Tuesday, March 3, 2015

புவனகிரி மார்க்க மேதை அஷ்ஷைஹ்,அல்லாமா முர்ஷீத் பாக்கீ பில்லாஷா ஹஜ்ரத் கிப்லா அவர்கள் மறைவு !!!!


பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
புவனகிரி  மார்க்க மேதை அஷ்ஷைஹ்,அல்லாமா முர்ஷீத் 
பாக்கீ பில்லாஷா ஹஜ்ரத் கிப்லா அவர்கள் 16.02.2015 
திங்கள்கிழமை அன்று, புவனகிரியில்,தாருல் ஃபனாவை
 விட்டும் தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள். 
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்  17.02.2015 
செவ்வாய்க்கிழமை புவனகிரியிலுள்ள, மதரஸா 
பாக்கீ பில்லாஷா வளாகத்தில் நடைப் பெற்றது.

புவனகிரியில் மறைந்த மார்க்க மேதை அல்லாமா 
முர்ஷீத் பாக்கீபில்லாஷா ஹஜ்ரத் நல்லடக்கத்தில் 
பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்று துஆ செய்தனர் .

பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்ற அன்னாரின் ஜனாஸா தொழுகையினை மௌலானா கலிமுல்லாஷா 
ஹஜ்ரத் நடத்தி வைத்தார்கள். ,
மௌலானா முஹினுத்தீன் ஹசன் ஹஜ்ரத் துஆ செய்தார்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் 
பேராசிரியர் கே .எம்.காதர் மொகிதீன் ,
மாநில துணைத் தலைவர் மௌலானா 
தளபதி.ஏ .ஷபிகுர் ரஹ்மான் ஹஜ்ரத் ,
தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் 
ஏ .இ .எம் .அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் ,
மௌலானா முஹம்மது சாலிஹ் ஆகியோர் 
மறைந்த மார்க்க மேதை மௌலானா அவர்களின் 
சேவைகளைப் பற்றி பேசினார்கள்.

இந்நிகழ்ச்சியில் ராத்திப் ஜலாலியா சர்வதேச அமைப்பாளர் 
தைக்கா லெப்பை , மௌலானா ஷப்பீர் அலி பாக்கவி ஹஜ்ரத் ,
மௌலானா நூருஸ்ஸலாம் ,
லால்பேட்டை ஜெ .எம் .ஏ .அரபிக்கல்லூரி முதல்வர் 
மௌலானா ஏ .நூருல் அமீன் ஹஜ்ரத் ,
நீடுர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா முதல்வர் 
மௌலானா முஹம்மது இஸ்மாயில் ஹஜ்ரத்,
அய்யம்பேட்டை மௌலானா முஹம்மது ஜியவுத்தின் ஹஜ்ரத் ,
ஆரணி மௌலானா சூஃபி ஹஜ்ரத் ,
பாண்டிச்சேரி மௌலானா நிஜாமிஷா ஹஜ்ரத்,
சிதம்பரம் மௌலானா இஸ்மாயில் நாஜி ,
மௌலானா முஹைதீன் பாவா  மற்றும்,
தமிழகமெங்குமிருந்தும் சமுதாயப் பிரமுகர்கள் 
தரீக்காவின் ஷெய்குமார்கள் ஜமாஅத்தார்கள் 
பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்றனர் 

எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும்   சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர்   பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்!

உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்...


வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

0 comments:

Post a Comment