பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சமஸ்த கேரள ஜம்இய்யத்துல் முஅல்லிமீன் தலைவர்
உஸ்தாத் M.A. அப்துல் காதிர் முஸ்லியார் அவர்கள்
18-02-2015 அன்று தாருல் ஃபனாவை விட்டும்
தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
முழு கேரளத்திலும், தமிழகத்தில் பல இடங்களிலும்
மக்தப் மதரஸாக்களை ஒரே தலைமையின்
கீழ் கொண்டு வந்த மாபெரும் சேவையை செய்தவர்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்!
உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்...
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.
0 comments:
Post a Comment