Tuesday, June 24, 2014

மலேசியத் திருநாட்டில் 56- வது திலாவத்துல் குர்ஆன் போட்டி


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்,
வளம் கொழிக்கும் மலேசியத் திருநாட்டின் தலைநகர்
கோலாலம்பூரில் உள்ள P.W.T.C அரங்கத்தில் அனைத்துலக
56-வது திருக்குர்ஆன் ஓதும் போட்டியின் இறுதி நிகழ்ச்சி (21-06-2014)  
சனிக்கிழமை மிக விமர்ச்சயாக நடந்து முடிந்தது.

 இதில் நாற்பது நாடுகள் பங்குபெற்றன. உலகத்திலேயே
தொடர்ந்து 56 வருடங்கள் திருக் குர்ஆன் ஓதும் போட்டி
மலேசியாவில் தான் நடந்து வருகிறது அல்ஹம்துலில்லாஹ்.
இதில் ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு வருகிறார்கள்.


ஆண்களில், மலேசியாவைச் சார்ந்த காரீ,முதலிடத்தையும்,
துருக்கியைச் சார்ந்த காரீ இரண்டாவது இடத்தையும்,
இந்தோனேசியாவைச் சார்ந்த காரீ மூன்றாவது இடத்தையும்,
புருனையைச் சார்ந்த காரீ நான்காவது  இடத்தையும்,
ஈரானைச் சார்ந்த காரீ ஐந்தாம் இடத்ததையும் 
பெற்றுக்கொண்டார்கள். 



பெண்களில் மலேசியாவைச் சார்ந்த காரீயா
முதலிடத்தையும்,   பிலிப்பைன்ஸைச் சார்ந்த காரீயா
இரண்டாவது இடத்தையும், புருனையைச் சார்ந்த காரீயா
மூன்றாவது இடத்தையும், தாய்லாந்தைச் சார்ந்த காரீயா
நான்காவது இடத்தையும், சிங்கப்பூரைச் சார்ந்த காரீயா
ஐந்தாவது இடத்தையும், பெற்றுக்கொண்டனர். 




இதில் திருக்குர்ஆனை மனப்பாடமாக ஓதும் போட்டியில் ஆண்களில் மலேசியாவைச் சார்ந்த காரீ,முதலிடத்தையும்,சவூதி அரேபியாவைச் சார்ந்த காரீ இரண்டாவது இடத்தையும்,கத்தார் நாட்டைச் சார்ந்த காரீ மூன்றாவது இடத்தையும்,பெற்றுக்கொண்டனர்.

பெண்களில் மலேசியாவைச் சார்ந்த காரீ,முதலிடத்தையும், துனீசியாவைச் சார்ந்த காரீ இரண்டாவது இடத்தையும்,செனகல் நாட்டைச் சார்ந்த காரீ மூன்றாவது இடத்தையும்,பெற்றுக்கொண்டனர்.


இதில் பல நாடுகளின் காரீகள் நடுவர்களாக கலந்து கொண்டார்கள். 



இந்த நிகழ்ச்சி மலேசிய மன்னர் தலைமையில்,பிரதமர் மற்றும் 
அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்றது.


மலேசியத் தலைவர்கள்  இந்த திருக்குர்ஆன்  போட்டியை,
இஹ்லாசுடன் கியாமத் நாள் வரை தொடர்ந்து நடத்துவதற்கு,
ரப்புல் ஆலமீன் தவ்ஃபீக் செய்வானகவும் ஆமீன். வஸ்ஸலாம்..

வெளியீடு-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment