Tuesday, March 3, 2015

மலேசியாவில் பல ஆண்டுகள் உஸ்தாதாக பணியாற்றிய மேலப்பாளையம் K.O.முஹம்மது காஸிம் தாவூதி ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்கள் மலேசியாவில் மறைவு !!!!


 மலேசியாவில் பல ஆண்டுகள் உஸ்தாதாக பணியாற்றிய 
பசீர் லெப்பை தெரு,மேலப்பாளையம்,  மௌலானா அல் ஹாஃபிழ்
K.O.முஹம்மது காஸிம் தாவூதி ஃபாஜில் தேவ்பந்தி 
ஹஜ்ரத் அவர்கள், மலேசியாவில் 27-02-2015 அன்று,தாருல் 
ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்  (28.02.2015) அன்று மாலை அஸர் தொழுகைக்குப்பிறகு மலேசியாவில்  நடைபெற்றது .


ஹஜ்ரத் அவர்களுக்காக  01-03-2015 அன்று ஞாயிற்றுக்கிழமை 
மாலை 4-30-மணியளவில்  கோலாலம்பூர் மஸ்ஜித் 
இந்தியாவில், குர்ஆன் திலாவத் மஜ்லிஸும் அஸர் 
தொழுகைக்கு பிறகு துஆ மஜ்லிஸும், மற்றும்
இரங்கல் கூட்டமும் நடைபெற்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும்   சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர்   பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்!


உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்...


வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

0 comments:

Post a Comment