷைக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) இஸ்லாம் 
கண்ட மிகப்பெரிய  சீர்திருத்த வாதி.
முஸ்லிம் சமுதாயம் அறிவு வழி பயணித்தாலும் ஆன்மீக வழியில் சென்றாலும் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டிலிருந்து வழி தவறிவிடக்கூடாது என்பதை அழுத்தமாக போதித்தவர்.

இறைச்சிந்தனையே வாழ்வாக கொண்டுநடப்பதில் முன்னோடி
 உலக் ஆசாபாசங்களையே வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து விடாமல் இறைச்சிந்தனையோடு மக்கள் வாழ்வதற்காக காதிரிய்யா தரீக்காவின் முறையை கொடுத்தவர்.

பலவேறு ஷைகுகளின் வழிகாட்டுதல் படி உருவான் பக்தி மார்க்கமான தரீக்காக்களை (ஷாதுலிய்யா நக்ஷபந்திய்யா சிஸ்திய்யா) ஒருங்கிணைத்தவர்.

ஆன்மீகம் என்பதற்கு சரியான இலக்கணம் கொடுத்தவர்.
கேட்போரை அப்போதே ஈர்த்துவிடும் அற்புதமான ஈர்ப்பு சக்திமிக்க சொற்பொழிகளால் எராளமான குற்றவாளிகளை திருத்தினார்.. 50 ஆயிரம் பேர் இஸ்லாத்தை தழுவ காரணமானவர்..

ஏராளமான அற்புதங்களுக்கு சொந்தக்காரர்
                        كان   كثير الكرامة

அவர் மீது நிறைய மரியாதை வைத்திருக்கிறோம்.
வழக்கம் போல அவரைப் பற்றி நமக்கு தெரியாது.

இன்றைய ஈரானில் காஸ்பியன் கடலை ஒட்டியிருக்கிற ஜீலான் என்ற நகரத்தில் நீப் பகுதியில்  ஹிஜ்ரி 470 ல் (கிபி 1077) அப்துல் காதிர் ஜீலானி பிறந்தார்.

அது ஹிஜ்ரி 5 ம் நூற்றாண்டு. இஸ்லாமிய அரசாங்கத்தை அப்பாஸிய கலீபாக்கள் சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்த காலம். முஸ்லிம்கள் அரசியலிலும் அறிவியலிலும் உலகின் முதலிடத்தில் இருந்தார்கள்.

அப்துல் காதிர் ஜீலானியின் தந்தை அபூசாலிஹ் மூஸா அவர்களின் வமிசத்தொடர் ஹஸன் ரலி அவர்களுடன் முடிகிற்து. ஜீலானி ரஹ் அவர்களுக்கும்பாத்திமா ரலி அவர்களுக்குமிடையே 11 தந்தையர் உள்ளனர்.

                            ( التاريخ الكبير، تأليف: الحافظ الذهبي. )

அவரது தாய் உம்முல்கைர் அவர்களுடைய வமிசம் தொடர் ஹுசைன் ரலி அவர்களுடன் சேருகிறது. இவ்வாறு தாய் தந்தை இருவரது சங்கிலித்தொடர்பும் பெருமானார் (ஸல்) அவர்களுடன் சேருகிறது.
அப்துல் காதிர் ஜீலானியின் குடும்பம் சாலிஹான குடும்பமாக இருந்தது.அவரது தந்தையும் பாட்டனார் அப்துல்லாஹ் பின் யஹ்யாவும் இறைச்சிந்தனையில் முன்னோடிகளாகவும் மக்களுக்கு வழிகாட்டுபவர்களாகவும் இருந்தார்கள். அப்துல் காதிர் ஜீலானியின் தந்தையின் சகோதரி ஆயிஷா வை முன் வைத்து மழை வேண்டாப்பட்டால் மழை பொழியும்.

ஆரம்ப கல்வியை தன்னுடைய குடும்பத்தாரிடமிருந்து கற்ற அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தன்னுடைய 18 வயதில் மேற்படிப்புக்காக இராக்கிலிருக்கிற பக்தாதுக்கு வந்தார்கள்.

பக்தாதில்  أبو سعيد المُخَرِمي  யின் மதரஸாவில் சேர்ந்தார். அங்கு திறன்மிக்க மாணவராக விளங்கினார்.  இளம் வயதிலேயே இதயங்களுக்குள் ஊடுறுவும் சொற்பொழிவுத்திறமை அவரிடமிருந்தது.

அவருடைய சொற்பொழுவின் ஆகர்ஷனத்தைப் அறிந்த உஸ்தாது أبو سعيد المُخَرِميஅவர்களே தன்னுடைய மானவருக்கு மதரஸாவிலேயே தொடர்ந்து சொற்பொழிவாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். பாபுல் அஸ்ஜ் என்ற இடத்திலிருந்த அந்த மதரஸாவில்  வெள்ளி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் காலையிலும் செவ்வாய்க்கிழமை மாலையிலுமாக வாரத்தில் மூன்று நாட்கள் அன்னாரின் பிரசங்கம் தொடர்ந்தது. அந்தப் பிரசங்கங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. பெரிய அளவில் மக்கள் திரண்டனர். பிரமுகர்கள் அமைச்சர்கள் சுல்தான்கள் அக்கூட்டங்களுக்கு வந்தனர்.

அந்தப் பிரசங்கங்கள் மக்களுக்கு அறிவுரை சொல்லும் வகையிலும் உள்ளச் சுத்த்தை தூண்டும் வகையிலும் அமைந்தன, அல்லாஹ் அன்னாருக்கு கொடுத்த அந்த மாபெரிய ஆற்றல் மக்கள் இதயங்களை ஊடுறுவிச் சென்றது.
அக்கிரமம் செய்த அதிகாரிகள் மனம் மாறினர். திருடர்களும் குற்றவாளிகளும் மனம் திருந்தினர். சுமார் 1 இலட்சம் தீயோர் மனம் திருந்தினர். சுமார் 50ஆயிரம் பேர் இஸ்லாமை தழுவினர்.

30 வருடங்கள் கல்வி கற்பதில் செலவிட்ட ஜீலானி ரஹ் அவர்கள்
أبو سعيد المُخَرِمي அவர்களின் வபாத்திற்கு பிறகு அந்த மதரஸாவிற்கு பொறுப்பேற்ற ஜீலானி ரஹ் அவர்கள் பொறுப்பேற்ற ஆசிரியப்பணியிலும் பத்வா வழங்கும் பணியிலும் ஈடுபட்டார்கள். பல பகுதிகளிலும் வந்து குவிந்த மாணவர்களால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டபோது அரசர்கள் பொதுமக்கள் எல்லோருமாக சேர்ந்து அக்கம் பக்கத்து நிலங்களை வாங்கி அந்த மதரஸாவை பொரிது படுத்தினர்.

ஜீலானி ரஹ் அவர்கள் அன்றையை உலகின் சகல கலைகளையும் கற்றுத்தேர்ந்திருந்தார். கிராஅத் தப்ஸீர் ஹதீஸ் பிக்ஹ் மொழி உள்ளிட்ட 13கலைகளில் அவர் வல்லுனராக திகழ்ந்தார். ஷாபி ஹன்பலி மத்ஹபுகளின் படி அவர் பதவாக்கள் வழங்குவார், அந்த பத்வாக்கள் இராக் அறிஞர்களை ஆச்சரியப்படுத்தும் வண்ணம் அமைந்திருந்தது.

பக்தாதிலிருந்து திடீரென் வெளியேறிய ஜீலானி ரஹ் அவர்கள் பல வருடங்கள் இராக்கின் வனாந்தரங்களில் சுற்றினார், இந்த உலகின் ஈடுபாடுகளை விட்டு தனித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவரை அவ்வாறு செல்லத் தூண்டியது.  பிறகு மக்களின் நிலையையும் தன்னுடைய கடமையையும் உணர்ந்த ஜீலானி ரஹ் அவர்கள் மீண்டும் பக்தாதுக்கு திரும்பி தன்னுடைய பொறுப்பை கவனிக்க ஆரம்பித்தார்கள்.

பெருமானார் (ஸல்) அவர்களது கனவில் தோன்றி மக்களின் சீர்திருத்தப் பணிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்கள் என்றும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது.

பணிகள்.;-
அனைத்து வகையான கலைகளையும் ஜீலானி ரஹ் கற்றிருந்த்தனால் அவர்களது சொற்பொழிவுகளும் அறிவுரைகளும் அனைவரையும் சென்றடைந்தது.

அவரது சொற்பொழுவுகள் உடனடித் தாக்கத்தை ஏற்படுத்துபவையாக இருந்தன.ஏராளமானோர் நேர்வழி பெற்றனர்.அவர் வாழ்ந்த காலத்தில் முஸ்லிம்கள் அரசியல் அரங்கிலும் அறிவியல் துறையிலும் முதன்மையாக இருந்தாலும் உள் நாட்டு நிலவரம் குழப்பமானதாக இருந்த்து, மக்களின் ம்னோ நிலையிலும் ஈமானிய நிலைப் பாடு குறைந்து – உலகியல் மோகம் அதிகரித்திருந்த்து. புகழ் ஆடம்பரம் அதிகாரத்தை பெரிதாக கருதும் போக்கு மிகைத்திருந்தது.

ஜீலானி ரஹ் தன்னுடைய சொற்பொழிவுகள் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். மக்களது சிந்தனையை இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்ப்டையான இறைச் சிந்தனையின் பால திருப்புவதில் பெரும் வெற்றி கண்டார்கள். இந்த ஆன்மீக மாற்றத்தை தேடி குதிரைகள் ஒட்டகைகளில் பயணம் செய்து மக்கள் வந்தனர். ஒரு சம்யம அவரது உரையை கேட்க 90ஆயிரம் பேர் பக்தாதில் கூடினர்.

இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை பாதைக்கு மக்களை பெருமளவில் அழைத்து வந்த புரட்சிகரமான மாற்றங்கள் நிக்ழந்த்தால் முஹ்யித்தீன் மார்க்கத்திற்கு உயிரூட்டியவர் என்று சிறப்பு பெயரிட்டு அழைக்கப்பட்டார்கள்.
அன்னாரது உபதேசங்கள் நன்மையை ஏவி தீமையை தடுப்பதில் சக்திமிக்கதாக அமைந்த்திருந்தது.

ஒரு நாள் தனது உரையில் அவர் கூறினார் :

أنت معتمد عليك ، وعلي الخلق ، ودنانيرك ودراهمك ، وعلي بيعك وشرئك ، وعلي سلكان بلدك ، كل من إعتمدت عليه فهو إلهك ، وكل من خفته ورجوته فهو إلهك،  كل من رأيته في الضر والنفع ، ولم تر أن الحق يجري ذلك علي يديه قهو إلهك :  الفتح الرباني  - المجلس
நீ உன்னை நம்புகிறாய! படைப்புக்களை நம்புகிறாய்! உனது தீனார்களையும்திர்ஹம்களையும் நம்புகிறாய்! உனது கொடுக்குதல் வாங்குதலை நம்புகிறாய்!உனது ஊரின் சுல்தானை நம்புகிறாய்! யார் மீது நீ பிடிமானம்கொண்டிருக்கிறாயோ அது தான் உனது கடவுள். யாரை நீ பயப்படுகிறாயோ!ஆசைப்படுகிறாயோ அது தான் உனது கடவுள். அல்லாஹ் தான்எல்லாவற்றையும் நட்த்துபவன் என்று எண்ணாமல் நன்மையும் தீமையும் யார்வழியாக ஏற்படுகிறதோ அதை நீ நம்பினால் அது தான் உன்னுடைய கடவுள்.

ஜீலானி ரஹ் அவர்களின் மற்றொரு நாள் இவ்வாறு கூறினார். . .

 كل من يري الضرر والنفع من غير الله
 فليس بعبد له ، هو عبد من رأي ذلك له : الفتح الرباني
அல்லாஹ் அல்லாத மற்ற எதனிடமிருந்து நன்மையும் தீமையும் ஏற்படுகிறது என்று கருதுகிற எவனும் அல்லாஹ்வின் அடிமை அல்ல.அவன் எதை நம்புகிறானோ அதன் அடிமையாவான்.

மற்றொரு நாள் இந்த உலக ஆசையில் திழைப்பதை இப்படி எச்சரித்தார்.
ويحك ! الدنيا في اليد يجوز ، في الجيب يجوز ، إدخارها لسبب وبنية صالحة يجوز ، أما في القلب فلا يجوز. وقوفها علي الباب يجوز ، اما دخولها إلي وراء الباب فلا . و لا كرامت لك . الفتح الرباني  - المجلس 51

உனக்கு நாசமே! இந்த உலகம் உனது கையில் இருக்கட்டும். உனது பையில் இருக்கட்டும். ஒரு தேவைக்காக அல்லது நல்ல நோக்கத்திற்காக அதை சேர்த்து வைத்தாலும் கூடும். ஆனால் இதயத்தில் இடமளிக்க கூடாது. அது வீட்டு வாசலில் நிற்கட்டும். அதை தாண்டி வரக்கூடாது. அப்படி வந்தால் உனக்கு எந்த மரியாதையும் இல்லை.

ஷைக் அவர்களின் இந்த உரை வீச்சுக்கள் ஆயிரம் வருடங்களுக்கு அப்பால் இப்போது கேட்கிற போது கூட சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன. நேரில் இது எத்தகையை விளைவுக்ளை ஏற்படுத்தியிருக்கும் கற்பனை செய்து பாருங்கள்.
மக்கள் இந்தப் பேச்சுக்கு கூட்டம் கூட்டமாக திரண்டார்கள். அவரது வாயிலிருந்து உதிரும் முத்துக்களுக்காக காத்திருந்தார்கள். திருந்தினார்கள்.திருத்தினார்கள்.

தன்னுடைய உரையில் அரசர்கள் அதிகாரிகளை ஜீலானி விட்டுக் வைக்கவில்லை. தவறு எங்கு கண்டாலும் கண்டித்தார்.
ஜீலானி ரஹ் அரசர்கள் அரசர்களுக்கும் அமைச்சர்களுக்கும் நீதிபதிகளுக்கும்பிரமுகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பொது மேடையில் நன்மையை எடுத்துச்சொல்பவராகவும் தீமையை தடுப்பவராகவும் இருந்தார் என இப்னு கஸீர்(ரஹ்) கூறுகிறார்.

ஒரு நாள் தன்னுடையை உரையில் இப்படி கர்ஜித்தார்.

إني أقول لكم الحق ، ولا أخاف منكم ولا أرجوكم ، أنتم واهل الأرض عندي كالبق ، لأني أري  النفع و الضرر من الله – لا منكم . المماليك والملوك عندي سواء (  الفتح الرباني  - المجلس الواحد والخمسون )
“நான் உங்களுக்கு சத்தியத்தை சொல்கிறேன். நான் உங்களை பயப்படவும்.

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment